பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் போராட்ட களமாக மாறுகிறதா சென்னை மெரினா?

Added : மார் 29, 2017 | கருத்துகள் (66)
Advertisement
Chennai,Marina,Marina Beach,சென்னை,மெரினா,மெரினா கடற்கரை

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மெரினா மீண்டும் போராட்டகளாக மாற தயாராகி வருகிறது.

ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே திருப்பி பார்க்க வைத்தது. போராட்டத்தின் போது இனி ஒவ்வொரு முக்கிய பிரச்னைக்காகவும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். சமூக வலைதளங்களிலும் ஆதரவலைகள் பெருகிறது.

இந்நிலையில் டில்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினா மற்றும் மதுரை தமுக்கத்தில் நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். முதலில் குறைந்த அளவே இளைஞர்கள் இருந்ததால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இத்தகவல் பின்னர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து பல மீம்களும் உருவாக்கப்பட்டு வைரலாகியது. மேலும் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பலர் இன்று (29ம்தேதி) சென்னை மெரினாவில் பெரிய அளவில் போராட்டத்தில் இறங்குவதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் சென்னை மெரினாவில் கடற்கரை மீண்டும் ஒரு போராட்ட களமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கும் பட்சத்தில் இந்த போராட்டமும் தமிழகமும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் போலீசார் தரப்பில் சென்னையில் 3 இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை அன மீண்டும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
29-மார்-201723:57:07 IST Report Abuse
X. Rosario Rajkumar விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டி அவர்களின் வாழ்க்கையை வளமாக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
29-மார்-201714:30:32 IST Report Abuse
தமிழர்நீதி ஜல்லிக்கட்டு அரசு நடத்திய போராட்டம் . மாணவர்கள் சிலர் கூடினர் . அரசு இயந்திரம் அவர்களை அரவணைத்து ஆதரவு கொடுத்தது . உறவுகள் ,நட்புகள் கூடின . பொங்கல் விடுப்பு நேரம் .காணும் பொங்கல் . உணவுகள் தரளமாக வழங்கப்பட்டன . தனியார் கல்லூரிகள் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் உதவின . கூட்டம் சமூக அக்கறை கொண்டோர் வாசனையில் அமிழ்ந்தபோது , தத்துவம் பேசப்பட்டது . அரசை எதிர்த்து வாசகங்கள் ,பாதகை வெளிச்சம் போட்டது . அரசு அரண்டுபோனது . இதுல நடிகர்கூட்டம் , சும்மா தொடர்ந்து உள்ளுக்குள் புகுந்து கழிப்பிடம் வசதி கொடுத்தது . ஒருமுக படுத்தப்பட்ட ,சசி ஜெயா ஊழல் தீர்ப்பை திசை திருப்ப , மோடி பண மதிப்பிழப்பபு திசை திருப்ப , ஜெயா கொலை மறக்கடிக்க அரசு ஆரம்பித்த போராட்டம் . போராட்டம் தத்துவம் பெற்று, அரசியல்வாதிங்களை கழுவி ஊத்தியபோது, உஷாரானார் பன்னீர் . தான் பரிவாரத்தை அவிழ்த்து விட்டார் . இன்னும் மாணவர்கள் காவல்துறை வழக்கில் சிக்கி தவிக்கிறார்கள் . அரசு ஆதரவு இல்லாமல் போராடமுடியாது . லத்திக்கு எதிர்க்கும் மனவலிமை , தியாகம் எல்லாம் மரித்து போனது . உணவும் நீரும் கொடுத்தால் ,விடுப்பு கொடுத்தால் அரசு ஆதரவு கொடுத்தால் இளசுகள் எழும் .இல்லை வலைத்தளத்தில்தான் போராடுவார்கள் . காரணம் எதிரி அன்னியனில்லை , தமிழன்தான் துரோகி . நெடுவாசல் கொடுமை டெல்லி வரை தமிழன் மூலம்தான் செயல் வடிவம் பெறுகிறது . இந்த் அமைப்பு தவறு மீது கட்டப்பட்டுள்ளது . அன்புக்கு ,மனிதத்திற்கு எதிர்ப்பு வலுக்குறது. ஆதிக்க சக்தி ஆளுமைக்குள் அடிமை படுகிறது . அக்கினி குஞ்சுகள் எரிந்து காலம் பல ஆகிறது .
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
29-மார்-201714:28:58 IST Report Abuse
Milirvan முஸ்லீம் பிரதர்வுட் என்ற அமைப்பு இப்படித்தான் எகிப்தில் ஆரவாரமாக அரசியலை சீர் செய்ய என்று வந்து பிறகு, 'உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா' என்பதுபோல அம்மக்களை படுத்தி எடுத்துவிட்டார்கள். உணர்ச்சிப்பூர்வமாக விஷயங்களை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுப்பதில் நல்ல விளைவுகளை விட தீயவையே அதிகம்.ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்று பல உதாரணங்கள் இதற்கு உண்டு. போராட்டங்கள் ஹைஜாக் செய்யப்பட்டு சமூகவிரோதிகளின் கைக்குள் சென்றுவிடும் அபாயமும் உண்டு. ஆக, அடிக்கடி கூட்டம் கூடி போராட்டம் நடத்துவது நல்லதற்கல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X