Many injured after gunshots are fired outside Houses of Parliament | பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி| Dinamalar

பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

Updated : மார் 23, 2017 | Added : மார் 22, 2017 | கருத்துகள் (17)
பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

லண்டன்: பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துபாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.

பிரிட்டன் பார்லி., கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லி. வாளகம் , வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே இன்று(மார்ச்.,22) மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பார்லி. வளாகத்தினை நோக்கி செல்லும் சாலைகள் மூடப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மணை மூடப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதையடுத்து பார்லி. கூட்டத்தொடர் நிறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X