சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மில்லில் தீ விபத்து: --பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

Added : மார் 18, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மில்லில் தீ விபத்து: --பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்


பல்லடம், பல்லடம் அருகே, தனியார் மில்லில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது; இதில், பல நுாறு டன் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாயின.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சித்தம்பலம்புதுாரில், சுலோச்சனா காட்டன் மற்றும் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் நுால் தயாரித்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.நுால் தயாரித்த பின் மீதமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், அதே பகுதியில், 1.5 ஏக்கரில் கொட்டப்பட்டிருந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த பகுதியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.பிளாஸ்டிக் கழிவுகள் மளமளவென எரிய துவங்கியதால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. வானில், பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் பரவியது. ஐந்து தீயணைப்பு வண்டி களை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட வீரர்கள், பல மணி நேரம் போராடி, தீயை
கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்துக்கான காரணம் பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
18-மார்-201711:49:02 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நான் பத்தவைக்க வில்லை, பீடி/சிகரெட் தான் பத்த வைத்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X