ரூ.47,400 கோடி வருவாய்: இந்திய ரயில்வே சாதனை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.47,400 கோடி வருவாய்:
இந்திய ரயில்வே சாதனை

திட்டமிட்ட இலக்கை விட, 302 ரயில் பெட்டி களை கூடுதலாக தயாரித்தும், 47 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியும், இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

 ரூ.47,400 கோடி, வருவாய்: இந்திய, ரயில்வே, சாதனை

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய ரயில்வேயில், 2016 - 17ல், நாடு முழுவதும், 953 கி.மீ., புதிய பாதை உட்பட, 2,855 கி.மீ., அகல ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2013 கி.மீ., பாதை, மின் மயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தில், 1,503 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு, 1,306 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்துடன், ஆட்கள் இருந்த, 484 கேட்டுகள் மூடப்பட்டன; 750 பாலங்கள் சீரமைக்கப்பட்டன. 27 இடங்களில், சரக்கு குடோன்கள் அமைக்க இலக்கு நிர்ணயித்து, 45 இடங்களில் அமைக்கப் பட்டுள்ளன. 621 டீசல் மற்றும் மின்சார

இன்ஜின்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து, 658 தயாரிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் ரயில்களுக்கு, சென்னை, ஐ.சி.எப்., மற்றும் பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில், 3,978 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து, 4,280 பெட்டிகள் தயாரித்து, இந்திய ரயில்வே சாதனை படைத்து உள்ளது.ரயில்களில், 822 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதால், 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மொத்த வருவாயாக, 47 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

சிறப்பு ரயில்கள் அதிகரிப்பு


மொத்தம், 87 புதிய ரயில்கள், 51 ரயில் சேவைகள் நீட்டிப்பு, மற்றும் ஐந்து ரயில்களின் இயக்க நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விரைவு ரயிலில், கூடுதலாக, 586 பெட்டிகள் இணைத்து, 43 ஆயிரத்து, 420 பயணிகள் கூடுதலாக பயணம் செய்யலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 31 ஆயிரத்து, 438 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 293 கூடுதல் ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவு ரயிலாக,350, அதிவிரைவு ரயில்களாக, 104 மாற்றப்பட்டுள்ளன.

பயணிகள் வசதி மேம்பாடு


லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்ஸ், 67 புதிதாக நிறுவப் பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக, 150 கழிப் பறைகள், 20 இடங்களில் நடைமேடைகளில் சிறப்பு

Advertisement

கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 100 ரயில்வே ஸ்டேஷன்களில், 'வை - பை' இணைய வசதி, முன்பதிவு படுக்கை வசதிகள் உள்ளன.

பசுமைச் சூழல் நடவடிக்கை


ரயில் பெட்டிகளில், 34 ஆயிரம் பசுமை கழிப் பறைகள், 1,313 ரயில்வே ஸ்டேஷன் களில், 100 சதவீத எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. 205 ஸ்டேஷன்களில் மின் பயன் பாடு தணிக்கை செய்யப்பட்டது. 2015 வரை, 10 மெகாவாட் மட்டும் இருந்த, 'சோலார்' மின் தயாரிப்பு திறன், கூடுதலாக, நான்கு மெகாவாட் அதிகரிக்கப்பட்டுள்ளது. 78 மெகாவாட் சோலார் மின் தயாரிப்பு கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
10-ஏப்-201721:43:15 IST Report Abuse

Venkataraman Sekkarபிஜேபியின் மிக பெரிய சாதனை இது. சுரேஷ் பிரபு மிகவும் நன்றாக செயல்படுகிறார்.

Rate this:
Marshal Thampi - Nagercoil,இந்தியா
10-ஏப்-201718:33:09 IST Report Abuse

Marshal Thampi இந்த லாப கணக்கு சிறு பிள்ளைக்கு கூட தெரியும் பயண கட்டணம். சரக்கு கட்டணம் முதலியவைகள் கூட்டினால் லாபம் வரும் என்று

Rate this:
MUTHU - chennai,இந்தியா
10-ஏப்-201716:26:01 IST Report Abuse

MUTHUThey are doing something.., If they handle the Materials related to track and train effectively that will give money to buy new train, simply many railway materials are left near the tracks and shed for decades.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X