சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

நான்கு கண்கள்

Added : ஏப் 12, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
நான்கு கண்கள் Ramanujar Download

இது அவமானம். சபை நடுவே ஒரு மன்னன் தனது பிரஜையால் தோற்கடிக்கப்படுவதை நாடாளும் அகந்தை கொண்ட யாரும் ஏற்க மாட்டார்கள். குலோத்துங்கன் திரும்பத் திரும்பக் கேட்டான். உண்மையா? இது உடையவர் இல்லையா?

'ஆம் மன்னா. இவர் கூரத்தாழ்வான். நான் இவரிடமே சிறிது காலம் பாடம் கேட்டிருக்கிறேன்' என்றார் நாலுாரான். 'முட்டாள் வீரர்களே, ராமானுஜரைத் தப்பிக்க விட்டு, யாரோ ஒருவரை இழுத்து வந்திருக்கிறீர்களே, உங்களை என்ன செய்கிறேன்பார்!' என்று சீறியெழுந்தான் குலோத்துங்கன்.'மன்னா, ஒரு நிமிடம். கூரத்தாழ்வான் நீங்கள் நினைப்பது போல யாரோ ஒருவரல்லர். சிவனுக்கு விஞ்சிய தெய்வம் வேறில்லை என்று ஒப்புக்கொண்டு ராமானுஜர் கையெழுத்திட்டால் என்ன மதிப்போ, அதே மதிப்பு இவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டாலும் உண்டு' என்றார் நாலுாரான்.
குலோத்துங்கன் ஒரு கணம் வியப்பாகிப் போனான். 'ஓ, இவர் அத்தனை பெரியவரா!''ஆம் மன்னா. முதலியாண்டானும் கூரத்தாழ்வானும்தான் ராமானுஜரின் இரு கண்களும் கரங்களுமாக விளங்குபவர்கள். ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் எழுதப் பக்கபலமாக இருந்து உதவியவரே இவர்தான். உமது வீரர்களை அனுப்பி ராமானுஜரைத் தேடச் சொல்லுங்கள். அதற்கு முன்னால் கூரேசர் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போடுவதும் நடக்கட்டும். ராமானுஜர் கிடைக்காமலே போனால்கூட கூரேசர் ஒப்புக்கொண்டால் விஷயம் முடிந்தது!' என்றார் நாலுாரான்.கூரத்தாழ்வான் நாலுாரானை அமைதியாக ஒரு பார்வை பார்த்தார். தன்னிடம் பயில வந்த மாணவன்தான். சிறிது காலம் கற்ற கல்வியைக் கொண்டுதான் மன்னனின் சபையில் அமைச்சராக முடிந்திருக்கிறது. ஆனால் அக்கல்விக்கு இது எப்பேர்ப்பட்ட இழுக்கு! பொன்னும் பணமும் வசதியான வாழ்வும் பதவியும் பகட்டும் ஒரு மனிதனின் குணம் மாற்றி இழுத்துச் செல்லுமானால் கற்ற கல்விக்குப் பொருள்தான் ஏது? நல்லவேளை உடையவர் இந்தச் சபைக்கு வரவில்லை என்று அவருக்கு நிம்மதியாக இருந்தது.'என்ன யோசனை கூரேசரே? நாலுாரான் சொன்னது கேட்டதா? சிவனுக்கு விஞ்சியது ஒன்றுமில்லை என்று எழுதிக் கையெழுத்திடும்!' எக்காளமாக ஆர்ப்பரித்தான் மன்னன்.ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரப்பட்டது. கூரேசரிடம் அதை நீட்டியபோது அவர்
அமைதியாகச் சொன்னார், 'மன்னா! ஒரு வரியில் முடிவு காணக் கூடியதல்ல இது. உங்களுடைய பண்டிதர்களைக் கூப்பிடுங்கள். அவர்கள் சிவனே பெரிய கடவுள் என்பதை நிறுவட்டும். அது இல்லை என்பதை வேத, புராண, இதிகாச சாட்சிகளுடன் நான் மறுக்கிறேன். இரு தரப்பில் யார் வெல்கிறார்கள் என்று பாருங்கள். அதை ஏற்பதுதான் சரி. பொத்தாம் பொதுவாக ஒன்றை முடிவு செய்வது மன்னனுக்கு அழகல்ல.'
கோபம் உச்சிக்கு ஏறியது குலோத்துங்கனுக்கு. 'நிறுத்துங்கள் கூரேசரே. இது அரச கட்டளை. உம்முடன் வாதிட இங்கு யாரும் தயாரில்லை. ராஜகட்டளையை நிறைவேற்றுவது உமது கடமை.''முடியாதென்றால்?''உமது கதை முடியும்.'கூரேசர் புன்னகை செய்தார். அந்த ஓலையை வாங்கினார். விறுவிறுவென்று ஏதோ எழுதிக் கொடுத்தார்.படித்துப் பார்த்த நாலுாரான் திடுக்கிட்டுப் போய், 'மன்னா, இது பித்தலாட்டம். இவர் மொழி ஆட்டம் ஆடுகிறார். உங்களை மோசம் செய்யப் பார்க்கிறார்!' என்று அலறினார்.

'சிவாத் பரதரம் நாஸ்தி' என்று எழுதிக் கையெழுத்துப் போட வேண்டும் என்பதே மன்னனின் நிபந்தனை. என்றால், சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என்று பொருள். கூரேசர் அந்தச் சொற்றொடரின் இறுதியில் ஒரு கேள்விக்குறியைச் சேர்த்துவிட்டு அதன் கீழே, 'த்ரோணம் அஸ்தி தத: பரம்' என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்.சிவம் என்ற சொல்லுக்குக் 'குருணி' என்று ஒரு பொருள் உண்டு. குருணி என்றால் மரக்கால். அது ஓர் அளவு. த்ரோணம் என்பது குருணியைக் காட்டிலும் பெரிய அளவு. இந்த த்ரோணத்துக்கு தும்பைப் பூ என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆக, சிவனைக் காட்டிலும் தும்பைப் பூ பெரிது என்று எழுதியிருந்தார் கூரேசர்.துடித்துப் போனான் குலோத்துங்கன். 'இந்த அகம்பாவம் பிடித்த வைணவன் கண்ணைப் பிடுங்குங்கள்!' என்று கத்தினான்.'சிரமப்படாதீர்கள் மன்னா. உம்மைப் போன்ற ஒரு வைணவ விரோதியைக் கண்ட இந்தக் கண்கள் எனக்கு எதற்கு என்றுதான் நானே நினைத்துக் கொண்டிருந்தேன். இதோ என் கண்கள் இனி எனக்கில்லை' என்று சொல்லி, தன் விரல் நகங்களால் கண்களைக் குத்திப் பெயர்த்தார்.
வாயடைத்துப் போனது சபை. 'ஐயோ என்ன காரியம் செய்கிறீர்!' என்று பெரிய நம்பி அலறினார்.'கண்ணே போன்ற கருமாணிக்கம் நெஞ்சில் நிற்கிறான் நம்பிகளே. இந்தப் புறச் சின்னங்கள் எனக்கு எதற்கு? போகட்டும் இவை. ஒழியட்டும் இந்த மன்னனின் ஆணவத்தோடு சேர்த்து.' என்றபடியே தன் கண்களைக் குத்திக் கிழித்துக் கருமணிகளை வெளியே எடுத்து வீசினார் கூரேசர். ரத்தம் பெருகத் தொடங்கியது. ஓ, ஓ என்று சபை ஆர்ப்பரித்தது. 'எங்கே, யாரவர், நான் அவரைப் பார்க்க வேண்டும்!' என்று அத்தனை பேரும் முண்டியடித்து முன்னால் வந்தார்கள்.ரத்தம் சொட்டச் சொட்ட, வலி பொறுக்க மாட்டாமல், நிலை தடுமாறிக் கூரேசர் மயங்கி விழ, 'யாரங்கே அந்த இன்னொரு கிழவரின் கண்ணைப் பிடுங்குங்கள்!' என்றான் குலோத்துங்கன்.
'நல்ல காரியம் மன்னா. அவரும் லேசுப்பட்ட ஆளில்லை. ராமானுஜருக்கே அவர்தான் குரு!' என்றார் நாலுாரான்.எங்கே பெரிய நம்பியும் தமது கண்களைத் தாமே பிடுங்கி எறிந்துவிடப் போகிறாரோ என்கிற அச்சத்தில் மன்னனின் வீரர்கள் வேலோடு அவர் மீது பாய்ந்தார்கள். கணப்பொழுதில் அவர் கண்களில் வேலைச் சொருகி, அகழ்ந்து எறிந்தார்கள்.'அப்பா…' என்று அலறிக் கொண்டு அத்துழாய் ஓடி வந்தாள். செய்வதறியாமல் திகைத்துப் போனது சபை. சிவனோ விஷ்ணுவோ யாரோ ஒருவர் பெரியவர்களாக இருந்துவிட்டுப் போகட்டும். மன்னன் சற்று மனிதத்தன்மை
உள்ளவனாக இருக்க வேண்டாமா? ஆனால் கேட்க முடியாது. பெரிய நம்பிக்குக் கண்தான் போனது. இதைத் தட்டிக் கேட்டுவிட்டால், யாரானாலும் உயிர் போய்விடும். ஆகவே, மதமெனும் உக்கிரப் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிற மன்னனைத் தட்டிக்கேட்க யாருமில்லை. இது விதி. இன்று சபையில் பெருகிய இரு மகான்களின் உதிரம் சோழ வம்சத்தை சும்மா விடப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
மனத்துக்குள் எண்ணிக்கொண்டு அத்தனை பேரும் அவசரமாகக் கலைந்து போனார்கள்.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
00000 - 00000,இந்தியா
19-ஜூலை-201713:10:56 IST Report Abuse
00000 அன்பு என்ற தத்துவத்துக்குள் ஆண்டவனும்,அடியானும் ஒன்றேஇதை அரசர்களால் ஏற்க முடியாது(ஒரு சிலர் விதிவிலக்கு).அன்பை கொடுப்பது,பெறுவது இரண்டும் ஆண்டவனேஅடியார் ஆண்டவனிடம் ஐக்கியம்.சைவம்,வைணவம் இரண்டுமே இந்த கோட்பாட்டில் உறுதியுடன் நிற்பவை."அன்பே சிவம்" என்றது சைவம்."'அர்ப்பணித்தலே அரங்கமாகும் வைணவத்தில்".ஆகவே இவற்றை ஆராதித்த அந்த மதப்பெரியோர்கள் அவற்றில் பேதம் பார்த்ததில்லை என்பது தான் நிஜம்.அவர்கள் புனைந்து வந்த மதவேடம் அவர்கள் உள்ளத்தை மதவரம்புக்கு மட்டுமே கட்டுப்படுத்தியிருந்தால் மக்கள் இதயத்தை அவர்கள்ஆட்கொண்டிருக்க இயலாது.அப்பர்,சுந்தரர்,வாசகர் வழியேதான் உடையவரதும்.அவருடைய கோட்பாடுகளிலும் மறறும் செயல்பாடுகளிலும் அந்த ""ஒன்றே குலம்,ஒருவனேதேவன்"" என்பது நிதர்சனம்.அவர் ஆளவந்தாரின் சீடர் என்பதால் வைணவத்தில் மட்டுமே செய்ததை,ஆதிசங்கரரின் சுடராகியிருந்தால் சைவத்திலும் தந்திருப்பார்.அத்வைதமும்,விஷிஸ்டாத்வைதமும் கணவன்,மனைவியாக கைகோர்த்திருக்கும். அவருடைய ஒப்பற்ற சீடரான கூரத்தாழ்வாருக்கு ஒரு போதும்'"தும்பை பூ சிவனைவிட பெரிது""என்று எழுதி வைணவத்தை உயர்த்த வேண்டிய எண்ணம் வரவாய்ப்பிலலை.ஏன்?வைணவம் போதிப்பதே ஆசாரியர்திருவடி அடையும் சரணாகதியை.அவருடைய ஆசார்யராம் உடையவரின் திருவடியைவிட அவருக்கு பெரிது ஏதுமில்லை.அன்பினால் மட்டுமேஅதிகாரத்தால் அல்ல.ஆகவே,""த்ரோணம் அஸ்தி ததபரம்"" என்று அவர் எழுதியதற்கு""தும்பை பூ சிவனைவிட பெரிது"" என்ற அர்த்தம் வைணவத்திற்கே பொருந்தாது.ஐயாநான் சமஸ்கிருதம்,சாத்திரம் பயின்றதில்லை,அடியாராக பயில்கிறேன் ஆழ்வாரவர் வழியேஅந்த சுலோகத்திற்கு பொருள் ""த்ரோணம்-தாழ்மை, அஸ்தி-முற்றிலும் , ததபரம் -அதுபெரிது., ""முற்றிலும் தாழ்மை அதுபெரிது""என்பதுவே சைவத்திற்கு( வைணவத்திற்கும்) ஏற்றதாகும்.ஏனெனில் கையில் கபாலத்துடன் காட்சி தரும் சிவபெருமான் ஆணவத்தை அழித்தலின் அடையாளம்அப்படியிருக்க'சிவாத் பரதரம் நாஸ்தி (சிவத்தை விட உயர்ந்தது வேறில்லை)"" என்பது அம்(சிவ)மதத்தின் கோட்பாட்டை(அன்பே சிவம் என்றதை) எதிர்ப்பதேசிவன் உயர்வு,தாழ்வு என்ற பேதம் கடந்து ஆருயிராய் அண்டசராசரம் அனைத்திலும் நிறைந்துஉள்ளது என்ற சைவ,வைணவ உள்ளமை ,அவற்றை இருகண்களாக போற்றிய விஜயலயன்,கண்டராதித்தன்,ராஐராஜன்.ராஜேந்திரன் வழிவந்த இரண்டாம்குலோத்துங்கன் போற்றாத காரணம் அகந்தையேயன்றி இராமானுஜரல்லஆதி, அந்தம் கடந்த சிவப்பொருள் பூவுலகில் அவதரிக்கும்போது மட்டுமே அதை(சிவாத் பரதரம் நாஸ்தி )மனிதனுக்கு தகுதி.மனோ,வாக்கு,காயம் கடந்த அந்த சிவனின் பெருமையை வெளியிட ,அகந்தையே அகலாத அற்ப குலோத்துங்கன் எம்மாத்திரம்???ஆனால் பற்றுதலுக்கு குருவன்றி வேரில்லாத கூரத்தழ்வார் ஆதிஅந்தம் அறிந்தவர்.அடி(திரு)பணிவதே மேன்மை என்ற உண்மையை நிலைநிறுத்தவே கண்களை தியாகம் செய்தார்.இனியும்இவை ஆணவம்கொண்டோரை காணவேண்டியதில்லை என்று.ஏனெனில் அவர் மனக்கண்ணில் உடையவர் மட்டுமே இருப்பார்.குலோத்துங்கர்,நாலூரார் அங்கு இல்லை
Rate this:
Cancel
00000 - 00000,இந்தியா
16-ஜூலை-201720:03:05 IST Report Abuse
00000 அன்பு என்ற தத்துவத்துக்குள் ஆண்டவனும், அடியானும் ஒன்றே இதை அரசர்களால் ஏற்க முடியாது(ஒரு சிலர் விதிவிலக்கு).அன்பை கொடுப்பது,பெறுவது இரண்டும் ஆண்டவனேஅடியார் ஆண்டவனிடம் ஐக்கியம். சைவம்,வைணவம் இரண்டுமே இந்த கோட்பாட்டில் உறுதியுடன் நிற்பவை."அன்பே சிவம்" என்றது சைவம்."'அர்ப்பணித்தலே அரங்கமாகும் வைணவத்தில்".ஆகவே இவற்றை ஆராதித்த அந்த மதப்பெரியோர்கள் அவற்றில் பேதம் பார்த்ததில்லை என்பது தான் நிஜம்.அவர்கள் புனைந்து வந்த மதவேடம் அவர்கள் உள்ளத்தை மதவரம்புக்கு மட்டுமே கட்டுப்படுத்தியிருந்தால் மக்கள் இதயத்தை அவர்கள் ஆட்கொண்டிருக்க இயலாது. அப்பர், சுந்தரர், வாசகர் வழியேதான் உடையவரதும். அவருடைய கோட்பாடுகளிலும் மறறும் செயல்பாடுகளிலும் அந்த ""ஒன்றே குலம், ஒருவனேதேவன்"" என்பது நிதர்சனம்.அவர் ஆளவந்தாரின் சீடர் என்பதால் வைணவத்தில் மட்டுமே செய்ததை,ஆதிசங்கரரின் சுடராகியிருந்தால் சைவத்திலும் தந்திருப்பார். அத்வைதமும், விஷிஸ்டாத்வைதமும் கணவன், மனைவியாக கைகோர்த்திருக்கும். அவருடைய ஒப்பற்ற சீடரான கூரத்தாழ்வாருக்கு ஒரு போதும்'"தும்பை பூ சிவனைவிட பெரிது""என்று எழுதி வைணவத்தை உயர்த்த வேண்டிய எண்ணம் வரவாய்ப்பிலலை. ஏன்? வைணவம் போதிப்பதே ஆசாரியர் திருவடி அடையும் சரணாகதியை. அவருடைய ஆசார்யராம் உடையவரின் திருவடியைவிட அவருக்கு பெரிது ஏதுமில்லை.அன்பினால் மட்டுமே அதிகாரத்தால் அல்ல. ஆகவே, "த்ரோணம் அஸ்தி ததபரம்"" என்று அவர் எழுதியதற்கு""தும்பை பூ சிவனைவிட பெரிது"" என்ற அர்த்தம் வைணவத்திற்கே பொருந்தாது. ஐயாநான் சமஸ்கிருதம்,சாத்திரம் பயின்றதில்லை,அடியாராக பயில்கிறேன் ஆழ்வாரவர் வழியே அந்த சுலோகத்திற்கு பொருள் "த்ரோணம்-தாழ்மை, அஸ்தி-முற்றிலும், ததபரம் -அதுபெரிது., "முற்றிலும் தாழ்மை அது பெரிது" என்பதுவே சைவத்திற்கு(வைணவத்திற்கும்) ஏற்றதாகும்.ஏனெனில் கையில் கபாலத்துடன் காட்சி தரும் சிவபெருமான் ஆணவத்தை அழித்தலின் அடையாளம் அப்படியிருக்க "சிவம் பரம் நாஸ்தி (சிவத்தை விட உயர்ந்தது வேறில்லை)"" என்பது அம்மதத்தின் கோட்பாட்டை(அன்பே சிவம் என்றதை) எதிர்ப்பதே சிவன் உயர்வு, தாழ்வு என்ற பேதம் கடந்து ஆருயிராய் அண்டசராசரம் அனைத்திலும் நிறைந்து உள்ளது என்பது சைவ,வைணவத்தை இருகண்களாக போற்றிய விஜயலயன், கண்டராதித்தன், ராஐராஜன். ராஜேந்திரன் வழிவந்த இரண்டாம் குலோத்துங்கன் போற்றாத காரணம் அகந்தையேயன்றி இராமானுஜரல்ல ஆனால் பற்றுதலுக்கு குருவன்றி வேரில்லாத கூரத்தழ்வார் ஆதிஅந்தம் அறிந்தவர். அடி(திரு)பணிவதே மேன்மை என்ற உண்மையை நிலைநிறுத்தவே கண்களை தியாகம் செய்தார். இனியும் இவை ஆணவம் கொண்டோரை காணவேண்டியதில்லை என்று. ஏனெனில் அவர் மனக்கண்ணில் உடையவர் மட்டுமே இருப்பார். குலோத்துங்கர், நாலூரார் அங்கு இல்லை
Rate this:
Cancel
S Amarnath - Tirunelveli,இந்தியா
22-ஏப்-201717:17:27 IST Report Abuse
S Amarnath அக்காலத்தில் சைவம் என்பது ஒரு மதம் மற்றும் வைணவம் என்பது மற்றொரு மதம். எந்த விதத்திலும் அதிகாரமற்ற ராமானுஜர் கூட்டமே தனது மதத்தை பரப்ப லாவகமான எண்ணற்ற வித்தைகளை பயன்படுத்தி சாமான்ய மக்களின் மனதை மாற்றியிருக்கிறது என தொடர்கள் மூலம் அறிகிறோம். இரண்டாம் குலோத்துங்கன் ஒரு மன்னன் அவன் சார்ந்த ஒரு சமயத்தின் மீதான பற்ற தனக்குரிய அதிகார தோரணையோடு காற்றியிருக்கிறான். பாஞ்சாலியையும், யானையும் பிரகலாதனையும் காப்பாற்றியதாக சொல்ல படுகிற பெருமாள் கண்ணை பறிக்கும் போது போனதெங்கே? அப்படி காத்திருந்தால் மன்னனும் மாறியிருப்பான் தானே. இரண்டும் மதங்கள், இந்த கட்டுரை வைணவத்தை தூக்கி சைவத்தை கீழே போட்டு மிதிக்க பார்க்கிறது. கால மாற்றத்தால் இரண்டும் இந்து மதம் என்ற ஒன்றின் கீழ் வந்த பிறகு இந்த கட்டுரை மக்களிடையே பிரிவினையை தூண்ட பார்க்கிறது. அரியும் சிவனும் ஒன்னு. அனைத்தும் தெரிந்ததாக கூற படுகிற ராமானுஜர் கூட்டத்திற்கு ithu தெரியாதா என்ன?.
Rate this:
Manian - Chennai,இந்தியா
14-மே-201701:47:21 IST Report Abuse
Manianராமானுஜர் செய்யவேண்டிய புண்ணிய காரியங்கள் பல இருந்தன. பெரிய நம்பிகள் பலரோகம் போகவேண்டிய நிலையும் வந்தது. ராமானுஜர், பதஞ்சலி போன்றவர்கள் ஆதி சேஷன் அவதாரம். சங்கரர் வந்த பின்னேதான் அதவைதம் வளர்ந்தது. பவ்தர்களை அவர்கள் அழித்தார்கள். தனித்திற வீட்டில் சமணர்கள் வந்தார்கள். ராமானுஜர் எந்த வித்தைகளையும் செய்யவில்லை. அவர் மகாவிஷ்ணுவின் கருவியே. நான் இரன்டு மத விஷயங்களையும் தெறிந்து கொண்டேன்.ஏதிலும் வெறுப்பில்லை....
Rate this:
00000 - 00000,இந்தியா
23-ஜூலை-201717:36:34 IST Report Abuse
00000அன்பு என்ற தத்துவத்துக்குள் ஆண்டவனும்,அடியானும் ஒன்றேஇதை அரசர்களால் ஏற்க முடியாது(ஒரு சிலர் விதிவிலக்கு).அன்பை கொடுப்பது,பெறுவது இரண்டும் ஆண்டவனேஅடியார் ஆண்டவனிடம் ஐக்கியம்.சைவம்,வைணவம் இரண்டுமே இந்த கோட்பாட்டில் உறுதியுடன் நிற்பவை."அன்பே சிவம்" என்றது சைவம்."'அர்ப்பணித்தலே அரங்கமாகும் வைணவத்தில்".ஆகவே இவற்றை ஆராதித்த அந்த மதப்பெரியோர்கள் அவற்றில் பேதம் பார்த்ததில்லை என்பது தான் நிஜம்.அவர்கள் புனைந்து வந்த மதவேடம் அவர்கள் உள்ளத்தை மதவரம்புக்கு மட்டுமே கட்டுப்படுத்தியிருந்தால் மக்கள் இதயத்தை அவர்கள்ஆட்கொண்டிருக்க இயலாது.அப்பர்,சுந்தரர்,வாசகர் வழியேதான் உடையவரதும்.அவருடைய கோட்பாடுகளிலும் மறறும் செயல்பாடுகளிலும் அந்த ""ஒன்றே குலம்,ஒருவனேதேவன்"" என்பது நிதர்சனம்.அவர் ஆளவந்தாரின் சீடர் என்பதால் வைணவத்தில் மட்டுமே செய்ததை,ஆதிசங்கரரின் சுடராகியிருந்தால் சைவத்திலும் தந்திருப்பார்.அத்வைதமும்,விஷிஸ்டாத்வைதமும் கணவன்,மனைவியாக கைகோர்த்திருக்கும். அவருடைய ஒப்பற்ற சீடரான கூரத்தாழ்வாருக்கு ஒரு போதும்'"தும்பை பூ சிவனைவிட பெரிது""என்று எழுதி வைணவத்தை உயர்த்த வேண்டிய எண்ணம் வரவாய்ப்பிலலை.ஏன்?வைணவம் போதிப்பதே ஆசாரியர்திருவடி அடையும் சரணாகதியை.அவருடைய ஆசார்யராம் உடையவரின் திருவடியைவிட அவருக்கு பெரிது ஏதுமில்லை.அன்பினால் மட்டுமேஅதிகாரத்தால் அல்ல.ஆகவே, ""த்ரோணம் அஸ்தி ததபரம்"" என்று அவர் எழுதியதற்கு ""தும்பை பூ சிவனைவிட பெரிது"" என்ற அர்த்தம் வைணவத்திற்கே பொருந்தாது.ஐயாநான் சமஸ்கிருதம்,சாத்திரம் பயின்றதில்லை,அடியாராக பயில்கிறேன் ஆழ்வாரவர் வழியேஅந்த சுலோகத்திற்கு பொருள் ""த்ரோணம்-தாழ்மை, அஸ்தி-முற்றிலும் , ததபரம் -அதுபெரிது., ""முற்றிலும் தாழ்மை அதுபெரிது""என்பதுவே சைவத்திற்கு ( வைணவத்திற்கும்) ஏற்றதாகும்.ஏனெனில் கையில் கபாலத்துடன் காட்சி தரும்சிவபெருமான்ஆணவத்தைஅழித்தலின்அடையாளம்அப்படியிருக்க 'சிவாத் பரதரம் நாஸ்தி (சிவத்தை விட உயர்ந்தது வேறில்லை)"" என்பது அம்(சிவ)மதத்தின் கோட்பாட்டை(அன்பே சிவம் என்றதை) எதிர்ப்பதேசிவன் உயர்வு,தாழ்வு என்ற பேதம் கடந்து ஆருயிராய் அண்டசராசரம் அனைத்திலும் நிறைந்துஉள்ளது என்ற சைவ,வைணவ உள்ளமை ,அவற்றை இருகண்களாக போற்றிய விஜயாலயன்,கண்டராதித்தன்,ராஐராஜன்.ராஜேந்திரன் வழிவந்த இரண்டாம்குலோத்துங்கன் போற்றாத காரணம் அகந்தையேயன்றி இராமானுஜரல்லஆதி, அந்தம் கடந்த சிவப்பொருள் பூவுலகில் அவதரிக்கும்போது மட்டுமே அதை(சிவாத் பரதரம் நாஸ்தி )இயம்ப மனிதனுக்கு தகுதி.மனோ,வாக்கு,காயம் கடந்த அந்த சிவனின் பெருமையை வெளியிட ,அகந்தையே அகலாத அற்ப குலோத்துங்கன் எம்மாத்திரம்???ஆனால் பற்றுதலுக்கு குருவன்றி வேரில்லாத கூரத்தாழ்வார் ஆதிஅந்தம் அறிந்தவர்.அடி(திரு)பணிவதே மேன்மை என்ற உண்மையை நிலைநிறுத்தவே கண்களை தியாகம் செய்தார்.இனியும்இவை ஆணவம்கொண்டோரை காணவேண்டியதில்லை என்று.ஏனெனில் அவர் மனக்கண்ணில் உடையவர் மட்டுமே இருப்பார்.குலோத்துங்கர்,நாலூரார் அங்கு இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X