பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
காஷ்மீர் குகைபாதை: 10 அம்சங்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிக நீளமான குகைப்பாதையை வரும் ஞாயிறு (ஏப்ரல்2) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த பாதையின் 10 முக்கிய அம்சங்கள்:

நேரம் குறையும்:


1.காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டம் செனானி முதல் ரம்பன் மாவட்டம் நாஷ்ரி என்ற இடம் வரை ரூ.2,500 கோடி செலவில் இந்த குகைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
2. கடந்த 2011ல் துவங்கிய இந்த குகை பாதை அமைக்கும் பணி தற்போது முடிந்துள்ளது. சுமார், 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
3.இப்பாதையின் நீளம் 10.89 கிலோ மீட்டர்.அதாவது, ஆசியாவிலேயே நீளமான குகைப் பாதை என்ற பெயரைப் பெறுகிறது.
3.இந்த பாதை மூலம், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் பயணம், 2 மணி நேரம் குறையும்.4.இந்த பாதையால் தினமும் ரூ.27 லட்சம் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படும்.

5. ஜம்மு பிராந்தியத்தில்உள்ள கிஸ்த்வர், தோடா, பதேர்வா பகுதிகளுக்கும் இணைப்பு வசதி கிடைக்கும்.

காஷ்மீர் குகைபாதை, 10 அம்சங்கள்

6. இந்த பாதையில்,ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
7.பாதையில் யார் நுழைந்தாலும் அவர்களை கண்டறிய முடியும்.
8.தீத்தடுப்பு சாதனங்கள், மின்னணு கண்காணிப்பு முறைகள் பாதை நெடுக பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

9.பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆட்படாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
10.கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு, ஆண்டு முழுவதும் பயன்தரத்தக்க வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய பொறியாளர்களின் திறமைக்கு இக்குகை பாதை ஒரு சான்று.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
01-ஏப்-201716:47:30 IST Report Abuse

ganapati sbகாஸ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை தங்க நாற்கர சாலையில் இணைக்கும் கனவு திட்டத்தை ஆரம்பித்த வாஜ்பாய்க்கு வணக்கங்கள் இந்த திட்டத்திற்கு சிந்தனை செய்த மன்மோஹனுக்கு வாழ்த்துக்கள் கொடு போட்டால் அதி விரைவில் ரோடு போடும் மோடி கட்காரிக்கு வாழ்த்துக்கள் பனிமலையில் தீவிரவாதிகளை பற்றி அஞ்சாது திறம்பட செய்து முடித்த பொறியாளர்களுக்கு பாராட்டுக்கள் ஆசியாவின் மிக நீண்ட குகை சாலை நம் அனைவருக்கும் பெருமை

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
01-ஏப்-201715:20:17 IST Report Abuse

 N.Purushothamanஇதில் சிறப்பம்சம் என்னவெனில் நிதின் கட்காரி பதவி ஏற்றவுடன் இந்த திட்டத்தில் இருந்த தொய்வை களைந்து அதை வேகப்படுத்தியதால் தான் திட்டம் வெகு விரைவாக முடிக்கப்பட்டு திறப்பு விழா காண்கிறது..

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
01-ஏப்-201710:11:36 IST Report Abuse

Balaji தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X