''ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதும், பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவேன்,'' என, பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார். சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன், கொருக்குப்பேட்டை பகுதியில், நேற்று காலை பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: இந்த பகுதியில், மாசு பெரும் பிரச்னையாக உள்ளது. அதேபோல, குடிநீரில் கழிவுநீர் கலப்பதால், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நான் வெற்றி பெற்றதும், இரண்டு பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவேன். அதன்மூலம், மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். ஊழல் இல்லாத தொகுதியாக மாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -