சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தூரில் குண்டு வெடித்த வழக்கு : மதுரையில் 2 பேரிடம் விசாரணை

Added : ஏப் 10, 2017
Advertisement

மதுரை: ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அபுபக்கர், அப்துல்ரகுமான் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு பிரிவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்தாண்டு ஏப்.,7 ல், ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகம் மற்றும் ஜூன் 15ல் கேரளா கொல்லம் நீதிமன்றம், ஆக.,1ல் கர்நாடகா மைசூரு நீதிமன்றம், செப்.,12ல் ஆந்திரா நெல்லுார், நவ.,1ல் கேரளா மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.பி.,) விசாரணை நடத்தி வருகிறது. இதில், தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த அமைப்புடன் தொடர்பு உடைய, மதுரை இஸ்மாயில்புரம் அப்பாஸ் அலி உள்ளிட்ட 4 பேரை என்.ஐ.பி., கைது செய்தது. ஏற்கனவே, இவர்களின் வீடுகளில் என்.ஐ.பி., சோதனையிட்ட நிலையில், கடந்த மார்ச் 27ம் தேதி கேரளா போலீசார் மதுரையில் உள்ள அபுபக்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.இந்நிலையில், நேற்று சித்துார் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரை செல்லுார் அபுபக்கர், மீனாட்சி பஜாரில் கடை வைத்திருக்கும் அப்துல்ரகுமான் ஆகியோரிடம் என்.ஐ.பி., அதிகாரிகள் விசாரித்தனர். ஏற்கனவே கடந்த ஜனவரியில் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தனர். தற்போது அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X