ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்

புதுடில்லி: ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் ஏற்படும் குளறுபடிகளை நீக்க, சில வழிமுறைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன் 10 முக்கிய அம்சங்கள்:

ஆதார் அட்டை, aadhar card


1.நாடு முழுவதும், 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 25 கோடி பேர் மட்டுமே, நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை பெற்றுள்ளனர். இவர்களில், 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர். 2.ஆதார் எண் விவரங்களையும், பான் கார்டு விவரங்களையும் இணைக்கும் பணியை, 1.08 கோடி பேர் மட்டுமே இதுவரை முடித்துள்ளனர். 3.கறுப்பு பண ஒழிப்புக்கு இது மிகவும் உதவும் என்பது வருமான வரித்துறையின் எண்ணம். அதற்காகவே இந்த ஏற்பாடு. 4.ஆதார் எண் அட்டையில், பலருக்கும் முழு பெயரும் இருக்காது.

இனிஷியல் மட்டுமே இருக்கும். ஆனால், பான் கார்டில் முழு பெயரும் இருக்கும். இதுபோன்ற நிலையில், ஆதார் எண்ணுக்கான இணைய தளம், பான் கார்டு விவரங்களை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்ளாது; ஆதாரம் தேவை எனகேட்கும். 5.இதுபோன்ற சூழ்நிலையில், பான் கார்டை ஸ்கேன் செய்து, ஆதார் இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யலாம். பான் கார்டை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஆதார் எண் நிர்வாகத்திடம் வருமான வரித்துறை கூறியுள்ளது. 6.பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்து இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை சேர்த்து இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு தரப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி விவரம் ஒன்றாக இருந்தால் தான் பிரச்னை தீரும். 7.வெவ்வேறு பெயர்களை பதிவு செய்துள்ள பெண்களுக்கு மேலும் ஒரு தீர்வு முன் வைக்கப்படுகிறது. வருமான வரி தாக்கலின் போது ஓ.டி.பி.,அதாவது ஒரு முறை பாஸ்வேர்டு, அவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த மொபைல் எண், இரண்டு தரப்பிலும் ஒன்றாக இருந்தால் சிக்கல் தீர்ந்து விடும்.
8.இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ஆதார் எண் பதிவின் போது மொபைல் போன் எண்

Advertisement

தகவலை தந்து இருக்க மாட்டார்கள். ஆதார் இணைய தளத்திற்கு சென்று மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய முயன்றாலும், அதற்கான சாப்ட்வேர் அனுமதி அளிப்பது இல்லை. 9.இதுபோன்ற சூழ்நிலையில், அருகில் உள்ள ஆதார் அலுவலகம் அல்லது ஏஜென்ட்டிடம் சென்று, போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அப்போதும் ஆதார் இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை. இதனால், மொபைல் எண்ணை பதிவு செய்வது, விலாசத்தை மாற்றுவது எளிதில் நடப்பதில்லை.10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால், ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில், வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
11-ஏப்-201719:33:48 IST Report Abuse

R.SANKARA RAMANநான் அண்மையில் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்தேன். ஆதார் கார்டில் என் தந்தையின் பெயர் ஐயர் என்பதிற்கு பதிலாக அயர் என்று பதிவாகியிருந்தது. அது செல்லாது என்று பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்தது . ஆனால் சென்ற வாரம் ஹவாலா கணக்கில் கைதானவருக்கு மூன்று பான் கார்டும் மற்றும் பாஸ்ப்போர்ட்களும் இருந்ததாம். இந்த மாதிரி கட்டுப்பாடெல்லாம் சாமானிய மனிதர்களுக்குத்தான்.

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-ஏப்-201714:02:36 IST Report Abuse

மலரின் மகள்எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. முழுமையாக எதையும் செய்யாமல் அவசர கதியில் செய்து விட்டு அவ்வப் போத்திற்கு சமாளிப்பதே நமது அரசின் வாடிக்கை. அது தொடர்கிறது. முழுமையான பெயர் ஆதாயரில் இருக்காதாம் ஆனால் பாண் கார்டில் அது முழுமையாக இருக்குமாம். அப்படி என்றால் எல்லாருக்கும் பாண் கார்டை தந்து விட்டு அதையே தேசிக்காய் ஆவணமாக ஏற்றிருக்கலாம். வேல் நாட்டு வாழ் இந்தியர்களுக்கு என்ன செய்ய. பல்வேறு கணக்குகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. வெவ்வேறு வங்கிகளில் பல்வேறு கணக்குகள் அனைத்திற்கும் தனி தனியாக இணைக்க வேண்டுமாம். பல வங்கிகள் ஒரு CUST ID முறையில் இருப்பதால் வசதி, அனைத்து கணக்குகளையும் ஒரு வங்கியில் எளிதில் இணைக்க முடிகிறது. அதிலும் வெவ்வேறு கிளைகளில் கணக்குகள் இருப்பது குழப்பம் தான். ஒரு வங்கி ஏழு சதவீத வட்டி தருகிறது, மற்றொரு வங்கி இது வரை தேர்ந்த வட்டியை ஆனதாக குறைத்து விட்டது. ஆகையால் புதிய வாய்ப்பு தொகைகளை அதிக வட்டி தரும் வங்கிக்கு செலுத்துகிறோம் புதிதாக கணக்கு வந்து விடுகிறது. இப்படியே பல கணக்குகளை கட்டியம் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ரேபிகா வங்கி அதிக வட்டி தருகிறது ஆகையால் அங்கு முதலீடு செய்கிறோம், ஆனால் சம்பள கணக்கை ஐ சி ஐ சி ஐ வங்கியில் நிர்வாகம் செலுத்துகிறது, ஆனால் குடியிருப்பு வளாகத்திலேயே எஸ் பி ஐ வங்கியும் அதன் இரண்டு எ டீ எம் உள்ளது ஆகையால் பணத்தை அங்கும் வைத்திருக்கிறோம், மேலும் அவர்கள் தான் ஒருமுறைக்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கிறார்கள். அதே நேரத்தில் பி என் பி வங்கி தான் எங்களுக்கு வீட்டு கடன் தந்தது, பி ஓ பி வாங்கி உடனைடியாக வாகன கடன் தந்தது, சி யூ பி வாங்கியோ அனைத்து ட்ரான்ஸாக்சனுக்கும் இலவசமாகவே செய்கிறது ஆகையால் அவர்களும் வங்கி கணக்கை கொடுத்திருக்கிறார்கள். கிரெடிட் கார்ட் பயன் பாடிக்காக, எஸ் சி பி, சிட்டி, எச் எஸ் பி சி வங்கிகள் கணக்கை துவக்கி கொடுத்தார்கள், அமெக்சிற்கு வங்கி கிடையாது ஆனாலும் சிறந்த கடன் அட்டையை ஒன்றிற்கு மூன்றாக தந்தார்கள். எதை எங்கே இணைப்பது. ஒரே கடியிலா அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன, ஊசி முதல் தங்கம் வரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கடைக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த லட்சணத்தில் அதை செய் இதை செய் என்று தொல்லை தருகிறார்கள். அவசர படாமல் பொறுமையாக அவர்கள் செய்யட்டும். ஒவ்வொரு வங்கிக்கும் செல்லும்போது அங்கு .ைகை ரேகையை பதிந்து அதன் மூலம் ஆதார் என்னையோ அல்லது ஆதார் ஏன் தெரிந்தால் அதை நேரடியாக பெற்று அவர்களே அதை செய்து விட்டு போகட்டும். அதை விடுத்து தினமும் தொல்லை தந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு முன்னூறுக்கும் மேல் ஈமெயிலும், எஸ் எம் எஸ் இம் இதுவரையில் வந்து விட்டது. எரிச்சல். பல வங்கிகளின் பணத்தை ஸிரோ வாக்கி விட்டு ஒரு சில வேல் நாட்டு வங்கிகளில் மட்டும் தான் வைத்திருக்கிறேன். சிறந்தது வெளி நாட்டிலிலேயே பணத்தை வைத்திருப்பது தான். தாயகத்திற்கு கொண்டுவருவதாயிருந்தால் சில வருடங்களில் இவர்கள் எல்லா குழப்பத்தையும் சரி செய்து ஒரு தெளிவு நிலைக்கு வந்த பிறகு தான் கொணரவேண்டும் அல்லது உடனைடியாக ஏதேனும் ஒரு இன்வெஸ்ட்மென்ட் என்றால் தான் கொண்டுவர வேண்டும்.

Rate this:
Muthu Veerasamy - thanjavur,இந்தியா
11-ஏப்-201710:34:06 IST Report Abuse

Muthu Veerasamyஎட்டு,ஒன்பது,பத்து ஆகிய மூன்றும் மிகவும் கவனிக்க வேண்டியவை.... யார் அரசு பணியை செய்யும்போது ஆரம்பத்திலேயே செல் போன் என்னை பயனாளியிடம் கேட்டு பதிய தவருகிறார்களோ அதற்க்கு பாமர மக்கள் தவியாய் தவிக்கின்றனர். முதலில் ஒரு வேலையை யாரு எப்படி செய்யவேண்டும் என்ற வரைமுறை சம்பத்தப்பட்ட நிறுவனம் கடைபிடிக்கவேண்டும்.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X