சென்னை: ''ஜெயலலிதாவால், 2007ல் விரட்டப்பட்டவர் தினகரன். அவரை, நீங்களும் புறக்கணிக்க வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நாகூரான் தோட்டம் பகுதியில், நேற்று பிரசாரம் செய்தார்.
ஜெ.,ஆன்மா வழிநடத்தும்
அவருக்கு மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும், வீடுகள் முன் வண்ண கோலங்கள் போட்டும், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு
அளித்தனர். அ.தி.மு.க., தொண்டர்களின், இரு குழந்தைகளுக்கு, ஜெயராமன்,
ஜெயராமச்சந்திரன் என, பெயர் சூட்டினார்.பிரசாரத்தில், பன்னீர்செல்வம்பேசியதாவது:
எம்.ஜி.ஆரால், தளபதி என, பாராட்டப்பட்ட மதுசூதனன் போட்டியிடுகிறார். இங்கு, ஜெ., போட்டியிட்ட போது, மதுசூதனன் மாற்று வேட்பாளராக இருந்தார். ஜெ., மறைந்தாலும், அவரது ஆன்மா நம்மை வழிநடத்தும்.
நம் அணியை, எந்த கொம்பன் வந்தாலும், அசைக்க முடியாது; இது, எக்கு கோட்டை.ஜெ., மரணம், 10 கோடி உலகத்தமிழர்கள் மனதில் வடுவாக உள்ளது. இது குறித்து, விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். மரணத்தில் உள்ள, மர்ம முடிச்சுகள் அவிழும் வரை, என் தர்ம யுத்தம் தொடரும்.
ஒரு குடும்பத்தின் கூட்டு சூழ்ச்சி
மதுசூதனனை எதிர்த்து நிற்கும் தினகரன், 2007ம் ஆண்டிலேயே, ஜெயலலிதாவால் விரட்டப்பட்டனர். 'தினகரன் அரசியலில் தலையிடக் கூடாது; பார்லிமென்டிற்கு போகக்
கூடாது' என, ஜெ., ஒதுக்கினார். அவரை நீங்களும் புறக்கணிக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் கூட்டு சூழ்ச்சி, கட்சி, ஆட்சியை கபளீகரம் செய்துள்ளது. கட்சியை மீட்க, மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளர் மதுசூதனன் பேசுகையில், ''21 ஆண்டுகளுக்கு பின், இத்தொகுதியில் போட்டியிடுகிறேன். ஜெ., விட்டு சென்ற பணிகளை, ஓ.பி.எஸ்., நிறைவேற்றுவார். கமிஷனுக்கு அலையாமல், மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என, பணியாற்றுவார் அவர்,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (23)
Reply
Reply
Reply