அப்பப்பா, வெயில் என்ன இப்படி அடிக்குது. ரோட்டில் நடமாடவே முடியலயே,'' என்றவாறே சித்ரா, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள்.
""ஆமாக்கா, ரொம்ப அதிகந்தான். இந்தாங்க, மோர் குடிங்க, நல்லாருக்கும்,'' என்று மித்ரா கொடுத்த மோரை, மடக்கென்று குடித்து விட்டு, ""அவிநாசி தாசில்தார் "டிரான்ஸ்பர்' ஆனதில் பின்னணி யார் இருக்கா, தெரியுமா?'' என்று புதிர் போட்டாள் சித்ரா.
""யாருக்கா, சொன்னதானே தெரியும்,'' என்று மித்ரா கேட்டாள். ""அந்த தாலுகாவில், மொத்தம், ஐந்து கிராம உதவியாளர் பணிக்கு, ஐநூறுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் போட்டாங்க. அதில், தனக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு, கலெக்டருக்கு, சிபாரிசு பண்ண சொல்லி, தொகுதியின் முக்கிய "நாயகர்' . ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை போன் செஞ்சாராம். வெறுத்துப்போன தாசில்தார், நமக்கேன் வம்புன்னு நினைச்சு, "டிரான்ஸ்பர்' வாங்கிட்டே போய்ட்டாங்களாம்,'' என்று விவரித்தாள் சித்ரா.
""அதானே பார்த்தேன். இவங்ககிட்ட, நேர்மையா யார் இருந்தாலும், புடிக்காதே. சரி விடுக்கா. இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான். அந்த ஆண்டவன்தான், இவங்களை காப்பாற்றணும்,'' என்று மித்ரா சலித்து கொண்டாள். கோர்ட் வாசலில், கட்டிப்புரண்ட வக்கீல்கள் கதை தெரியுமா,'' என்று கேட்டாள் மித்ரா.
""கோர்ட்டில் வாக்குவாதம் செய்யும் வக்கீல்களை தெரியும். வம்பு சண்டை போட்ட வக்கீல்களைப்பற்றி சொன்னதானே தெரியும்,'' என்றாள் சித்ரா.
""தனக்கு வந்த சிவில் வழக்கை, மற்றொரு வக்கீலுக்கு ரெக்கமென்ட் செஞ்சிருக்கார் ஒரு வக்கீல். ஆனா, அதுக்கு வர வேண்டிய கமிஷனை, அவர் தரலை. இதுபத்தி, கோர்ட் வாசலில் நின்னு கேட்டபோது, வாக்குவாதம், கை கலப்பு பாயிடுச்சு. மத்த வக்கீல்ங்க சமாதானம் செஞ்சு, சங்கத்தில் புகார் கூறி தீர்வு காணுங்கன்னு அட்வைஸ் செஞ்சு அனுப்பினாங்க,'' என்றாள் மித்ரா.
""படம் பிடிச்ச பத்திரிகையாளரிடம் கேமராவை பறிச்ச போலீசுக்கு, டோஸ் விழுந்தது தெரியுமா,'' என்று, அடுத்த மேட்டாருக்கு தாவினாள் சித்ரா.
""எங்கே நடந்தது. என்ன விவரம்,'' என்று ஆர்வமாக மித்ரா கேட்டாள்.
""அவிநாசி ரோட்டில், தனியார் பஸ் ஒன்னு, பைக் மேல மோதி, நிற்காம போயிடுச்சு. பொதுமக்கள் பஸ்சை விரட்டிப்போய் மடக்கினாங்க. டிரைவர் தப்பிச்சாலும், கண்டக்டர் சிக்கீட்டாரு. பொது மக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்தாங்க. இதை படம் பிடித்த பத்திரிகை போட்டோகிராபரிடம், அங்கு வந்த போலீஸ்காரர் ஒருத்தர், கேமராவை பறிச்சது பிரச்னையாயிடுச்சு. அவரை பொதுமக்கள் வளைத்து பிடிக்க, அவர் ஓட்டம் பிடிச்சார். இந்த தகவலை தெரிஞ்சு, அதிகாரிங்க அவருக்கு டோஸ் விட்டாங்க. முகத்தை தொங்க விட்டபடி, அவர் திரும்பினாராம்,'' என்றாள் சித்ரா.
""நம்ம வேலை என்னவோ, அதை மட்டும் பார்க்கறது தான் நல்லது,'' என்று மித்ரா கூறினாள். நீர்நிலையை கெடுக்கறதே நீங்க; ஆனா, பராமரிக்க மாட்டீங்களான்னு கேட்டதுமே, மாநகராட்சி அதிகாரிங்க, "கப் சிப்' ஆகிட்டாங்க,'' என்று, அடுத்த விஷயத்துக்கு சென்றாள் சித்ரா.
""யாருக்கா, கிடுக்குப்பிடி போட்டது,'' ஆச்சரியத்துடன் மித்ரா கேட்டாள்.
""சீமை கருவேல மரம் அழிப்பு தொடர்பாக, கலெக்டர் ஆபீசில் ஆய்வு கூட்டம் நடந்துச்சு. டவுனுக்குள் இருக்கும் நீரோடைகளை, மாநகராட்சியே சுத்தம் செய்யணுமுன்னு, பொதுப்பணித்துறையினர் சொல்லியிருக்காங்க. அது முடியாது, பொதுப்பணித்துறை இடத்தை, நாங்க எப்படி சுத்தம் செய்யறதுன்னு, மாநகராட்சி பொறியாளர்கள் மறுத்துட்டாங்க,'' என்று சித்ரா கூறி முடிப்பதற்குள், ""அடடே! இப்படியொரு, சர்ச்சையா? அப்புறம் என்னாச்சு,'' என்று மித்ரா கேட்டாள்.
""பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், நீர்நிலைகளை பராமரிக்கும் பொறுப்<பு, உள்ளாட்சி அமைப்புக்கும் இருக்கு. அதற்கு தனி அரசாணையே இருக்குன்னு, கலெக்டர் சொல்லியிருக்கார். ஆனால், மாநகராட்சி அதிகாரிங்க, நழுவப்பார்த்தாங்க. டென்ஷன் ஆன கலெக்டர், பொதுப்பணித்துறையோட ஆறு, குளமா இருந்தா<லும், நீங்க தானே கழிவுநீரை விடறீங்க? சொத்து அவங்களோடதா இருந்தாலும், அதை "கிளீன்' செய்யற பொறுப்பு மாநகராட்சிக்கு இருக்கு. இதையும் கேட்காம இருந்தா, சி.எம்.ஏ.,வுல நாங்க பேசிக்கறோம்; சொல்ற வேலைய மட்டும் செய்யுங்க,'' என்று "டோஸ்' விட்டிருக்கார். அப்புறம் தான், "சரிங்க மேடம்ன்னு பதில் வந்திருக்கு,'' என்றாள் சித்ரா.
"" பி.டி., என்ன பண்றாரு, ஏதாச்சும் தெரியுமா?'' என்றாள் மித்ரா. ""அவர், இன்னும் வெய்ட்டிங் லிஸ்டில்தானே இருக்காரு?,'' என்றாள் சித்ரா.
""பவானி சாகர் பயிற்சி மையத்துல இருந்தவரு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து பழகிப்போச்சு. பசையான பதவியை பிடிக்க, "மேலிடத்தில்' பேசி, மறுபடியும் திருப்பூர் பி.டி., ஆகறதுக்கு முயற்சிக்கறாராம். அது தெரிஞ்சு, அவரோட எதிர் கோஷ்டிங்க, அரசுக்கு எதிரான போராட்டத்தில் அவர் கலந்துகிட்டது பற்றி, அறிக்கை அனுப்பியிருக்காங்க,''என்றாள் மித்ரா.
""கலெக்டர்கள் ஒரே மாவட்டத்துல வேலை செய்யறது சம்பந்தமா, "தினமலர்' நாளிதழில் செய்தி வந்ததும், திருப்பூர்ல ஒரே "காச் மூச்' சத்தமா இருந்துச்சு. எல்லா தாசில்தார்களுக்கும், ஒரு வருஷம் தான் "டியூட்டி'. ஆனா, குளத்துலயும், மலையிலும் இருக்கறவங்கள மட்டும் யாருமே கண்டுக்கறதில்லை. ரொம்ப வருஷம் இருக்கறதுக்கு அங்க என்னதான் ஸ்பெஷல்'னு தெரியலையேனு கலெக்டர் ஆபீஸ் பின்னாடி இருக்கற "டீக்கடை'யில ஒரு
பட்டிமன்றமே நடந்துச்சாம்,'' என்று கூறியதும், ""சரி, நான் கௌம்பறேன், மடத்துக்குளம், உடுமலையிலுள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு போகோணும்,'' என்றவாறு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE