சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.வி.க., பிரமுகர் கொலை கோவையில் ஒருவன் சரண்

Added : மார் 18, 2017 | கருத்துகள் (2)
Share
Advertisement


கோவை, கோவை, தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் பாரூக், 31; திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில், போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பின், மொபட்டை எடுத்து கொண்டு, உக்கடம் கழிவு நீர் பண்ணை ரோட்டில் சென்றார்.
அப்போது, ஒரு கும்பல் அவரை விரட்டி, கழுத்தை அறுத்தும், கத்தி யால் பல இடங்களில் குத்தியும் கொலை செய்துவிட்டு, தப்பியது.
விசாரணையில், பாரூக் இறுதியாக பேசிய தொலைபேசி எண், வேலுார், வாலாஜா பகுதியைச் சேர்ந்தது என, தெரிந்தது.
இச்சூழலில், கொலை தொடர்பாக, கோவை ஜே.எம்., 5 கோர்ட்டில், நேற்று மாலை போத்தனுாரைச் சேர்ந்த அன்சார்த், 31 என்பவன் சரணடைந்தான்.
கொலை செய்யப்பட்ட பாரூக், தீவிர நாத்திகவாதியாக இருந்துள்ளார். 'பேஸ்புக்' போன்ற சமூகவலைதளங்களில் தன் கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதற்கு, சிலரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மாதம், பாரூக்கின், 4 வயது குழந்தையின் பிறந்த நாள் விழா நடந்தது.
அதில், 'கடவுள் இல்லை' என்ற வாசகத்தை எழுதி, அவரது குழந்தை பிடித்திருந்த பதாகையுடன், போட்டோ போடப்பட்டது. இதன்பின், சிலர் அவரை மிரட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இக்கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
18-மார்-201710:11:46 IST Report Abuse
ganapati sb ஆத்திகம் பேசும் உரிமை இருப்பது போல நாத்திகம் பேசுவதற்கும் உரிமை இருக்கிறது. என்ன நம்பிக்கை உள்ளவர்களை குறிப்பிட்டு வெறுப்பை வளர்ப்பது போல பேசாமால் தத்துவமாய் பேச வேண்டும் . ஜனநாயக நாட்டில் கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர வன்முறை தவறு. மனிதர்கள் ஒழுங்காக அமைதியாக இணக்கமாக ஆனந்தமாக இருக்கவே கடவுள் தத்துவம் பயன்பட வேண்டுமே தவிர வன்முறைக்கல்ல. காரணம் எதுவாக இருந்தாலும் தனி மனிதர்கள் அல்லது குழுக்கள் செய்யும் கொலை அல்லது வன்முறை கண்டிக்க தக்கது.
Rate this:
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
18-மார்-201707:33:25 IST Report Abuse
Amirthalingam Sinniah நாத்திகவாதியை கொல்லத்தான் வேண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X