தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை| Dinamalar

தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை

Added : ஏப் 03, 2017 | கருத்துகள் (4)
Advertisement

லாகூர்: பாகிஸ்தானில் உள்ள ஒரு தர்காவில் மனநலன் பாதிக்கப்பட்ட நிர்வாகி, 20 பேரை கொடுமைப்படுத்தி, கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான, பாகிஸ்தானில், சர்கோதா மாவட்டத்தில், முகம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. இதன் நிர்வாகி, அப்துல் வாகீத், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். தர்காவுக்கு வந்திருந்த, 20 பேரை, நேற்று முன்தினம், அப்துல் வாகீத்தும், அவரது உதவியாளர்களும், மயக்க மருந்து கொடுத்து, நிர்வாணமாக்கி உள்ளனர். பின், அவர்கள் அனைவரையும் கத்தியால் குத்தியும், இரும்புத்தடிகளால் சரமாரியாக அடித்தும், படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, வாகீத்தும், கூட்டாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் நடந்த தர்காவுக்கு வருவோர், தங்கள் பாவங்களை போக்குவதற்காக, தர்காவை நடத்தும் நிர்வாகிகளிடம், விருப்பப்பட்டு தடிகளால் அடி வாங்கிக் கொள்வது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, வாகீத்தும், கூட்டாளிகளும், தர்காவுக்கு வந்தவர்களுக்கு மயக்க மருந்து தந்து, கண்மூடித்தனமாக தாக்கி படுகொலை செய்துள்ளதாக, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.



வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
03-ஏப்-201716:13:58 IST Report Abuse
தஞ்சை மன்னர் இவர்களை விட்டு வைப்பது ஆபத்துதான்
Rate this:
Share this comment
Cancel
Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா
03-ஏப்-201712:27:50 IST Report Abuse
Saudi_Indian_tamil மூர்க்கர்கள் நிறைந்த நாட்டில் இப்படி நடப்பது ஒன்றும் ஆச்சர்யம் அல்ல. மூட நம்பிக்கைகள் ஒழியும் வரை இது போன்ற துர்மரணங்கள் நிகழத்தான் செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
03-ஏப்-201710:12:20 IST Report Abuse
எமன் ஏலே milirvan நம்ம மக்களுக்கு மண்டைல மூளை இல்லடே முதல்லே கடவுளை மட்டும் நம்ப சொல்லுடா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X