அரசியல் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு மையை முகத்தில் பூசுங்கள்: பொங்குகிறார் பொன்.ராதா

Added : ஏப் 04, 2017 | கருத்துகள் (112)
Advertisement
பூசிக்கொள்ளுங்கள், பொங்குகிறார், பொன்.ராதா கிருஷ்ணன்

சென்னை: மைல்கல்லில் இந்தி எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சியினர் அவரவர் முகத்தில் கரியை பூசிக்கொள்ளுங்கள் என இந்தி எதிர்ப்போருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதா கண்டனம் தெரிவித்துள்ளார். மைல்கற்களில் இந்தியில் எழுத உத்தரவிட்ட கட்சியினரே திமுகவினர் தான் என ஏற்கனவே பொன்.ராதா கூறியிருந்தார். மேலும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தான் இந்தியில் எழுதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-ஏப்-201713:41:34 IST Report Abuse
S.Baliah Seer பொன்ரா சார், மைல் கல்லில் இந்தியில் எழுத உத்தரவு இட்டதே தி.மு.க தான் என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளது என்கிறீர்கள்.இரண்டோடு மூன்றாக ஒன்றை சேர்ப்பதற்கும் ,இரண்டில் ஒன்றை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக இன்னொன்றை சேர்ப்பதற்கும் தங்களுக்கு வித்தியாசம் தெரியாது.ஏனென்றால் ஆதாரை காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர்கள் நீங்கள். வருடம் 5 லட்சம் வரை தனி நபருக்கு வருமான வரி கூடாது என்று காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பார்லிமென்டில் ரகளையில் ஈடு பட்டவர்கள் நீங்கள்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீதி மன்ற தீர்ப்புக்களை மதியாமல் ஆட்சியாளர்கள் இழுத்தடித்தார்கள். அதைவிட மோசமான நிலை இன்றும் தொடர்கிறது.இவற்றை டி.வி நிகழ்ச்சி நடத்தியவர் சுட்டிக் காட்ட தங்கள் கட்சியின் முக்கிய பெண் பேச்சாளர் ஒருவர் பகிரங்கமாகவே, ஆட்சியைப் பிடிக்க ஆயிரம் பேசுவோம் என்று கூறியிருக்கிறார். ஆக ஆட்சியைப் பிடிக்க நீங்கள் மட்டும் ஆயிரம் பொய் பித்தலாட்டம் செய்யலாம்.அடுத்தவர் கொஞ்சம் பேசக் கூடாதோ?என்ன நியாயம் சார் இது?
Rate this:
Share this comment
Cancel
Rahim - Jubail,சவுதி அரேபியா
05-ஏப்-201710:26:21 IST Report Abuse
Rahim பதவி கொடுத்தவர்களுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டியதுதான் அதே நேரம் அந்த பதவி கிடைக்க காரணாமாக இருந்த மக்கள் மீதும் மொழி மீதும் கொஞ்சம் நன்றி விசுவாசம் இருக்கட்டும் திரு. பொன்னார் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
Rathinavel Siva - Chennai,இந்தியா
04-ஏப்-201723:08:40 IST Report Abuse
Rathinavel Siva தன் பதின்ம வயது வரை தமிழே தெரியாத ஒரு வடநாட்டுவாலாவால் தேமே என்று முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பிழைக்க முடியுமென்றால், ஹிந்தியே தெரியாமல் வடநாட்டிலும் பிழைக்க முடியும். ஆகவே, ஹிந்தி கற்காததால் என் வாழ்க்கையே வழுக்கிவிட்டது என்று அங்கலாய்க்கும் அன்பர்கள் கீழே உள்ளவைகளை ஆழ்ந்து யோசிப்பது நலம். 01. ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியும் கற்க யாருக்கும் தடையில்லை. 02. இந்தியா போன்ற நாடுகளில் பள்ளிகளில் ஒரு மாநில மொழியும், ஆங்கிலமும் போதும். 03. மாநில மொழி தன் மக்களிடையே உரையாடவும், ஆங்கில மொழி நாட்டில் பல மொழி பேசும் இந்தியர்களுடன் இந்தியாவிற்கு வெளியேயும் உரையாடவும் போதும். 04. பிற மொழிகள் உங்கள் வாழ்க்கை, வசதி, வேலை சார்ந்து நீங்கள் கற்றுக்கொண்டு முன்னேறலாம். அல்லது உங்கள் தாய் மொழி மற்றும் ஆங்கிலம் கொண்டு பிழைப்பு நடத்தலாம். ஹிந்தி கற்றுக்கொடுக்காததால் நான் ஏழையாக இருக்கிறேன் அதனால் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக வைக்கவேணும் என்று கேட்கும் முன்பாக.. தமிழில் உங்கள் பாண்டித்தியம் என்ன? ஆங்கிலத்தில் உங்கள் பாண்டித்தியம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தேவை. அதிலேயே பார்டரில் பாஸ் என்றால் ஹிந்தி எட்டாப்பிலேயே உங்களை பெயிலாக்கி இருக்கும். இரண்டு மொழிகளே அழுத்தம் எனும்பொழுது மூன்றாவதாக ஒரு மொழி என்பது கூடுதல் சுமை. குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு. ஆக, ஹிந்தி படிக்காமல் வடநாட்டில் பானி பூரி விற்க நீங்கள் செய்யவேண்டியது.. பான்பராக் போட்டுக்கொண்டு, எதிர் சீட்டில் கால் வைத்துக்கொண்டு, இடதும் வலதும் எச்சில் துப்பிக்கொண்டு ஹிந்தி மட்டும் படித்து வேறு மொழிகள் கற்க மண்டையில் மசாலா இல்லாத சோம்பேறிகளை ஆங்கிலம் கட்டாயம் படிக்க வைப்பதே ஆகும். ஆங்கிலத்தை நாடு முழுவதும் அனைவரும் கற்றால், பொது தொடர்பு மொழியாக ஆங்கிலத்தையும், மாநில தொடர்பு மொழியாக அவரவர் மாநில மொழியையும் கற்று களிப்புறலாம். அதை விடுத்து ஒரே ஒரு மொழியை மட்டும் கற்ற சோம்பேறியிடம் வேலை செய்ய மூன்று மொழிகளைப் படித்து பானி பூரி விற்கவேண்டிய அவசியம் இல்லை. வடநாட்டு வாலிபர்களுக்குத் தேவை ஆங்கிலம் மற்றும் தமிழ் - அப்பொழுதுதான் அடையார் ஆனந்த பவனில் இட்லிக்கு சட்னி கேட்டால் சரியாகப் பரிமாறமுடியும். மேஸ்திரி சிமென்ட் கலவையை கலக்கச் சொன்னால் சரியாகக் கலக்க முடியும். தட்டைக் கழுவச் சொன்னால் சரியாகக் கழுவ முடியும். வடநாட்டில் வேலைக்குப் போகத் துடிக்கும் ஹிந்திக் காதலர்களுக்கும் இதே பதில்தான். இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், வடநாட்டையும் தாண்டி வெளிநாடுகளில் சிலவற்றிற்கும் பயணம் செய்து பொருளீட்டுங்கள். ஹிந்தி மட்டுமே கற்பேன் என்று அடம்பிடிக்கும் உங்கள் வடநாட்டு சோம்பேறி மாணவனுக்கும் ஆங்கிலத்தின் அருமை பெருமையைச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். முடியாதென்றால் குறைந்தபட்சம் தமிழையாவது கற்று சர்வராக முன்னேறச் சொல்லுங்கள். அப்புறம் ஒரு மொழியைக் கற்க வயது ஒரு தடையில்லை. இந்த வயதில் உங்களுக்கு மண்டையில் ஹிந்தி ஏறவில்லை என்றால் எட்டாப்பில் மட்டும் எப்படி ஏறி இருக்கும் என்பது பகுத்தறியவேண்டிய சுயபரிசோதனை ஹே. ஏக் தேஷ் - அனேக் பாஷா.
Rate this:
Share this comment
shankar - milton,கனடா
05-ஏப்-201715:43:08 IST Report Abuse
shankarஇவ்வளுவு வள வள என்று எழுதாமல் முதலில் சுருக்கமாக எழுத முயற்சி செய்யுங்கள். வெள்ளைக்காரன் குடுத்த இங்கிலீஷ் தப்பும் தவறும் ஆக படிக்கலாம் ஆனால்தமிழ் மொழியுடன் கலாச்சாரத்துடன் நிறைய தொடர்பு உடைய ஹிந்தியை படிக்கமாட்டேன் என்று அடம் படிப்பது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. ஏதோ ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்து போய்விடும் என்று தப்பான வாதம் இனி எடுபடாது. ஹிந்தி படித்ததினால் மலையாளம், பெங்காலி, கன்னடம், தெலுகு போன்ற மொழிகள் அழிந்தா பொய் விட்டன? மலையாளிகள் தான் உலகில் எல்லா நாடுகளுக்கும் பொய் முன்னேறுகிறார்கள் . எதோ இங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் இலக்கண சுத்தமாக ஆங்கிலம் பேசுவது போல் பினாத்த வேண்டாம். ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட டெல்லி, மும்பை மாணவர்கள் தமிழ் மாணவர்களை விட நன்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். இதை நான் நேரில் கண்டுள்ளேன் . IAS தேர்வில் அதிகம் பாஸ் செய்வது வடநாட்டவர்கள் தான். இங்கே ஆங்கிலம் சொல்லித்தர ஒழுங்கான ஆசிரியர்கள் இல்லை. இந்த பழம் கதை பேசுவதை நிறுத்திக்கொண்டு வைக்கையில் முன்னேறப்பாருங்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X