மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு அவகாசம் வழங்க மறுப்பு

Updated : மார் 31, 2017 | Added : மார் 31, 2017 | கருத்துகள் (19)
Advertisement
மதுக்கடை, அவகாசம், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற தமிழகத்திற்கு அவகாசம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
'சாலை விபத்துகள் ஏற்படுவதை குறைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீ., தொலைவுக்கு மதுக்கடைகள் இருக்கக் கூடாது. ஏற்கனவே அளித்துள்ள லைசென்ஸ்களை, 2017 மார்ச், 31க்கு பின் புதுப்பிக்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட், 2016 டிசம்பரில் தீர்ப்பு அளித்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களும், மதுக்கடை உரிமையாளர்களும் மனு தாக்கல் செய்தனர். 'நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான காலக்கெடுவை, இந்தாண்டு, நவ., 28 வரை நீட்டிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், மார்ச், 23ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.


மறுப்பு:

இந்த மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மதுக்கடைகளை அகற்ற அவகாசம் அளிக்க முடியாது என கோர்ட் கூறி விட்டது. தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்ற இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது. மற்ற மாநிலங்களில் செப்.,30ம் தேதியுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.


தளர்வு:

இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீ தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்ற உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கும் கீழ் வசிக்கும் பகுதிகளில் மட்டும் இந்த தொலைவு 220 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள பார் மற்றும் விடுதிகளில் மதுபானம் விற்கக்கூடாது. பார்வைக்கு புலப்படும் வகையில் மதுபான கடைகள் இருக்கக்கூடாது. மக்கள் நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கோர்ட் கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
01-ஏப்-201700:22:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த தீர்ப்பின் விளைவாக இந்தியாவில் இரண்டு மாற்றங்கள் வரும். கேடுகெட்ட இந்திய சட்டஒழுங்கு, போலீசின் லஞ்சத்தினால். (1) சாலையோரம் சட்டவிரோத பார்க்கிங். - வழியிலே ஓரத்திலே நிப்பாட்டினா எவன் கேக்கப்போறான்.. கேக்க வேண்டிய போலீஸ்காரன் பிச்சை வாங்கிட்டு போயிடுவான். அங்கிருந்து பாருக்கு ஷேர் ஆட்டோ. குடிச்சி மல்லாக்க உழுந்தவனை பார்க்கிங் பண்ண இடத்திலே கொட்டிட்டு போயிடுங்க.. ஒரு ப்ராப்ளம் போயி இப்போ புது ப்ராப்ளம் வரும்.. அல்லது (2) ரெயில்வே கேட்டில் வெள்ளரிப்பிஞ்சு, வேர்க்கடலை, ப்ளம்ஸ், பேரிக்காய் போல சரக்கு கடை இருக்கும் இடத்தில் அருகில் சாலையோரம் "கூல் பீர்", "குவாட்டர் வித் வாட்டர்", சைடு டிஷ் .. விற்பனை சூடு பிடிக்கும். மாமூலை வாங்கிட்டு குச்சியை ஆட்டிக்கிட்டு இன்ஸ் பிச்சைக்காரன் போயிடுவான்.. இதான் நடக்கும். பாத்துக்கிட்டே இருங்க.. குடிச்சிட்டு வண்டி ஓட்டி கொல்றது கொறைஞ்சு, வழியிலே "சரக்குக்காக" நின்ன வண்டிகளில் மோதி சாகுறவன் அதிகமாவான். ஏற்கனவே இது போன்ற "பழுதான" வண்டிகளால் தான் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. இப்போ புதுசா இந்த பார்-வண்டிகள். மேரா பாரத் லஞ்சத்திலே மகான்..
Rate this:
Share this comment
Cancel
sivaram - singapore,சிங்கப்பூர்
31-மார்-201721:07:41 IST Report Abuse
sivaram இது பாட்டாளிமக்கள் கட்சியின் வெற்றி ஆட்சியில் இல்லாமல் ஒரு கட்சி ஆயிரக்கணக்கான மதுக்கடைகளை மூடியுள்ளது
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
31-மார்-201719:59:31 IST Report Abuse
kuppuswamykesavan " தமிழர்நீதி - சென்னை ,இந்தியா 31-மார்-2017 17:52 வெளிப்படையாக குடிக்கக்கூடாது . மறைந்து ஓரமாக குடிக்கணும் . குடி குடிய கெடுக்கும் ,மறைந்து குடித்தாலும் மரணம் தரும் மை லாட். ஆகவே இந்த விஷ விற்பனையை தடை செய்யுங்கள் மை லார்ட்" . .......... உங்கள் கருத்து அருமையாக உள்ளது. பொதுவா குடிமகன்கள் இன்றைய போதை சந்தோசத்திற்கு அடிமையாகிவிட்டவர்கள். நாளைய நிகழ்வின் மீது கடுகளவு கூட அக்கறையில்லாதவர்கள். இப்படிப்பட்ட குடிகார சமுதாயம்தான் நாளைய தமிழகத்தையும் நாளைய இந்தியாவையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்பவர்களா?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X