பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை மைல்கல்லில் இந்தி மொழி ஆக்கிரமிப்பு

Added : மார் 31, 2017 | கருத்துகள் (56)
Advertisement
நெடுஞ்சாலை, மைல்கல், இந்தி மொழி, ஆக்கிரமிப்பு

வேலூர்: நெடுஞ்சாலையில் உள்ள மைல்கல்களில் இந்தி மொழி ஆக்கிரமித்துள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஊர் பெயர்களை அழித்து விட்டு, முதலில் இந்தியிலும், இரண்டாவதாக தமிழிலும் ஊர் பெயர்களை எழுதி வருகின்றனர். புதிதாக எழுதப்பட்ட மைல்கற்களில் ஆங்கிலம் இல்லாததால் தமிழ் மற்றும் இந்தி தெரியாத வெளிமாநில பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறும் போது மைல்கல்களில் தமிழுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
01-ஏப்-201701:08:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று எம் பாரதி சொன்னானென்று ஒரு கூற்று நிலவுகிறது. அது தவறு. அந்த வரிகள் வரும் மொத்தப் பாடலையும் படித்தறிந்தால், புதிய விஞ்ஞான பாடங்களை தமிழில் கற்பிக்க இயலாது என்று கூறி திரியும் வீணர்களை பற்றி தமிழன்னை வினவுவது போன்ற பாடல் என அறிவீர். "" இதோ.. "புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவ தில்லை-அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை" என்று சொல்லுகிறார்கள், அந்த "கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்", என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ இந்த வசையெனக் கெய்திட லாமோ? " என்று கூறிய தமிழன்னை, "இந்தப் பெரும்பழி தீரும்-புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்" என்று முடிப்பதாக பாடல். வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
01-ஏப்-201700:42:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "நீங்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்... அவையாவும் ஒரு வீட்டில் உள்ள ஜன்னலை போல வைத்துகொள்ளுங்கள் ஆனால் உள் நுழையும் கதவாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்" - கமல்ஹாசன். இதை விட அழகாக சொல்லமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
31-மார்-201723:03:07 IST Report Abuse
சுந்தரம் சில மாதங்களுக்கு முன் கோவையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மீதி பணம் வாங்கும்போது வந்த அழுக்கான நோட்டுக்கு பதில் வேறு நோட்டு தருமாறு கேட்டேன். கடைக்காரர் சிரித்துக்கொண்டே அதைவிட அழுக்கான கிழிந்த நோட்டைக்கொடுத்தார். நான் முன்பு கொடுத்த அழுக்கு நோட்டையே பெற்றுக்கொண்டு திரும்பினேன். இப்போ மைல் கல்லுல இருக்குற இந்தியை எடுக்கணும் அவ்வளவுதானே. மோடி பகவான் கிட்ட சொல்லி மைல் கல்லுல இருக்குற ஹிந்தியை அழிச்சுட்டு சம்ஸ்கிருதத்தில் எழுத சொல்லிட்டா போச்சு. நம்ம திராவிடம் குருமா, கலிங்கா நாட்டான் வைக்கோல் மற்றும் சீமான்கள் எல்லாம் பொங்கி எழுந்து களத்துல குதிச்சு நடு ரோட்டுல உப்புமா சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் சம்ஸ்கிருத எழுத்துக்களை அழிச்சுட்டு ஹிந்தியில் எழுதினா சும்மா இருப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X