ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடாவை தடுக்க கிடுக்கிப்பிடி:கூடுதல் கண்காணிப்புக்கு 70 பார்வையாளர்கள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகர், பணம் பட்டுவாடா, தடுக்க,கிடுக்கிப்பிடி,கூடுதல் கண்காணிப்பு, 70, பார்வையாளர்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணம் பட்டுவாடா கட்டுக்கடங்காமல் போனதால்,
கிடுக்கிப்பிடி போடும் விதமாக, அதிரடிக்கு பெயர் போன, விக்ரம் பத்ராவை, சிறப்பு தேர்தல் அதிகாரியாக, தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதன் மூலம், பட்டுவாடா விவகாரத்தில், மவுனம் சாதித்த, லக்கானி ஓரங்கட்டப்பட்டு உள்ளார். அத்துடன், தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 70 நுண் பார்வையாளர் களும், ஆர்.கே.நகரில் வலம் வரத் துவங்கி உள்ளனர்.

ஆர்.கே.நகர், பணம் பட்டுவாடா, தடுக்க,கிடுக்கிப்பிடி,கூடுதல் கண்காணிப்பு, 70, பார்வையாளர்கள்

சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 12ம் தேதி நடக்கிறது. அங்கு, 62 பேர் போட்டியிட் டாலும், அ.தி.மு.க., - பன்னீர் அணி, சசிகலா அணி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

கையும் களவுமாக


சசிகலா அணி வேட்பாளர் தினகரனின் அரசியல் எதிர்காலத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் நிர்ணயிக்கும் தேர்தலாக விளங்குவதால், வெற்றி பெற, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு, பணத்தை வாரி இறைக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கட்சி பிரமுகர்கள், வாக்காளர்களுக்கு பணம் தந்தபோது, கையும் களவுமாக பிடிபட்டதில் இருந்து, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், பல இடங்களில், தினகரன் தரப்பினர், ஓட்டுக்கு பணம் கொடுக்கும், 'வீடியோ' ஆதாரங்களும் சிக்கியுள்ளன. அது, 'வாட்ஸ் ஆப்' போன்ற வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இவ்வளவு பகிரங்கமாக, பண வினியோகம் நடப்பதை பார்த்து, தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும், அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட்டுக்கு, 4,000 முதல், 5,000 ரூபாய் வரை தரப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க., மற்றும் பன்னீர் அணி உள்ளிட்ட கட்சிகள், தினகரன் தரப்பினர் பணம் பட்டுவாடா செய்வதாக, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார்

அளித்தன. பா.ஜ., தலைவர் தமிழிசை, தேர்த லையே ரத்து செய்யும்படி வலியுறுத்தினார்.

போலீசார் ஆதரவு


தி.மு.க.,வோ, தினகரனுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக குற்றம் சாட்டியது. மார்க்சிஸ்ட் கட்சி, தினகரனை தகுதி நீக்கம் செய்ய கோரியது. ஐந்து மத்திய பார்வையாளர் கள், ஏராளமான நுண் பார்வை யாளர்கள் மற்றும் எட்டு கம்பெனி துணை ராணுவம் இருந்தும், ஆர்.கே.நகரில் அரங் கேறும் முறை கேடுகளை தடுக்க முடிய வில்லை. இதை யடுத்து, சுதாரித்த தலைமை தேர்தல் ஆணையம், மேலும் கிடுக்கிப்பிடி போட முடிவெடுத்துள்ளது.

ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 22 போலீஸ் அதிகாரிகளை அதிரடியாக இட மாற்றம் செய் தது. அது மட்டுமின்றி, டில்லியில், தலைமை தேர்தல் ஆணையத்தில், தேர்தல் செலவி னத்தை கண்காணிக்கும் இயக்குனராக உள்ள, விக்ரம் பத்ராவை, தமிழகத்திற்கு உடனே சென்று, தேர்தல் பணிகளை கவனிக்கும்படி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, விக்ரம் பத்ரா, நேற்று சென்னை வந்தார். அவர், ராஜேஷ் லக்கானியை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்தார். பின், ராஜேஷ் லக்கானி, ''இனி, இவர் தான் முக்கிய பங்காற்றுவார்,'' எனக்கூறி, நிருபர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

மவுனம் சாதிப்பு


ஒரு இடைத்தேர்தலுக்கு, தலைமை தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, நேரடியாக வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், ராஜேஷ் லக்கானி அறையில் அமர்ந்து, தேர்தல் பணிகளை கண்காணிப்பார் என, தெரிகிறது.

இதன் மூலம், நேர்மையான அதிகாரியாக இருந்த போதிலும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான நடவடிக் கையில், மவுனம் சாதித் ததால், லக்கானி ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.

இதற்கிடையில், முதல் முறையாக, இரு சக்கர வாகனத்தில் சென்று,தெரு தெருவாக கண் காணிப்பில் ஈடுபட, 70 நுண் பார்வையாளர் களும், இந்த தொகுதியில் நியமிக்கப்பட்டு உள் ளனர். பொறுப்பேற்றதும் உடனடியாக, ஆர்.கே. நகருக்கு விக்ரம் பத்ரா சென்றார்; கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டார். இனியும் முறை கேடு நடந்தால், தேர்தலை ஒத்திவைக்கும்

Advertisement

முடிவை, பத்ரா பரிந்துரைப்பார் என, கூறப் படுகிறது.

தள்ளிவைக்க வாய்ப்பு : ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஜூன், 5க்குள், புதிய எம்.எல்.ஏ., தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் படி, ஜூன், 1 வரை தேர்தல் நடத்த அவகாசம் உள்ளது. அதனால், தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளது என, தலைமை தேர்தல் அலுவலகத் தினர் தெரிவித்தனர்.

அதிரடி அதிகாரி


திறமையான அதிகாரியான ராஜேஷ் லக்கானி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தியது போன்ற பணிகளுக்காக, தேசிய அளவில் விருதுகளை வாங்கியுள்ளார். இருப்பினும், தொகுதியில் பகிரங்கமாக நடக்கும் பணம் பட்டுவாடாவை, அவரால் தடுக்க முடிய வில்லை என, தேர்தல் ஆணையம் கருதுகிறது. மேலும், ஆளுங்கட்சியினர், அவரை செயல்பட விடாமல் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான், அதிரடிக்கு பெயர் பெற்ற உயர் அதிகாரி ஒருவரை, தேர்தல் ஆணையம் நேரடியாக களத்தில் இறக்கியுள்ளது.

நுண் பார்வையாளர்கள் பணி என்ன?


மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நுண் பார்வையாளர் என்ற, புதிய கண்காணிப்பு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த குழுவில், மத்திய அரசு பணியாளர்களே இடம் பெறுவர். இந்த பார்வையாளர்கள், காலை, பகல், இரவு என, மூன்று, 'ஷிப்ட்'களாக பணி புரிவர். நுண் பார்வையாளர்கள், குறுகிய தெருக் களில் செல்வதற்காக, 70 காவல் வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஒவ் வொரு வாகனத் திலும், ஒரு நுண் பார்வை யாளரும், ஒரு போலீ சாரும் செல்வர். ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்த தகவல் வந்தால், நுண் பார்வையாளர் கள்,உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பர். ரோந்து பணியில் ஈடுபடும், 70 நுண் பார்வை யாளர்கள் குழு வினரும், அசாதாரண சூழ்நிலையின் போது அங்கேயே தங்கியிருந்து, தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்கும், ஆயுதம் ஏந்திய மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்படும். நுண் பார்வையாளர்கள் வீதி வீதியாக செல்வதால், பணம் பட்டுவாடா தடுக்கப்படும். மேலும், 1,200 ஓட்டுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், தலா, ஐந்து தேர்தல் அலுவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
07-ஏப்-201720:47:12 IST Report Abuse

ராம.ராசு ஒரே ஒரு தொகுதிக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் இத்தனை பெரிய பாடு படவேண்டியுள்ளது. துணை ராணுவப் படை உடன்பட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது வருத்தமானது. இத்தனை கட்டுப்பாடுகளை மீறியும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்பது அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் இவை அத்தனைக்கும் காரணம் ஆட்சியாளர்களும், சுய நலத்திற்காக அவர்களுக்கு துணை போகின்ற உயர் அதிகாரிகளும்தான். நேர்மையான அதிகாரிகள் யார் யார் என்பது ஆளும் கட்சிக்கு எளிதாக்கத் தெரியும். அவர்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, தங்களுக்குத் தோதான அதிகாரிகளை.. அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்த தயக்கம் காட்டாமல், எதற்கும் துணிந்த சுயநல அதிகாரிகளை துணைக்கு வைத்துக்கொள்வதால்தான் இத்தனை விதி மீறல்களும் நடக்கின்றன. தமிழ் நாட்டில் உள்ள தேர்தல் அதிகாரி சரியான முறையில் நடவடிக்கை எடுத்து இருந்திருந்தால்.... காவல் துறையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுத்து இருந்தால் மாற்று தேர்தல் அதிகாரிகளும், துணை ராணுவப் படையின் துணையும் தேவையில்லாமல் போகும். ஒரு தொகுதிக்கே இப்படியென்றால்.... என்ன சொல்ல...

Rate this:
skv - Bangalore,இந்தியா
07-ஏப்-201716:35:25 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>என்ன சும்மா கிடைக்குதேன்னு வங்கின்னு ட்டு ஓட்டும் போடலேன்னா நின்னவன் சுட்டு தள்ளுவான் பார்த்துன்னேயிருங்க வெட்கமே இல்லாத ஜனங்கள் வேட்ப்பாளர்கள் என்னத்துக்கு இருக்கணும் எல்லோருமே ஊரை விட்டே போய்ருங்கோ ஆனால் அதுலேயும் ரிஸ்க் கொண்டார்களே அதிகம் உள்ள சசிகள்கூட்டம் க்கோ கொண்டாட்டமாயிடுமே

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஏப்-201715:55:10 IST Report Abuse

Endrum Indianயார் என்ன கிடுக்கிப்பிடி போட்டாலும் இந்த பண தள்ளுபடி எந்த எந்த விதத்தில் நடக்கும் என்று ஒன்றுமே சொல்லமுடியாது, டோக்கனிலிருந்து காமாட்சி விளக்கு வரை ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கொண்டு தான் இருக்கும் மக்கள் கைநீட்டி பணம் வாங்கி ஓட்டு போடுவோம் என்று சத்தியம் செய்யும் வரை, இந்த மாதிரி சிறிது கூட அறிவற்ற தற்குறிகள் இந்த பெண்களும், குடிகார கூமூட்டைகளும் இருக்கும் வரை. மெத்தப்படித்த நல்குடிமக்கள் என்று சொல்லும் நாமே ஒரு ஜியோ சிம்முக்காக வெட்கம் மானம் விட்டு கியூவில் நிற்கவில்லையா???? அப்படி இருக்கும் போது இந்த தற்குறிகள் தான் என்ன பண்ணுவார்கள்.

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X