மந்திரவாதியின் குடிலுக்கு தீ: தடயத்தை அழிக்க திட்டம்?

Added : மார் 21, 2017 | |
Advertisement
பெரம்பலூர்: பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள மந்திரவாதியின் குடில், நேற்று முன்தினம் இரவு, திடீரென தீ வைத்து எரிக்கப்பட்டது. தடயத்தை அழிப்பதற்காக, மந்திரவாதியின் ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.பெரம்பலூரைச் சேர்ந்தவன் கார்த்திகேயன், 31. இவன், பெரம்பலூர் மாவட்டம், மருதடி கிராமத்தில், 8 ஏக்கர் நிலத்தில் குடில் அமைத்து, மாந்திரீக

பெரம்பலூர்: பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள மந்திரவாதியின் குடில், நேற்று முன்தினம் இரவு, திடீரென தீ வைத்து எரிக்கப்பட்டது. தடயத்தை அழிப்பதற்காக, மந்திரவாதியின் ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



பெரம்பலூரைச் சேர்ந்தவன் கார்த்திகேயன், 31. இவன், பெரம்பலூர் மாவட்டம், மருதடி கிராமத்தில், 8 ஏக்கர் நிலத்தில் குடில் அமைத்து, மாந்திரீக பூஜைகள் செய்து வந்தான். இந்த குடிலில், நரபலி கொடுத்ததாக, பொதுமக்கள் பாடாலூர் போலீசில் கொடுத்த புகாரை அடுத்து, 2016 ஏப்., 17ல் போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த கார்த்திகேயன், பெரம்பலூர், எம்.எம்., நகரில் உள்ள ஒரு வீட்டில், இளம்பெண் சடலத்தை வைத்து, அகோரி பூஜை செய்ததாக, 10ம் தேதி பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:15 மணியளவில், மந்திரவாதி கார்த்திகேயனின், மருதடி கிராமத்தில் உள்ள குடில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு, மீட்பு படையினர் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த குடிலில் இருந்து, தடயங்கள் எதையும் போலீசார் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காக, மந்திரவாதி கார்த்திகேயன், தன் ஆதரவாளர்கள் மூலம், குடிலை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.


கோர்ட்டில் ஒப்படைப்பு: மந்திரவாதியின், எம்.எம்., நகர் வீட்டில், 11 மண்டை ஓடுகள், ஒரு கூடை மண்டை ஓட்டு துகள்கள், சடலம் இருந்த, 6 அடி மரப்பெட்டி, விநாயகர், காளி, லிங்கம் சிலைகள், ஏ.டி.எம்., கார்டுகள், அவன் பயன்படுத்தி வந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மகேந்திரா சொகுசு கார் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை நேற்று, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X