புதுடில்லி: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத் தில் தில்லுமுல்லு செய்து காட்ட, யார் வேண்டு மானாலும் வரலாம்' என, தேர்தல் கமிஷன் சவால் விடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நான்கில் பா.ஜ., வெற்றி பெற்றது; காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, 'ஓட்டுப்பதிவுக்கு, மின்னணு இயந்திரத்தை பயன்படுத்த கூடாது; முன்பு போல், ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த
வேண்டும்' என காங்கிரஸ் கூறி வருகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைமை யில், 16 கட்சிகளின் பிரதிநிதிகள்,
தலைமை தேர்தல் கமிஷனரை, சந்தித்து, மனு ஒன்றையும் கொடுத்தனர்.
இந்த நிலையில், டில்லியில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், யாராலும், எந்த மோசடியும் செய்ய முடியாது. 2009ம் ஆண்டில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் யாராவது தில்லுமுல்லு செய்து காட்ட முடியுமா? என தேர்தல் கமிஷன் சவால் விடுத்தது. ஆனால், யாரா லும்,சிறு தில்லுமுல்லு கூடசெய்ய முடியவில்லை.
இப்போது, ஓட்டு சீட்டு முறையை,மீண்டும் கொண்டு வர வேண்டும் என, சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அடுத்த மாதம்,
1ம் தேதி யிலிருந்து, 10ம் தேதி வரை, யார் வேண்டுமானா லும், தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு வந்து,
மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து காட்ட வேண்டும். விஞஞானிகள், தொழில் நுட்ப நிபுணர்கள் என யார் வேண்டு மானாலும் செய்து காட்டலாம். ஏனெனில், யாராலும் செய்ய முடியாது என்பதில்,தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (29)
Reply
Reply
Reply