ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து: மந்திரி வீட்டில் சோதனையை அடுத்து அதிரடி Dinamalar
பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகர், தொகுதி, இடைத்தேர்தல்,ரத்து

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளதாக, நேற்றிரவு தகவல் வெளியானது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்றிரவு, 11:30 மணிக்கு வெளியானது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் கமிஷன், ரத்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர், தொகுதி, இடைத்தேர்தல்,ரத்து

இதனால், பணத்தை வாரி இறைத்த, அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர், தினகரன்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ., வாக இருந்த ஜெயலலிதா காலமானதை

அடுத்து, இத்தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

தேர்தலில், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரனும், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், முன் னாள் அமைச்சர் மதுசூதனனும் வேட்பாளர் களாக களம் இறங்கினர். தி.மு.க., சார்பில், மருதுகணேஷ் உட்பட, மொத்தம், 62 பேர் களமிறங்கினர்.

எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தினகரன் பணத்தை வாரி இறைத்து வந்தார். தேர்தல் கமிஷன் கெடுபிடி களை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக் காளர்களுக்கு வழங்கிய, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.
இதையடுத்தும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள்

Advertisement

மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.
இந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர் களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொரு வரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டில்லிக்கு விரைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கியது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆலோசனையில் இவர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை துவங்கி, இரவு வரை நடந்த நீண்ட ஆலோசனைக்கு பின், தேர்தலை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றிரவு, 11:30க்கு வெளியானது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (260)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
10-ஏப்-201722:44:58 IST Report Abuse

Visu Iyerதேர்தல் ரத்து நீதி விசாரணை நடத்துமா?

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
10-ஏப்-201722:43:34 IST Report Abuse

Visu Iyerஇந்த பணம் கணக்கில் காட்டப்பட்டதா இந்த பணம் எந்த கணக்கில் இருந்து வந்தது.. இவர்களுக்கு இத்தனை பணத்தை தந்தது யார் நமக்கு சில ஆயிரம் வாங்க எத்தனை நாள் காத்து இருந்தோம். இத்தனை கோடியை இவர்களுக்கு தந்தது யார் மோடி அரசு என்ன செய்யும்.. இது தான் கருப்பு பண ஒழிப்பா அல்லது டிஜிட்டல் இந்தியாவா

Rate this:
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
10-ஏப்-201722:43:25 IST Report Abuse

Sivan Mainthanதினகரனுடன் சேர்ந்து வெடிங் ஒர்க்கஸாப் வச்சிருந்தவர், அய்யய்யோ என்கூட இருந்த வெல்டிங் குமாரு இப்போ பெருங்கோடீஸ்வரன் நான் மட்டும் இன்னும் இத்தைகட்டீட்டு அழறேன் என்று பலபேரிடம் வருத்தப்படுவதாக செய்தி. சினிமாவுல ஒரே சீன்ல கோடீஸ்வரன் ஆனா ஒத்துப்பீங்க, எங்கண்ணன் ஆனா எகிறுவீங்க. அவரு மொகத்த பாருங்க பால்வடியற முகமா சிரிக்கிறார். டேய் எவண்டா அவன் இஞ்சித்தின்ன கொரங்காட்டம்னு சொன்னவன்......

Rate this:
மேலும் 257 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X