அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா?
பண மழை பெய்வதால் வாக்காளர்கள் சந்தேகம்

தஞ்சாவூர் மற்றும் அரவக் குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு, அதிகளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் ,தேர்தல், ரத்து, செய்யப்படுமா?,

தற்போது, ஆர்.கே.நகரிலும் பண மழை கொட்டு வதால், தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம், வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

செல்வாக்கு


ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. இரு அணியினரும், தங்களுடைய செல் வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனித்தனியே களமிறங்கி உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., நிர்வாகி கள் மற்றும் தொண்டர்களில் பெரும்பாலா னோர், பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர். மேலும், பன்னீர் அணி வேட்பாளராக, அதே

தொகுதியைச் சேர்ந்த, மதுசூதனன் களமிறக்கப் பட்டு உள்ளதால், தொகுதி மக்களிடம் வரவேற்பு உள்ளது.ஆனால், தினகரன் செல்லும் இடங்களில், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, வாக்காளர்களை பணத்தால் வளைக்க, அவரது அணியினர் முடிவு செய்துள்ளனர்.

இது தவிர, தொகுதியில் முகாமிட்டுள்ள தினகரன் ஆதரவாளர்கள்,வாக்காளர்களின் தேவையை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்து கொடுத்து, அவர் களை கவர முயற்சித்து வருகின்றனர். அமைச்சர் கள் ராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர், தொகுதி மக்களுக்கு, பணப் பட்டுவாடா செய்ததாக, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், வாக்காளர்களை அருகில் உள்ள வேறு தொகுதிக்கு வரவழைத்து, பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதாக, தி.மு.க., - மார்க்.கம்யூ., போன்ற கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.பண பட்டு வாடாவை தடுக்க வேண்டும் என, பல்வேறு கட்சியி னர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு, முதன்முறையாக, ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல்பணிகளை கண்காணிக்க, ஐந்து தேர்தல் பார்வையாளர்களை, தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

கண்காணிக்கும் பணி


இதில், இருவர் வருமான வரித்துறையில் இருந்து வந்துள்ளனர். அவர்கள், அரசியல் கட்சிகளின், பண

Advertisement

பட்டுவாடாவை கண்காணிக் கும் பணியை மட்டும் மேற்கொண்டு உள்ளனர். அவர்களின் கீழ், வருமான வரித்துறை அதிகா ரிகள் குழு, தொகுதியை வலம் வருகிறது. அவர்கள் ஓசைப்படாமல், பட்டு வாடா செய்யப் படுவதற் கான ஆதாரங்கள் அனைத்தையும் சேகரித்து வருகின்றனர். தஞ்சாவூர், அரவக் குறிச்சி தொகுதிகளில், பணப் பட்டுவாடா அதிகம் இருந்ததால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, ஆர்.கே.நகரிலும், பணப் பட்டுவாடா அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. அதையும் மீறி, பணப் பட்டு வாடா இருந்தால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. எனவே, தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம், ஆர்.கே.நகர் வாக்காளர்களிடம் எழுந்துள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
@a_Vailankanni - Mumbai ,இந்தியா
02-ஏப்-201721:21:34 IST Report Abuse

@a_Vailankanniபணங்காசு மிதமிஞ்சி போயிருந்தா இப்படி அடுத்தவங்க பதவிக்கு ஆசைப் படுவதை விட்டுவிட்டு ஒரு கட்சியையோ அல்லது அமைப்பையோ ஆரம்பிச்சி ஜெயிச்சி வந்து பதவியில உக்காரனும் அதைவிட்டு காலங்காலமா கஷ்டப்பட்டு கண்டவங்ககிட்ட எல்லாம் கண்ட சொல்ல வாங்கி கட்சிய வளத்து நிலை நிறுத்தி இருக்கிரப்போ நோவாம எவனாச்சும் வந்து நோம்பு கும்பிடுவாங்கலாம் கஷ்டப்பட்டவங்க வெறும் விரல சூப்பிக்கிட்டு போயிடுவாங்களாம் போடா இதப்போயி இந்த தொகுதி மக்கள் நாங்க சொன்னோ முன்னு உங்கம்மாகிட்ட இல்ல உங்க சின்னம்மாக் கிட்ட சொல்லு வர்ட்டா

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
02-ஏப்-201717:17:00 IST Report Abuse

மு. தணிகாசலம் தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக உளவுப்படை, தேர்தல் ஆணையத்தாலேயே அமைக்கப்பட வேண்டும். வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம், பொன் கொடுக்கப்பட்டதாக அந்த உளவுப்படை கொடுக்கும் அறிக்கையை அடிப்படையாக வைத்து தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுதல் வேண்டும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்களென்று நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது இயலாத காரியம்.

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
02-ஏப்-201716:58:44 IST Report Abuse

Sahayamபிஜேபியும் தினகரனும் கூட்டு சதிசெய்து தேர்தலை நிறுத்த திட்டம் போடுகிறது போல உள்ளது

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X