பதிவு செய்த நாள் :
'லெட்டர்பேடு' கட்சிகளுக்கு தடை?

புதுடில்லி: 'வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை மட்டும் அனுபவிக்கும், 'லெட்டர் பேடு' கட்சிகளின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய
அரசுக்கு, பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.

லெட்டர்பேடு, கட்சி, தடை

பா.ஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமுல் காங்., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., தேசியவாத காங்கிரஸ் ஆகிய, ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 58 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதை தவிர, அங்கீகாரம் பெறாத 1,780 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணை யத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பதிவை ரத்து செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

இதனிடையில், 'பதிவுசெய்துள்ள, 255 கட்சிகள், கடந்த, 2005ல் இருந்து எந்தத் தேர்தலிலும் போட்டி யிடவில்லை. அதே நேரத்தில் வருமான வரி சலுகை போன்றவற்றை பெற்று வருகின்றன. இந்த கட்சிகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளோம். 'அவர்களுக்கான நிதி ஆதாரம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, வருமான வரி துறைக்கு, தேர்தல் கமிஷன் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.

இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து ஆராய்ந்த, சட்டத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு,தன் பரிந்துரையை அளித்துள்ளது. அதில் கூறியுள்ள தாவது:

* அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பெயரள வுக்கு மட்டும் சிலர் கட்சியை நடத்தி வருகின்றனர்; தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படுகின்றனர்
* இதனால், அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது

Advertisement


* வருமான வரிச் சலுகை உட்பட பல்வேறு வசதிகளை பெறுவதற்காகவே சில கட்சிகள் உள்ளன
* இது போன்ற மோசடிகளை தடுக்கும் வகை யில், அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற் கான நடைமுறையை கடுமையாக்க வேண்டும்.
* பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வரும் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய, தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venguswamy Gopalakrishnan - chennai,இந்தியா
15-ஏப்-201716:24:35 IST Report Abuse

Venguswamy GopalakrishnanLETTER PAD PARTIES SHOULD BE BANNED IMMEDIATELY.

Rate this:
spr - chennai,இந்தியா
15-ஏப்-201713:52:26 IST Report Abuse

sprகாங்கிரசுக்கு எதிராக ஒரு பெரிய கட்சி என்று ஒன்று உருவாகாமல் இருக்க மக்களை, மொழி , இனம், ஜாதி என்று பலவிதத்திலும் பிரிக்க மஹான் நேரு செய்த பாவத்திற்கு ஒரு விடிவுகாலம் வருமோ? இது நடைமுறைக்கு வந்தாலே நாட்டில் பல பிரச்சினைகள் ஒழியும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லாத, தேர்தலில் போட்டியிடாத, போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்காத பல உதிரிக்கட்சிகள் ஆளும் அரசுக்கு நெருக்கடி எப்போழுதும் கொடுப்பதொன்றே நோக்கமாக எளிதில் நிறைவேற்ற இயலாத பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவதும் மக்களை திசை திருப்பி தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்வதும் குறிக்கோளாக கொண்டு இயங்குவது ஒரு முடிவுக்கு வரும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையில் காட்டிய அதே முரட்டுத்தனமான செயல்பாடுகளை திரு மோடி இதற்கும் கொண்டுவருவாரானால், ரொக்கப்பரிவர்தனை என்ற பெயரில் நடக்கும் பல துன்பங்களையும் கூட நாம் மன்னித்து விடலாம் விரைவில் அமுலுக்கு வரட்டும் இதே போல கொள்கையே இல்லாமல், சுயேச்சை உறுப்பினராக தேர்தலுக்கு எவரும் நிற்பதனையும் தடை செய்ய வேண்டும் இவர்கள் அனைவரும் காசு தரும் கட்சிக்குத் தங்கள் ஆதரவை தரும் வகையில் கட்சி தாவுவது குறையும்

Rate this:
Raja - Bangalore,இந்தியா
15-ஏப்-201713:05:46 IST Report Abuse

Rajaநல்ல காரியம். சீக்கிரம் செய்யுங்கள். தேர்தல் வந்தால் மட்டுமே கூட்டணி அமைக்க பரபரப்படையும் லெட்டர் பேட் கட்சிகளை ஒழித்து கட்டவேண்டும். தமிழகத்தில் நடந்த கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கிறேன் பேர்வழி என்று பேரம் பேசி பெரிய தேசிய கட்சியை கூட ஏமாற்றி விட்டார்கள். அனைவரும் தங்கள் சுய பலத்தில் நிற்பதே சிறந்தது.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X