புவனா ஒரு ஆச்சர்யக்குறி!

Updated : மார் 27, 2017 | Added : மார் 27, 2017 | கருத்துகள் (9) | |
Advertisement
புவனா ஒரு ஆச்சர்யக்குறி!முகத்தின் சுருக்கங்களும்,குழி விழுந்த கண்களும்,வளைந்த முதுகும்,தளர்ந்த உடம்பும் கொண்டிருந்த அந்த மூதாட்டிக்கு எப்படியும் வயது 75 வயதிற்கு மேலிருக்கும்.அருகில் இருந்த நடுத்தர வயது பெண்ணின் கையைப்பிடித்தபடி அரை மணி நேரத்திற்கு மேல் நிறைய பேசிக்கொண்டிருந்தார்.அவர் அவ்வளவு நேரம் பேசினாலும் அவர் என்ன பேசினார் என்பது யாருக்கும் தெரியாது
புவனா ஒரு ஆச்சர்யக்குறி!

புவனா ஒரு ஆச்சர்யக்குறி!

முகத்தின் சுருக்கங்களும்,குழி விழுந்த கண்களும்,வளைந்த முதுகும்,தளர்ந்த உடம்பும் கொண்டிருந்த அந்த மூதாட்டிக்கு எப்படியும் வயது 75 வயதிற்கு மேலிருக்கும்.
அருகில் இருந்த நடுத்தர வயது பெண்ணின் கையைப்பிடித்தபடி அரை மணி நேரத்திற்கு மேல் நிறைய பேசிக்கொண்டிருந்தார்.

அவர் அவ்வளவு நேரம் பேசினாலும் அவர் என்ன பேசினார் என்பது யாருக்கும் தெரியாது

காரணம் அவர் பேசுவது பிகாரில் ஒரு சாரர் பேசக்கூடிய போஜ்புரி மொழியாகும்.

உண்மையான பெயர் எது என்பது தெரியாது ரிக்கார்டு செய்யவேண்டும் என்பதற்காகவும் அவர் அடிக்கடி உச்சரிப்பதாலும் தவ்லத் என்று அவருக்கு பெயர் சூட்டியுள்ளனர்.
சென்னை மேயராக மா.சுப்பிரமணியம் இருந்த போது பிச்சைக்காரர்கள் இல்லாத சிங்கார சென்னையை உருவாக்க முனைந்தார் இதன் காரணமாக தெருக்களில் திரிந்த பிச்சைக்காரர்களை தேடி தேடி பிடித்து தெண்டு நிறுவனங்களிடம் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒப்படைத்தார்.

அப்படி சென்னையை அடுத்துள்ள திருநின்றவூர் பக்கம் உள்ள பாக்கம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவரும் சேவாலாயா நிறுவனம் நடத்தும் இலவச முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தவர்தான் இந்த தவ்லத்.

யார் பேசினாலும் இவருக்கு புரியாது இவர் பேசுவதும் யாருக்கும் புரியாது குளிக்க மாட்டார் ஆடையை மாற்ற மாட்டார் கூட்டிப்போய் மேஜையில் உட்காரவைத்து தட்டில் வைத்து சாப்பாடு போட்டால் அடுத்த நிமிடமே அந்த சாப்பாட்டை தான் வைத்திருக்கும் ஒரு டப்பாவில் கொட்டிக்கொண்டு மேஜையை விட்டு இறங்கி பக்கத்தில் உள்ள குப்பை மேட்டருகே சென்று குத்தவைத்துக்கொண்டுதான் சாப்பிடுவார்,கட்டிலில் துாங்கமாட்டார் தனது துணிமூட்டையை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் படுத்துதான் துாங்குவார்.சுருக்கமாக சொல்வதானால் அவ்வளவு சீக்கிரத்தில் தனது பிச்சைக்கார அனுபவத்தில் இருந்து அவர் மாறத்தயராக இல்லை.

இப்போது ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளிக்கிறார்,குளிக்காமல் சாப்பிடுவது கிடையாது,சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை இவர் நறுக்குவது போல யாராலும் நறுக்கமுடியாது அப்படி ஒரு அச்சரசுத்தம்.

அன்புதான் உலக மொழி என்பதை நிருபிக்கும் வகையில் அவரது கண் கை உடல் அசைவுகளை வைத்தே அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை அவரது வயதையொத்த அறைத்தோழிகள் புரிந்து கொள்கின்றனர்,பாசத்திற்கு குறையில்லாத உலகமது.

தவ்லத்திற்குள் இப்படி ஒரு மாற்றம் வர முக்கிய காரணம் புவனா என்று இந்த இல்லத்தில் உள்ளோர் அன்புடன் அழைக்கும் புவனேஸ்வரிதான்.கட்டுரையின் ஆரம்பத்தில் தவ்லத் கையை பிடித்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கும் அதிகமாக பேசிய அன்பு மொழியில் சிக்குண்டு இருந்தவர் இவர்தான்.

இவர் ஒரு ஆச்சர்ய பெண்மணி

பிகாம் முடித்த கையோடு பாங்க் வேலை கணவர் குழந்தை என்று சராசரியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஏழை எளியவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த கணவர் முரளிதரனுக்கு முழு ஓத்துழைப்புதந்தவர் தந்துவருபவர்.

பாங்க் வேலையை விட்டார்,பல லட்ச ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க போகிறேன் என்ற போது சரிங்க என்று சந்தோஷமாக சொன்னவர்.பாக்கம் கசுவா கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தை பார்க்கவும் மேற்பார்வையிடவும் கணவருடன் சைக்கிளில் சளைக்காமல் டபுள்ஸ் வந்து சென்றவர்.

பணக்கார பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய கல்வியை ஏழை எளிய தொழிலாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் பள்ளிக்கூடம்,முதியோர் இல்லம்,தெருக்களில் விடப்படும் பால் கறவைமுடிந்த மாடுகளை பராமரிக்கும் கோசாலை,இயற்கை வேளாண்மை,கம்யூனிட்டி கல்லுாரி என்று கிராம மக்களின் நலனிற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொன்றிலும் இவரது உழைப்பும் உன்னதமான அன்பும் உறைந்துகிடக்கிறது.

உணர்ந்து படித்தல் என்ற வடிவத்தைக் கொண்ட மாண்டிசேரி பள்ளி என்பது பணக்கார குழந்தைகளுக்காக பணக்காரர்களால் நடத்தப்படுவது அந்த மாண்டிசேரி பள்ளியை தமிழில் முதன் முறையாக ஏழைக் குழந்தைகளுக்காக சேவாலாயா வளாகத்தில் துவங்கி அந்த குழந்தைகளில் திறமையை வெளி உலகிற்கு காட்டும் நல்லதொரு விழாவில் அவரை சந்தித்தேன்,ஒரு நதி போல போகிற போக்கில் உங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு உங்களை அறியாமலே எவ்வளவோ நல்லது செய்திருக்கிறீர்கள் மனம் திறந்த பாராட்டுக்கள் என்ற போது அந்த பாராட்டை மிகவும் கூச்சத்துடனேயே ஏற்றுக்கொண்டார்.

இவருக்கு கிடைக்கும் பாராட்டு என்பது இங்குள்ள பல முதியோர்களுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் ஆனந்த தாலாட்டாகும்.அவரது எண்:9444620286.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanasami Thirumeni - Mannargudi,இந்தியா
01-மே-201708:29:32 IST Report Abuse
Narayanasami Thirumeni வாழ்க அம்மா நீ. .. நீடூழி வாழ்க ....
Rate this:
Cancel
Balu1968 - Doha,கத்தார்
23-ஏப்-201705:29:28 IST Report Abuse
Balu1968 இவர்களை படைத்த இறைவன் தான் வஞ்சகர்களையும் பணத்திற்காக எதையும் செய்யத்துணியும் அதிகார வரகத்தையும் படைத்தான் என்றால் விந்தையாக உள்ளது. இவர்களை போன்றவர்கள் மனித உருவில் நடமாடும் தெய்வங்கள். இவர்கள் செய்வது தான் உண்மையான இறைப்பணி. தொடரட்டும் இவர்களது சேவை.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
05-ஏப்-201708:26:18 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தவ்லத் பற்றி படிக்கறச்ச கண்கள் கசிந்தன ஒருகாலத்தில் அந்தம்மா எப்படியிருந்தாரோ தெரியாது ஆனால் அவரையும் மனுஷியாக்கி விட்ட புவனாக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X