பொது செய்தி

இந்தியா

மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்

Updated : ஏப் 03, 2017 | Added : ஏப் 02, 2017 | கருத்துகள் (64)
Advertisement
மதுக்கடை, மூடல், வீல் சேர், சாதித்தார், SC, order, liquor, sale  roads, wheelchair,

அமிர்தசரஸ்: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு உடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார். சண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47). இவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன் காரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு திரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில் சேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சிகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வந்தார்.


ஆக்கப்பூர்வ சிந்தனை பிறந்தது:

அவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார், பைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது வழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன். ஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன். பல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது. ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். சாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன். 2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை கோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட் கடைகளை அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல் போனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர் வாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் . பல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது குறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.
தற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன் மூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான கடைகள் மூடப்பட்டன.

இந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும், நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள் திரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அடுத்தக்குறி:

தொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத பாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
06-ஏப்-201722:09:14 IST Report Abuse
ezhumalaiyaan 1969 ல் தன் தள்ளாத வயதில் கொட்டும் மழையில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் அரசாங்கம் மது விலக்கு கொள்கையை அமுல்படுத்த வற்புறுத்தினார்.ஆனால்i அன்றிருந்த இளமை முறுக்கில் கேட்டாரா கருணாநிதி..விஷச்செடிக்கு இப்போது வயது 40 வயதாகி மரமாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
06-ஏப்-201721:27:45 IST Report Abuse
ezhumalaiyaan HARBAJAN SINGH அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kumutha Sankar - australia,ஆஸ்திரேலியா
04-ஏப்-201713:08:37 IST Report Abuse
Kumutha Sankar இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அர்மன் சிங் சிது என்பவரின் சாதனை.. - டைம்சு ஆஃப் இந்தியா அர்மன் சிங் எனும் பஞ்சாபியர் சாலை பாதுகாப்பு இயக்கம் நடத்துபவர். எனினும் நெடுஞ்சாலைகளில் மது ஒழிப்பு வழக்கு என்பது முதன்மையாக பாலுவை வழக்கு தொடுக்க வைத்த பாமக ராமதாசு அவர்களையே சாரும். பாமக பாலு தொடர்ந்த வழக்கில் 2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு, அதை எதிர்த்து செயாவின் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கிலேயே அர்மன் சிங் மனுவும் சேர்க்கப்பட்டது. இப்போது தீர்ப்பு வெளியாகிய நிலையில் டைம்சு ஆஃப் இந்தியா அர்மன் சிங்கை ஹீரோவாக தூக்கி பிடிக்க, இவ்வழக்கின் முதன்மை மனுதாரரான சமூக நீதி பேரவை பாலுவையும், பாமக வையும் மறைத்துவிட்டது. வடநாட்டான் தன் இனப்பாசத்தை காட்ட நேர்மையின்றி, பாமக எனும் தமிழர் கட்சியை மறைத்து, அர்மன் சிங்கை தூக்கி பிடிக்கிறான். போகட்டும்.. மது ஒழிப்பு என்பதில் மைல் கல்லான இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததில் பாமக பாலுவையோ, ராமதாசையோ பாராட்ட.. தமிழ்நாட்டில்.. ஊடகங்களுக்கு மனமுண்டா? அரசியல்வாதிகளுக்கு மனம் உண்டா? புரட்சியாளர்களுக்கு மனம் உண்டா? (இப்பதிவு டிசம்பர் 19 அன்று எழுதியது. இன்றும் அர்மன் சிங் தி இந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெய் கிந்த் கும்பலால் முன்னிறுத்தப்படுகிறார். நம் சகோதரர்களுக்கும் பாமக வை பாராட்ட மனம் இல்லை.. அவனும் மாறவில்லை.நாமும் மாறவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X