அயோத்தி வழக்கை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Added : ஏப் 01, 2017
Advertisement

புதுடில்லி: 'அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கை, உடனடியாக விசாரித்து, தீர்ப்பளிக்க வாய்ப்பில்லை' என, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. உ.பி., மாநிலம், அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய ராமர் கோவில் -- பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குகளை விசாரித்த, அலகாபாத் ஐகோர்ட், நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என, 2010ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, பல்வேறு தரப்பிலும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, 'ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கை, விரைவாக விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்' எனக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, 'அயோத்தி பிரச்னையில், கோர்ட்டுக்கு வெளியே பேச்சு நடத்தி, தீர்வு காண முயற்சிக்க வேண்டும்; தேவைப்பட்டால், மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளோம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பேச்சு நடத்துவதால் கால தாமதம் ஏற்படுகிறது. கோர்ட்டே விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என, சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது:இந்த வழக்கில் மனுதாரர், சம்பந்தப்பட்ட நபர் அல்ல. இது போன்ற வழக்குகளில், அவசரம் காட்ட முடியாது; எனவே, உடனடியாக விசாரணை செய்து தீர்ப்பளிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X