அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நடமாடும் எம்.எல்.ஏ., அலுவலகம்
அ.தி.மு.க., - பன்னீர் அணி அதிரடி வாக்குறுதி

சென்னை:'ஆர்.கே.நகர் தொகுதி யில், மதுசூதனன் வெற்றி பெற்றதும், நடமாடும், எம்.எல்.ஏ., அலுவலகம் அமைக்கப்படும்' என, பன்னீர் அணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 ஆர்.கே.நகரில், நடமாடும் ,எம்.எல்.ஏ.,, அலுவலகம்

அ.தி.மு.க., - பன்னீர் அணி சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். நேற்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தேர்தல் அறிக்கை வெளியிட்டார். முதல் பிரதியை, மதுசூதனன் பெற்றுக் கொண்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:


* நாட்டிலேயே முதன்முறையாக, ஆர்.கே.நகர் தொகுதியில், நடமாடும், எம்.எல்.ஏ., அலுவலகம் அமைக்கப்படும். இதில், மூன்று பேர் இருப்பர். ஒவ்வொரு பகுதியாக சென்று, மக்களிடம் கோரிக்கை மனு பெறுவர். அதை உரிய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி, நட வடிக்கை மேற்கொள்வர். அரசு திட்டங்களின் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்

* 'மை ஆர்.கே.நகர்' என்ற பெயரில், புதிய, 'மொபைல் ஆப்' உருவாக்கப்படும். இதன் மூலம், மக்கள் குறைகளை தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சேவை, தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று நாளில் அமைக்கப்படும்

* புதிதாக இரண்டு உயர்நிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி, எம்.எல்.ஏ., பதவி காலத்தில் கொண்டு வரப்படும்

* இளைஞர்களுக்கு அவரவர் ஆர்வத்திற்கேற்ப, வேலைவாய்ப்புபயிற்சி அளித்து, நல்ல வேலைக்கு தகுதியுள்ள, சிறந்த குடிமகனாக உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

* ஆரம்ப சுகாதார நிலையங்களில், போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, தேவையான மருந்துகள் மற்றும் வசதிகள் செய்து தரப்படும்

* ஒரு ஆண்டிற்குள், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க, உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

* கொடுங்கையூர் குப்பைமேட்டை சீர்படுத்தி, தொழில் பூங்கா அமைக்கவும், சுற்றிலும்
நீரூற்றுகள், படகு குழாம் அமைத்து, சுற்றுலா மையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்

* ஐந்து மாதங்களாக, முதியோர் ஓய்வூதியம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும், எந்தவித இடை யூறும் இல்லாமல், மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்க, முயற்சி மேற்கொள்ளப்படும்

* வீட்டுமனை பட்டாஇல்லாமல் இருப்போருக்கு, ஒவ்வொரு கட்டமாக, பட்டா வழங்கப்படும்

* ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது, ஐந்து இடங்களில், பொது நுாலக வசதிகள் செய்து தர, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

Advertisement

* மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை யருக்கு, தொழில் பயிற்சி அளிக்கவும், வேலை வாய்ப்பு உருவாக்கவும், உடனடியாக முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விசாரணை கமிஷன் முக்கிய கோஷம்!


தேர்தல் அறிக்கை குறித்து, முன்னாள் அமைச் சர் பாண்டியராஜன் கூறியதாவது: தேர்தல் அறிக்கை தயாரிப்பில், 50 பேர் குழு ஈடுபட்டது. குழுவினர் தொகுதி முழுவதும், சுற்றி வந்து, மக்களின் தேவைகளை கேட்டறிந்து, தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

தேர்தல் அறிக்கையில், 108 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், மூன்று அம்சம், அனைத்து தொகுதி மக்களுக்கும் பொது வானது. ஜெ., மறைவுக்கு, தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு வாரத்தில், நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

அவரின் போயஸ் தோட்டம் வீடு, நினைவு இல்லமாக மாற்றப் படும். பன்னீர்செல்வம் தலைமையில், அனை வரும் ஒன்றிணைந்து, இரட்டை இலையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
31-மார்-201719:07:00 IST Report Abuse

K.Sugavanamஅதிரடி சரவெடி...ஆமாம் RK நகர்ல 57000 வீடுகள் கட்ட இடம் இருக்கா?

Rate this:
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
31-மார்-201717:52:10 IST Report Abuse

Srikanth Tamizanda..OPS vam, EPS vam, Dinakaran vam, DMk vam, DMDK vam, BJP um vam.. Appa yaaru dhaan venum? Nammil palar thelivaaga illadhadhe ipadi Oru soozaluku kaaranam.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மார்-201716:54:39 IST Report Abuse

Endrum Indian50 வருட ஆட்சியில் நடந்தது என்ன?? காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களை வெறும் வோட்டு வங்கிகளாக அவர்களை "ஏழைகளாக, பல குழந்தைகள் பெரும் எந்திரமாக (பல ஓட்டுக்கள் கிடைக்கும் என்று), படிப்பறிவில்லாதவர்களாக வைத்திருந்தார்கள். அதே போல திராவிட ஆட்சியில் இலவசம் என்று ஒரு இழவெடுத்த பேர் சொல்லி, "பிச்சைக்காரர்களாக, படிப்பறிவில்லாதவர்களாக, இந்து எதிர்பாளர்களாக வைத்து இருந்தார்கள். இது 50 நாளில் தீர்ந்து விடுமா மதுசூதனனை ஆர்.கே நகர் எம்.எல்.ஏ ஆக்கினால்?? பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்லவேண்டும்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X