அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல்,பொறுப்பாளர்கள், ஆலோசனை, கூட்டத்தில், தினகரன்... குமுறல்!

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா அணி வேட்பாளர் தினகரன், தன் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.

தேர்தல்,பொறுப்பாளர்கள், ஆலோசனை, கூட்டத்தில், தினகரன்... குமுறல்!

தன் வெற்றியை விரும்பாத, 13 அமைச்சர்கள், தனக்கு எதிராக வேலை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன், 80 ஆயிரம் ஓட்டுகள் பெறுவார் என, வெளியான சர்வே முடிவால், ஒட்டுமொத்த சசி தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தில், தொண்டர் களின் வெள்ளத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நீந்தி செல்லும் அளவுக்கு கூட்டம் கூடுகிறது. தினகரனுக்கு ஆதரவாக, வெளியூரில்இருந்து அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களின் கூட்டம் தான் காணப்படுகிறது.

விரும்பவில்லை:

தினகரன் வெற்றி பெற்றால்,அவர் உடனடியாக முதல்வர் பதவியை ஏற்கக் கூடும் என,

தெரிகிறது.அதனால், முதல்வர் பழனிசாமியும், அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்க ளும், தினகரன் வெற்றி பெறு வதை விரும்ப வில்லை. குறிப்பாக, ஜெயக் குமார், ராஜு, வேலுமணி, தங்கமணி, காமராஜ், ராதாகிருஷ் ணன், மணிகண்டன், பாஸ்கரன், ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நடராஜன்,வளர்மதி, ராஜலட்சுமி என, 13 பேர், தினகரன் வெற்றியை விரும்பவில்லை.
அந்த அமைச்சர்கள் அனைவரும் போட்டோவுக் கும், மீடியாவுக்கும் பிரசாரம் செய்வது போல போஸ் கொடுக்கின்றனரே தவிர, முழு மூச்சு டன் பிரசாரம் செய்ய வில்லை.
தேர்தல் முடிவை அறிந்த பின், அணி மாறவும், அவர்கள் தயாராக உள்ளதாக கூறப் படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில்,பிரசாரத்தின் போது பன்னீர்செல்வம் பேசுகை யில், 'என்னுடன் அமைச்சர்கள் தொடர்பில் தான் உள்ளனர்' என்றார்.

அதிருப்தி:

இதுவும், அமைச்சர்களின் மேம் போக் கான தேர்தல் பணி பற்றிய தகவல்களும், தினகரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனியார் நிறுவன சர்வே முடிவும், அவரையும், சசி தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

Advertisement

ஆர்.கே. நகரில் பிரசாரம் துவங்கிய பின், தனியார் நிறுவனம் ஒன்று சர்வே எடுத்துள்ளது. அதில், மதுசூதன னுக்கு, 80 ஆயிரம்; தி.மு.க., வேட் பாளர் மருது கணேஷ், 50 ஆயிரம்; தினகர னுக்கு, 40 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது.

நெருக்கடி


இதனால் ஏற்பட்ட குமுறல்களை எல்லாம், தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தினகரன் கொட்டித் தீர்த்துள்ளார். தனக்கு எதிராக வேலை செய்யும் அமைச்சர் கள் பெயரை குறிப்பிடாமல், அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா உயிருடன் இல்லை. சசிகலாவும், சிறையில் இருக்கிறார். வழக்கு விசாரணை என, தினமும் என்னை கோர்ட்டுக்கு அலையும் வகையில், மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் தான் கட்சியும், சின்னமும் நம்மிடம் இருக்கும்; இல்லை யென்றால், பறிபோய் விடும். எனவே, அனைவரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
31-மார்-201722:52:41 IST Report Abuse

vnatarajan40000 மா இல்லேங்க அது 4000 மா இருக்கப்போகிறது. கண்டிப்பாக தினகரன் கண்டிப்பாக டிப்பாசிட்டை இழப்பார்.

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
31-மார்-201722:19:43 IST Report Abuse

mindum vasanthamபலவிதமான நடிப்புக்கு போடுவதும் பதில் கேப்டன் விஜயகாந்திற்கு போடலாம்

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
31-மார்-201720:21:34 IST Report Abuse

kuppuswamykesavanஎம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா உயிருடன் இல்லை". ஆகவே ஒரு நம்பகமான, மக்களால் மற்றும் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிற ஒரு அதிமுக தலைவர் இன்றைய போட்டியில் முன்னேறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X