சென்னையில் நடந்த, 'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் கூட பங்கேற்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
அறப்போர் மக்கள் இயக்கம் சார்பில், 'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று(மார்ச், 19) நடந்தது. இதில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் உட்பட, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பங்கேற்க வரும்படி, கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சசிகலா அணியை சேர்ந்த, 122 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பொதுமக்களுடன், அவர்கள் நேரடியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு எம்.எல்.ஏ., கூட பங்கேற்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
- நமது நிருபர் -