சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாளாளர் கொலைக்கு ரூ.1 கோடி பேரம் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

Added : மார் 18, 2017
Share
Advertisement


திருப்பத்தூர், திருப்பத்தூரில், பள்ளி தாளாளரை தீர்த்துக்கட்ட, ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி, 25 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்த கல்லூரி மாணவர்கள் உட்பட, எட்டு பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, மொளகரம்பட்டியைச் சேர்ந்தவர், பள்ளி தாளாளர் வெங்கடேசன், 42; சமீபத்தில், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.திருப்பத்தூர் அடுத்த, அவ்வை நகரைச் சேர்ந்த, ரவுடி ராஜனுக்கு, 30, இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது. தலைமறைவாக உள்ள அவனை தேடி வரும் நிலையில், அவனது கூட்டாளியான நவீனை, 24, போலீசார் கைது செய்தனர்.விசாரணைதொடர் விசாரணையில், வெங்கடேசன் நடத்திய பள்ளியின், முன்னாள் தாளாளர் அன்புவின்
குடும்பத்தினர், கொலை யில் சம்பந்தப்பட்டிருப்பதுதெரிய வந்தது.அன்புவின் மகன்களான, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் ஆகாஷ், 21, சென்னையில், பி.டெக்., படிக்கும், 18 வயது மாணவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.பழிக்கு பழிஅவர்கள் அளித்தவாக்குமூலம்:எங்கள் தந்தை அன்புவை கொன்றவெங்கடேசனை கொலை செய்ய முடிவு செய்தோம். திருப்பத்தூர், அவ்வை நகரைச் சேர்ந்த, ரவுடி ராஜனை நாடினோம். அவன், கூட்டாளிகளான சதானந்தம், திவான்ஆகியோரை தொடர்பு கொள்ளும்படி கூறினான்.அதன்படி, வெங்கடேசனை கொலை செய்ய, ஒரு கோடி ரூபாய், சதானந்தம், திவான் ஆகியோர் கேட்டனர். நாங்கள் ஒப்புக் கொண்டு, முன்பணமாக, 25 லட்சம் ரூபாய் கொடுத்தோம். அவர்கள், மேலும் சிலருடன் சேர்ந்து, வெங்கடேசனை கொன்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆகாஷ், அவனது தம்பி உட்பட, எட்டு பேரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சதானந்தம், ராஜன்ஆகியோரை தேடி
வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X