பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சரியான பாதையில் யோகி: மக்கள் அமோக ஆதரவு

புதுடில்லி: 'உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத், தான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம், சரியான பாதையில் செல்கிறார்' என, அம் மாநில மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

சரியான ,பாதை,யோகி: மக்கள், அமோக, ஆதரவு

உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், மொத்தமுள்ள, 403 தொகுதி களில், 325 தொகுதிகளில் வென்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது. சர்ச்சை பேச்சுகளால் கடும் விமர்சனங்களை சந்தித்த, யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவியேற்றதை, எதிர்க்கட்சிகள்

விமர்சித்தன. சட்டவிரோத இறைச்சி கடைகள் மூடல் உட்பட, பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மூலம், ஒரு மாதமாக, பலரது பாராட்டு களை யோகி ஆதித்யநாத் பெற்று வருகிறார். இது தொடர்பாக, உத்தரபிரதேசத் தைச் சேர்ந்த பத்திரிகை, மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தியது

அதன் முடிவுகள்:


முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக, 62 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். ஹிந்து கொள்கை வாதியாக கருதப்பட்ட யோகி ஆதித்யநாத், முதல்வ ராக எடுத்த நடவடிக்கைகளின் மூலம், சரியான பாதையில் செல்கிறார் என, 71 சதவீதமக்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத இறைச்சிக் கடைகள் மூடல், பெண் களை கிண்டல் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும், 'ரோமியோ' படைப் பிரிவு, வி.ஐ.பி., கலா சாரத்தை ஒழிக்கும் நடவடிக்கை, அரசு அலுவலகங் களில் பான், குட்கா பயன்படுத்த தடை போன்ற

Advertisement

நடவடிக்கை களை மக்கள் பாராட்டிஉள்ளனர். இறைச்சிக் கடைகளுக்கு எதிரான நடவடிக் கைக்கு, 38.1 சதவீதம் பேரும், ரோமியோக் களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, 25.4 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரோமியோக்களுக்கு எதிரான நடவடிக் கைக்கு, 37 சதவீத பெண்கள் ஆதரவு தெரி வித்து உள்ளனர்.இவ்வாறு கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Lemuria,இந்தியா
17-ஏப்-201723:02:16 IST Report Abuse

Ramanசிந்திக்கிறார்

Rate this:
Rajasekar K D - Kudanthai,இந்தியா
17-ஏப்-201722:28:29 IST Report Abuse

Rajasekar K Dஆரம்பம் நல்லாத்தான் இருக்கும். ஆட்சி முடியும் போது பார்ப்போம். மோடிக்கு பில்டப் கொடுத்த மாதிரி இருக்கு.

Rate this:
Revathi - Bangalore, Karnataka, India,இந்தியா
17-ஏப்-201719:52:41 IST Report Abuse

Revathiவாழ்த்துக்கள் தமிழகத்திற்கு இப்படி ஒரு முதலமைச்சர் தேவை

Rate this:
adalarasan - chennai,இந்தியா
17-ஏப்-201723:12:40 IST Report Abuse

adalarasanஉண்மைதான் மோடிஜி போல் ஐவரும் 18 மணிநேரம், ஏழ நாட்களும் உழைக்கிறார்? குடும்ப கணம் இல்லாததால்? ...

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X