அணி மாறும் அமைச்சர்களால் ஜெ., சமாதியில் பரபரப்பு | அணி மாறும் அமைச்சர்களால் ஜெயலலிதா சமாதியில் பரபரப்பு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணி மாறும் அமைச்சர்களால் ஜெ., சமாதியில் பரபரப்பு

Updated : ஏப் 14, 2017 | Added : ஏப் 14, 2017 | கருத்துகள் (25)
Advertisement
 அணி மாறும் அமைச்சர்களால் ஜெ., சமாதியில் பரபரப்பு , A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா

பத்து அமைச்சர்கள், ஜெ., நினைவிடம் வந்து வணங்கிய பின், அ.தி.மு.க., - பன்னீர் அணியில் இணையப் போவதாக வெளியான தகவலால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்தது தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஏப்., 9ம் தேதி நள்ளிரவு, ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதற்கு அடுத்த நாள் முதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் அடிப்படையில், ஆட்சியை கலைக்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

அதன்பின், அது வதந்தி என, தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்து, தினகரன் மீது அதிருப்தியில் உள்ள, 10 அமைச்சர்கள், ஜெ., நினைவிடம் வருவதாகவும், பின், பன்னீர் அணியில் இணையப் போவதாகவும், தகவல் பரவியது.

இதனால், நேற்று அ.தி.மு.க.,வின் இரு அணி வட்டாரத்திலும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உளவுத்துறை போலீசார், ஜெ., நினைவிடத்தை வலம் வந்தபடி இருந்தனர். இறுதியில், அதுவும் வதந்தி என, தெரிய வந்தது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-ஏப்-201721:04:14 IST Report Abuse
Rajendra Bupathi தினமலர் சொன்ன சரியாதான் இருக்கும்? அவுங்க தப்பானதை எப்பவுமே சொல்ல மாட்டாங்க? நடக்க போறதைதான் ஹாஸ்சியமாகவும், சற்று ஹேக்ஷ்சியமாகவும் தொட்டு காட்டுவார்கள்?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஏப்-201709:00:35 IST Report Abuse
Nallavan Nallavanஇந்தக் கருத்துக்குப் படிக்க வேண்டிய கருத்து என்ற சிறப்பைக் கொடுத்து ஆவலைத் தூண்டியுள்ளது தினமலர் .... இங்கே ஆவலுடன் வந்து படித்துப் பார்த்தேன் ..... ம்ம்ம்ம்ம் ........
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-ஏப்-201721:01:55 IST Report Abuse
Rajendra Bupathi அள்ளாமல் குறையாது? நெருப்பு இல்லாமல் புகையாது? தினமலர் ஹேக்ஷ்யமாக கூறினாலும் அது சரியாகவே இருக்கும்? இதற்கு கடந்த காலத்திலநடந்த பல உதாரண்ங்கள் இருக்கிறன்றன?
Rate this:
Share this comment
Cancel
Thennuran - Chennai,இந்தியா
14-ஏப்-201713:01:24 IST Report Abuse
Thennuran தினமலருக்கு என் வணக்கம் எப்படியாவது நடைபெறும் அதிமுக ஆட்சியை வெளியேற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவது மிகவும் நன்றாக தெரிகிறது. திரு. ஓபிஎஸ் அவர்களின் குழி பறித்து செயலால் இன்று கழகம் சின்ன பின்ன மாக்கப்பட்டுள்ளது. அம்மாவிற்கு அவர் செய்த நம்பிக்கை துரோகத்தை எவராலும் மறக்க முடியாது. இவர் மகாபாரத்தில் வரும் கும்பகர்ணனாக இல்லாமல் விபீடணனாக மாறி எதிர் அணியினருக்கும் சாதகம் செய்துள்ளார். அம்மா அவர்கள் 2016 தேர்தலுக்கு முன் இவர் செய்த தவறுகளுக்காக இவரை சிறிது காலம் ஒதுக்கி வைத்ததுக்காக அம்மாவை பழி வாங்கி அவர் கட்டி காத்த கழகத்தை எதிரிகளுக்கு விற்றுவிட்டார். ஆனாலும், இன்று வரை poradi கொன்றிருக்கும் கழத்தினருக்கு என் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஏப்-201714:50:48 IST Report Abuse
இந்தியன் kumarஊழல் அடிமை அதிமுக அழிவது காலத்தின் கட்டாயம்...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஏப்-201701:47:41 IST Report Abuse
தமிழ்வேல் அதே சமயத்தில், உங்களுடைய அணியின் பொது செயலர், துணை செயலர் எந்த வகையில் நல்லவர்கள் என்பதை கொஞ்சம் விளக்கினால் நல்லது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X