அ.தி.மு.க.,வில் இரு அணிகளையும் இணைக்க ஐவர் குழு அமைப்பு: தினகரனிடம் பேசி ஓரங்கட்டும் முயற்சியில் தீவிரம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஐவா குழு, அ.தி.மு.க., இரு அணிகள், இணைக்க, அமைப்பு, தினகரன், dinakaran, admk,பன்னீர்

கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக் கும் முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தினகரனை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஐவா குழு, அ.தி.மு.க., இரு அணிகள், இணைக்க, அமைப்பு, தினகரன், dinakaran, admk,பன்னீர்

ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், சசிகலா அணி, ஆட்சியை தக்க வைத்தது; ஆனாலும், குழப்பம் தொடர்கிறது. கட்சி இரண்டாக உடைந்ததில், இரட்டை இலை சின்னமும் பறிபோயுள்ளது. எந்த நேரமும் ஆட்சிக்கு ஆபத்து என்ற சூழ்நிலையும் நிலவுகிறது. ஒரு வேளை ஆட்சி கலைந்து, தேர்தல் வந்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தும் வரை, கட்சியைக் காப்பாற்ற முடியாது என்பதை, சசிகலா அணியிலுள்ள சீனியர்கள் பலரும் உணரத் துவங்கியுள்ளனர்.

போர்க்கொடி


குறிப்பாக, தினகரனின் தலைமையை ஏற்க, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை என்பதை அனுபவபூர்வமாக,

அமைச்சர்கள் பலரும் அறிந்துள்ளனர். சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், அவருடனான தொடர்பை, கொஞ்சம் கொஞ்ச மாக குறைக்க துவங்கி யுள்ளனர். அடுத்த கட்டமாக, தினகர னையும் கட்சியில் இருந்து ஒதுங்கும்படி, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு, முதல் வர் பழனிசாமியும் ஆதரவாக இருப்பதால், கட்சியை இணைக்கும் முயற்சிக்கு, அவர் பச்சைக்கொடி காட்டி உள்ளார். அதனால்,ஐந்து பேர் இடம் பெற்ற குழு, தீவிரமாக களமிறங்கி உள்ளது.லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி., வைத்திலிங்கம், அமைச்சர் கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோர் இடம்பெற்ற ஐவர் அணியே, இந்த இணைப்பு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பூனைக்கு யார் மணி கட்டுவது என, பலரும் தயங்கிய நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களே, இந்த விஷயத்தை துணிச்சலுடன் முன்வைத்துள்ளனர். இதுபற்றி பேசுவதற்காக, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, தினகரனை வரவைப்பதற்கு, இவர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அங்கு வந்தால், முதல்வரும் அந்த விவாதத் தில் பங்கேற்றிருக்க முடியும். இதற்காகவே, அதை தினகரன் தரப்பு தவிர்த்து விட்டதாகத் தெரிகிறது.

வலியுறுத்தல்

அதனால், வேறு வழியின்றி, தினகரன் வீட்டிற்கே சென்று, 'நீங்கள் கட்சியிலிருந்து

Advertisement

ஒதுங்கிக் கொள்ளுங்கள்' என்று, ஐவர்அணி நேரடியாக வலியுறுத்தியுள்ளது. சீனியர் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வழி மொழிந்துள்ளனர். தினகரன் பரிந்துரையால், பதவி கிடைத்த செங்கோட்டையன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாகவும், பன்னீருக்கு
எதிராகவும் பேசிஉள்ளனர்.

எதிரணியில் இருப்போருக்கு முக்கிய பொறுப் புகள் கொடுத்து, கட்சியில் சேர்த்தாலும், பன்னீரைச் சேர்க்கக் கூடாது என, அவர்கள் கடுமையாக வாதாடியுள்ளனர். அதற்கு, ஐவர் அணியைச் சேர்ந்தவர்கள், 'பன்னீரை விலக்கி விட்டு, அந்த அணியில் இருப்போரை அழைத்து வந்தாலும், இணைப்பு நடவடிக்கை வெற்றி பெறாது; அவரை அழைத்து வந்து, அவருக்கு கட்சியில் பொதுச் செயலர் பதவி தரலாம்.

'ஏழு பேர் இடம் பெறும், வழிகாட்டுதல் குழுவை அமைத்து, கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்' என, கூறியுள்ளனர். இந்த முடிவுக்கு, சசிகலா அணியில் ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. ஐவர் அணியின் முயற்சி வெற்றியடைய வாய்ப்புள்ளதாக, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்த நம்பிக்கை ஜெயிக்கும்பட்சத்தில், கட்சி ஒன்றாகி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, இரட்டை இலைச் சின்னத்துடன், அ.தி.மு.க., எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது ஆளும் கட்சி வட்டாரம்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mv murugan - coimbatore,இந்தியா
16-ஏப்-201722:59:12 IST Report Abuse

mv muruganபன்னீரும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து.....சசியையும் தினகரனையும் மன்னார்குடி மாபியாக்களையும் முழுசாக கைகழுவினால்தான் ..அஇஅதிமுக வுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் .. இல்லையேல் தொண்டர்களும் மக்களும் விலகிவிடுவார்கள். அஇஅதிமுக அழிந்துவிடும்.. ..மனம் வலிக்கிறது இது எம் ஜி ஆர் படைத்த கட்சி.

Rate this:
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201722:51:18 IST Report Abuse

Aboobacker Siddeeqஇவங்கள் எல்லாம் கூட்டு களவாணிகள்... சசி மற்றும் தினகரனின் கைப்பாவைகள்... கோடி கோடியாக பணமும் கிலோ கணக்கில் தங்கமும் பெற்றுக்கொண்டு காலத்திற்கு ஏற்றாற்போல் நிறம் மாறும் பச்சோந்திகள்... தற்சமயம் தினகரனை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு பின்னர் அவர்களின் இலக்கை அடைந்த பின்னர் மீண்டும் சசி மற்றும் தினகரனுடன் சேர்ந்து ஆட்டை போட காத்துக்கொண்டு இருக்கிறார்கள்..எல்லாம் பதவி மோகம் தான் காரணம்.

Rate this:
Arachi - Chennai,இந்தியா
16-ஏப்-201722:46:32 IST Report Abuse

Arachiஎப்படி கொள்ளையடித்ததை காப்பாத்துறது. பயந்தே இவர்கள் ஒன்றுசேர்ந்து மாற்று காட்சிகள் வரவிடாமல் இருக்க எல்லா வியூகங்களை வகுப்பார்கள். சட்டத்திலிருந்து தப்புவதை தள்ளி போடலாம். ஆனால் நிரந்தரமாக தப்ப முடியாது. செய்திகளை பார்த்தால் இவர்களை எந்த இரட்டையிலையாலும் காப்பற்ற முடியாது.

Rate this:
மேலும் 98 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X