10 points behind Ilayaraja - SPB clash | இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் -
10 முக்கிய அம்சங்கள்

சென்னை:தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான காப்பி ரைட்ஸ் பிரச்னையை பற்றியது தான். இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ilayaraja, spb, இளையராஜா, எஸ்பிபி.,இளையராஜா - எஸ்.பி.பி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும் எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளை துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுப்பற்றிய 10 முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்...
01. இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என்று பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் இருவருக்கும் கடந்த 6 மாத காலமாகவே ஒரு வித பனிப்போர் நடந்து வருகிறது என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
02. கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசை கச்சேரிக்கு 7 லட்சம் வாங்கி கொண்டிருந்த எஸ்பிபி., 20 லட்சம் தந்தால் தான் வருவேன் என அதிரடியாக தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்னை என்கிறார்கள்.


03. இதுஒருபுறம் இருக்க இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனைஅவர்களுக்கிடையேயானது அல்ல, அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை என்று கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளார். அந்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
04. காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.
05. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும்.
06. எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும்இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'? என்ற கேள்வி எழுகிறது.

Advertisement


07. இந்த நோட்டீஸ், வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என்று இளையராஜா தரப்பு கூறிவிட்டது கவனிக்கத்தக்கது.
08. தனது பாடல்களை பாட பணம் தர வேண்டும் என்று இளையராஜா கேட்பது சாதாரண மக்களை பாதிக்காதா என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. காப்புரிமையை பற்றியெல்லாம் பேசினால் இளையராஜாவின் இசையை கேட்பது குறைந்துவிடும் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்.
09. தனக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை தான் மட்டும் அனுபவிக்காமல், அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு தருவதாக இளையராஜா கூறியிருக்கிறார்.
10. ராயல்டி கலாச்சாரத்தை ஏதோ இளையராஜா மட்டும் தான் கேட்கிறார் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. உண்மையை சொல்லப்போனால், ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கான ராயல்ட்டியை பெற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


Advertisement

வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhimarao Vadhirajan - Bangalore,இந்தியா
21-மார்-201722:50:34 IST Report Abuse

Bhimarao Vadhirajanமார்க்கெட் போய்விட்ட நிலையில், தன் பழைய பாடல்களின் காப்புரிமையை ராஜா நாடுவதில் தவறில்லையே

Rate this:
Muralikrishnan.G - chennai,இந்தியா
21-மார்-201722:16:12 IST Report Abuse

Muralikrishnan.Gயாரு எழுதிய பாட்டை யாரு வேனா பாடலாம். காத்துக்கு வேலி போட முடியாது

Rate this:
Rukmangathan - chennai,இந்தியா
21-மார்-201721:44:38 IST Report Abuse

Rukmangathanகாப்புரிமை யாருடையது.... இசைக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு இசையமைத்த இசை அமைப்பாளருடயதா... இல்லை இசை அமைப்பாளரை அந்த வேலைக்காக பணிக்கு அமர்த்தி பணத்தை முதலீடு செய்த தயாரிபாளருடயதா? பாடலாசிரியருக்கும், பாடியவருக்கும் பங்கு உண்டா? இசையமைப்பாளருடயது என்றால், இசை வெளியீட்டு நிறுவனத்திற்கு பாடல்களை இசையமைப்பாளர் தானே விற்க வேண்டும்? தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனம் எப்படி விற்கிறது? சரி, ஐந்து வருடத்திற்கு பாடல்களுடைய காப்புரிமையை இசை வெளியீட்டு நிறுவனம் பெற்றுகொண்டால், ஐந்து வருடத்திற்கு பிறகு பாடல்கள் யாருக்கு சொந்தம்? முதலீடு செய்த தயரிப்பாளருக்கா அல்லது இசை அமைப்பாளருக்கா? ஒப்பந்தம் எப்படி போடப்பட்டுள்ளது? பாடல் எப்படி உருவாகிறது? தயாரிப்பாளர் பணம் கொடுத்து, அதை இசை அமைப்பாளர், பாடலாசிரியருக்கும் மற்ற கலைங்கர்களுக்கும் பிரித்து கொடுத்து, லாபத்தை பெற்றுக்கொண்டு தானே உருவாகிறது. இங்கே இசை மட்டும் விற்கப்படவில்லை, பாடல்களும் தானே விற்கப்படுகிறது. அப்படி இருக்கையில் இசை அமைப்பாளருக்கு மட்டும் எப்படி இது சொந்தம் ஆகும். ஒப்பந்தத்தில் என்ன உள்ளது? ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமும் இளையராஜா இந்த பாடல்கள் எனக்கு தான் சொந்தம் என்று ஒப்பந்தமிடுள்ளாரா? அப்படி உள்ளது எனில் அவர் கேட்பது சரி தான். SPB ராயல்டி கொடுத்துவிட்டு தான் நிகழ்ச்சி நடத்த வேண்டும். இசை அமைப்பாளர் ராயல்டி தொகை பெறுகிறார் எனில், அவர் தொகையை பாடல் எழுதிய பாடல் ஆசிரியருக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுப்பாரா? இசை ஒரு படைப்பு எனில், கவிதையும் பாடலும் கூட ஒரு படைப்பு தானே? பாடலாசிரியர் அவர் பாடலுக்கு பணம் பெற்று கொண்டார், அதனால் அவருக்கு உரிமை கிடையாது என்றால், இசை அமைப்பாளரும் தானே அவர் செய்த வேலைக்கு பணம் பெற்றுக்கொண்டார். அப்படியெனில் இசை அமைப்பாளர் மட்டும் எப்படி உரிமை கோர முடியும்? சினிமா துறை ஒப்பந்தகளும் சட்டமும் என்ன சொல்கிறது? அமெரிக்க போன்ற நாடுகளில் சினிமா அல்லாத இசை தட்டுக்கள் பாடகர்களாலும், இசை நிறுவனங்களாலும் உருவாக்கபடுகிறது. இசையின் மொத்த உரிமையும் அதை தயாரித்த கம்பெனிகளுக்கே உரியதாகும். பெருவாரியான பாடகர்களே அந்த கம்பனிக்கு உரிமையாளராக இருப்பாளர்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழாது. சில சமயங்களில் இசை நிறுவனம் பாடகர்களுடன் ஒப்பந்தமிட்டு, இசை தட்டை வெளியிடுவார்கள். இந்த நிலையில், ஒப்பந்தத்தின் படி இசை நிறுவனமானது ராயல்டி தொகையின் ஒரு பகுதியை பாடகருக்கு பிரித்து கொடுக்கும். வேறு நிறுவனமோ அல்லது தனி நபரோ இந்த இசையை/பாடலை பயன் படுத்தினால், நிறுவனத்திடமிருந்து அனுமதியும் பெற வேண்டும், அதற்க்கான கட்டணமும் செலுத்த வேண்டும். இதுபோன்று நம்மூர் இசை அமைப்பாளரும் தனியாக ஆல்பங்களை வெளியிட்டிருந்தால், அதற்கான ராயல்டி அவருக்கு சேராமல் இருந்தால் அவர் ஒப்பந்தத்தின் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சினிமா பாடலுக்கு இசை அமைக்கும் இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடல்களுக்கும் உரிமை கோருகிறார் எனில் தன் படத்திற்காக இசை அமைப்பாளரை நியமித்து இசையை வெளியிட்ட தயரிப்பளுக்கோ அல்லது தயாரிப்பு நிறுவத்திற்கோ உரிமை இல்லையா? அப்பொழுது இங்கே தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு என்ன? இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடலுக்கு உரிமை கோரும் போது, ஏன் ஒரு இயக்குனர் அவர் இயக்கிய படத்துக்கு உரிமை கோரக்கூடாது? கேட்டால், தயாரிப்பாளர் சும்மா இருப்பாரா? நான் இங்கே இளையராஜா செய்தது சரியா இல்லை SPB அவர் வலைப்பக்கத்தில் பதிவிட்டது சரியா என்பதை வாதிட இதை எழுதவில்லை. ஒப்பந்தத்தின் படி இளையராஜாவுக்கு உரிமை உண்டு எனில், அவரின் சட்ட நடவடிக்கை சரி. அதே போல் அதை மதித்து சட்டப்படி அவருடைய பாடல்களை பாடமாட்டேன் என்று சொன்னதும் சரி தான். இன்னும் SPB அவர்களின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் முடியாத நிலையில், அவருடைய ரசிகர்கள் நிகழ்ச்சிற்கு வந்து ஏமாற்ற்றம் அடையாத வகையில் முன்னரே அறிவித்திருக்கிறார். அதில் தவறு ஏதும் இல்லை என்றே தெரிகிறது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் பதில் தர முடியும் எனில், இந்த பிரச்சனைக்கு சரியான பதில் உங்களுக்கே விளங்கும்.

Rate this:
மேலும் 91 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X