சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்காக மறியல்: விராலிமலையில் 51 பேர் கைது

Added : மார் 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 ஜல்லிக்கட்டுக்காக மறியல்: விராலிமலையில் 51 பேர் கைது


புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை யில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள், போலீஸ் வாகனம், போலீசார் மீது, கல் வீசி தாக்கிய, 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதன்படி, விராலிமலை பகுதி மக்கள், அம்மன் குளத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகள், வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென அம்மன் குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திர மடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து, விராலிமலை சோதனைச் சாவடி
பகுதியில் சாலை
மறியலில் ஈடுபட்டனர்.
பின், அங்கு சென்ற போலீசார், பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். மேலும்,
மறியலில் ஈடுபட்ட பொது மக்களில் ஒரு பகுதியினர், திருச்சி - -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் சென்று பேச்சு நடத்தினர்.
இதில், 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பேச்சு நடத்தியும், பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும், 4 கி.மீ., வரை அணிவகுத்து நின்றன.
இந்நிலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால், பொதுமக்கள் சிதறி ஓடினர். அப்போது சிலர், போலீசார் மீது கற்களை வீசினர்.
இதில், சாலையில் நின்ற பஸ்கள் உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவத்தால் விராலிமலை
பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக, நேற்று, 51 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், இவர்கள் மீது, 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதற்றம் நிலவி வருவ தால், 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
18-மார்-201710:38:32 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் /பிரிவினர் நடத்தி கொண்டிருந்த விளையாட்டு, அதனை அழிக்க வேண்டும் என்று வெளிநாட்டு பீட்டாவினர் செய்யும் சதி என்று முகநூலில் படித்ததாக நினைவு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X