கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விவசாயிகள், கடன், ரத்து, ஐகோர்ட்,உத்தரவு

சென்னை:'கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் அனை வரும் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் மீது, எந்த சட்ட நடவடிக்கையையும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எடுக்கக்கூடாது' என, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவசாயிகள், கடன், ரத்து, ஐகோர்ட்,உத்தரவு

மேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் கருதி ,மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தி உள்ளது. சாதகமான இந்த தீர்ப்பால், வேளாண் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவில், 'சிறு மற்றும் குறு விவசாயி களுக்கு மட்டும், பயிர் கடன் தள்ளுபடி செய்வ தாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை பாரபட்ச மானது; அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டது.

பயிர்கள் கருகின


மனுவை, நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, சிறப்பு பிளீடர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகினர்.

டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:


தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால், அணைகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன.
கர்நாடகத்துடனான தண்ணீர் தாவா பிரச்னை யால், மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விடப் படுவதில்லை. இதனால், பயிர்கள் கருகின; கால்நடைகள் இறந்து போயின. தமிழகத்தில், 2015ல் பெய்த, மழை வெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. வறுமையின் பிடிக்குள், அவர்கள் தள்ளப்பட்டுஉள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில், பெற்ற பயிர்க் கடன்களை, அவர்களால் திரும்ப செலுத்த முடியவில்லை.

தற்கொலை


தங்களுக்கு ஏற்பட்ட இழப்பாலும், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன்களை செலுத்தும்படி வந்த அழுத்தத் தாலும், விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலின் போது, பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக, அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. புதிய அரசு, 2016, மே மாதம் பதவியேற்ற பின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகை யில், ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு

வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறப்பட்டது.

அந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அரசு பிறப்பித்தது. அந்த அரசாணைப்படி, 2.5 ஏக்கர் நிலம் வரை உள்ள குறு விவசாயிகளுக்கும், 2.5 - 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஐந்து ஏக்கருக்கு மேலான நிலம் உள்ள விவசா யிகளை,விட்டு விட்டது.இந்த அரசாணை பாரபட்சமாக உள்ளதாக, வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இந்த அரசாணை பிறப்பித்தல் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்தோம். விவசாயிகள் மத்தியில், சிறு விவசாயிகள், குறு விவசாயி கள், இதர விவசாயிகள் என, பிரிக்க வேண்டிய அவசியம் ஏன்அதில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறப்பட்டது.

அந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அரசு பிறப்பித்தது. அந்த அரசாணைப்படி, 2.5 ஏக்கர் நிலம் வரை உள்ள குறு விவசாயிகளுக்கும், 2.5 - 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஐந்து ஏக்கருக்கு மேலான நிலம் உள்ள விவசாயிகளை,விட்டு விட்டது.இந்த அரசாணை பாரபட்சமாக உள்ளதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த அரசாணை பிறப்பித்தல் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்தோம். விவசாயிகள் மத்தியில், சிறு விவசாயிகள், குறு விவசாயி கள், இதர விவசாயிகள் என, பிரிக்க வேண்டிய அவசியம் ஏன்எழுந்தது என்பதை, அரசாணை யில் குறிப்பிடவில்லை.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'வருவாய் ஆதாரம் இல்லாததால், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசின் உதவி தேவைப் படுகிறது. அவர்களின் மறுவாழ்வுக்காக கடனை தள்ளுபடி செய்ய வேண்டியுள்ளது' என, கூறப் பட்டுள்ளது.மேலும், 'பெரிய விவசாயிகளை பொறுத்தவரை, அவர்களுக்கு இருக்கும் ஆதா ரங்கள் மூலம், நிலைப்படுத்திக் கொள்ளலாம்' என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசாணையை பார்க்கும் போது, குறு விவசாயி கள், சிறு விவசாயிகள், இதர விவசாயிகள் என பிரிப் பதற்கு முன், இந்த அம்சங்களை எல்லாம் உண்மையாக பரிசீலித்தார்களா என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமே வறட்சியாலும், பயிர் இழப்பாலும் பாதிக்கப் பட்டனர் என்பதற்கு, எந்த ஆதாரமும் காட்டப் படவில்லை. அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது என்பதற்காக மட்டுமே, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க, அரசு கொள்கை வகுத்துள்ளது. மொத்தம், 5,780 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி வழங்குவதன் மூலம், சிறு மற்றும் குறு விவசாயிகள், 16.94 லட்சம் பேர் பயனடைவ தாகவும், 1,980 கோடி ரூபாய் தள்ளுபடி வழங்கு வதன் மூலம், இதர விவசாயிகள், மூன்று லட்சம் பேர் பயனடைவ தாகவும் கூறப் பட்டுள்ளது.

எங்களை பொறுத்தவரை, விவசாயிகளை

Advertisement

வேறுபடுத்தி பார்க்க முடியாது. துன்பத்தில் இருந்து விவசாயிகளை மீட்பது தான் அரசின் நோக்கம் என்கிற போது, அனைத்து விவசாயி களும் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். பயனாளி களின் எண்ணிக்கை அடிப்படையில், விவசாயி களை வேறுபடுத்தி பார்ப்பது சரியல்ல.

மாநில அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது என்பதையும், நாங்கள் அறிவோம். ஏற்கனவே, 5,780 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி யால், மாநில அரசு அந்த நிதிச்சுமையை தாங்க வேண்டியுள்ளது; அனைத்து விவசாயிகளை யும் சேர்த்தால், கூடுதலாக, 1,980 கோடி ரூபாயை சுமக்க வேண்டியிருக்கும் என, தெரிவிக்கப் பட்டது. தற்போதைய,இக்கட்டான சூழ்நிலையை, மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. தமிழகம், வறட்சி மாநில மாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளனர். விவசாயிகளை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல; மத்திய அரசுக்கும் உண்டு.

எனவே, நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசை, மாநில அரசு அணுக வேண்டும். தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பரிசீலித்து, தமிழக அரசின் நிதிச் சுமையை குறைக்கும் விதத்தில், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என, நாங்கள் நம்புகிறோம். எனவே, ஐந்து ஏக்க ருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது, அரசியல் சட்டப்படி, பாகுபாடு காட்டுவது போலாகும். தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில், தேவையான உத்தரவை மூன்று மாதங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும். அதே நேரம், விவசாயிகளிடம் இருந்து, பயிர் கடன் பாக்கி தொகையை வசூலிக்க, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் நடவடிக்கை எடுக்க, தடை விதிக்கப்படுகிறது. விவசாயிகளுக்காக போராடும் அய்யாக் கண்ணு, நீதிமன்றத்துக்கு உதவிய, அட்வகேட் ஜெனரல் முத்துகுமார சாமி, மனுதாரரின் வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் ஆகியோரை, நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தர விட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில், அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்றம், அதிரடியாக சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் கருத்து:


''உயர் நீதிமன்றத்தில், விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதை தாமதிக்காமல், மாநில அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். வறட்சியால், இந்தாண்டு பயிர்க்கடன்களை, மத்திய கால கடன்களாக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதனால், விவசாயிகளின் கடன் சுமை அதிகரிக்கும். எனவே, பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

- பாண்டியன், ஒருங்கிணைப்பு தலைவர்,

தமிழக விவசாயிகள் சங்கம்.


''அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெற்றே சாகுபடி செய்கின்றனர். சாகுபடி பரப்புக்கு ஏற்ப, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், சிறு, குறு விவசாயிகள் கடனை மட்டுமே, அரசு தள்ளுபடி செய்கிறது; வறட்சி நிவாரணம் வழங்குவது சரியல்ல. உயர் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்று, பெரிய விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதோடு, வறட்சி நிவாரணத்தையும் வழங்க வேண்டும்.

- விருத்தகிரி, தேசிய தலைவர்,

இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு.


Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
05-ஏப்-201721:55:47 IST Report Abuse

Bala Sreenivasan இயற்கை சதி செய்து விவசாயம் நசிவு அடைந்தது உண்மைதான். ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்றால் அது மற்ற தொழில்களுக்கு கூட பொருந்துமே?. உதாரணமாக ஒரு சிறு தொழில் செய்ய கடன் வாங்குகிறவர் தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் நஷ்டப்பட்டால் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டால் ரத்து செய்வது சரிதானா? அப்போ யார் கடன் வாங்கினாலும் நஷ்டம் ஏற்பட்டால் வங்கிக்கு இல்லை என்று கையை விரிக்க வேண்டியதுதானா? தமிழ் நாடு என்றில்லை இதோ உத்திர பிரதேசத்திலும் நேற்று பல கோடி ரூபாய்க்கான விவசாய கடனை ரத்து செய்திருக்கிறார்கள். லாபம் வந்தால் விவசாயிக்கு, நஷ்டம் வந்தால் அரசுக்கு பருவ மழை பொய்க்காது பூச்சி போட்டு வராது நல்ல மகசூல் கிடைத்த சமயங்களில் விவசாயிகள் ஒழுங்காக கடனை திருப்பி கொடுத்திருக்கிறார்களா? இதுவும் ஒரு வகை வோட்டு வங்கி அரசியல்தான். இந்த கட்சி அந்த கட்சி என்றில்லாமல் எல்லோருமே செய்து கொண்டிருக்கிறார்கள்.

Rate this:
Navaneetha krishnan - Vedasandur,இந்தியா
21-ஏப்-201709:38:40 IST Report Abuse

Navaneetha krishnanவளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்தது யார்? அப்புறம் எப்படி மழை பெய்யும்? எப்படி நாங்கள் விவசாயம் செய்வோம்? காய்கறி விலையை ஏறும் போது எதிர்க்கும் நீங்கள் ஒரு மொபைல், துணி, AC விலை ஏறும்போது வேடிக்கை பார்க்கிறீர்கள். மேலும் காய்கறி விலை விவசாயிகள் ஏற்றி லாபம் பார்க்கவேயில்லை இடைத்தரகர்கள் தான் பார்க்கிறார்கள், எங்களுக்கு நீங்கள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டாம், இயற்கையை அழிக்காமல் எங்கள் மூலதனத்தை பாதுகாத்தாலே போதும், எங்களை ஏமாற்றாமல் உரிய விலை கொடுத்தால் போதும். ...

Rate this:
Krishna - Dindigul,இந்தியா
05-ஏப்-201721:29:50 IST Report Abuse

Krishnaதற்போதைய புள்ளிவிவரங்கள் படி விவசாய கடன் தள்ளுபடி செய்ய தொடங்கியது முதல் இவர்கள் கடனை திருப்பி செலுத்தும் விகிதம் பெருமளவு குறைஞ்சு இருக்காம்.... எந்த ஆட்சி வந்தாலும் இத சொல்லியே ஓட்டு கேப்பானுங்க அவனுக்கு ஓட்டு போட்டு தப்பிச்சுக்கலாம்.....அப்டி இல்லன்னா மத்தில BJP மாதிரி ஒரு இளிச்சவாயன் ஆட்சி அமைஞ்சா இப்டி போராட்டம் பண்ணி தப்பிச்சுக்கலாம்..... ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கி வைத்துள்ளது இந்த திருட்டு திராவிட கும்பல்கள்....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
05-ஏப்-201720:40:01 IST Report Abuse

K.Sugavanam.கண்முன்னாலேயே NPA வை ஏற்றும் கொள்ளையர்களுக்காக நம்மை மினிமம் பேலன்ஸ் வைக்க சொல்லும் அவலத்திற்கு, கவலையே படாதவர்கள்,விவசாயியின் கடனை தள்ளுபடி செய்ய கோர்ட் உத்தரவிட்டால் பச்சை மொளகாயை கடித்த மாதிரி அலறுவது ஏனுங்கோ?

Rate this:
மேலும் 81 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X