சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆயுள் தாண்டி ஓடும் 13,612 பஸ்கள்:
பலிகள் அதிகரிப்பு

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், ஆயுள் காலம் முடிந்து, 13 ஆயிரத்து, 612 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், விபத்துகளில் சிக்கி, உயிரிழப்போரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆயுள், தாண்டி, ஓடும், 13,612 பஸ்கள்,பலி, அதிகரிப்பு

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், ஐந்து ஆண்டுகளில், 7,153 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டன. இருப்பினும், பல ஆண்டுகளாக, ஓட்டை, உடைசல் பஸ்கள்
மட்டுமே இயக்கப்படுகின்றன.

மழை பெய்தால் ஒழுகும் மேற்கூரை, கழன்று ஓடும் டயர்கள், உடையும் இரும்பு ராடுகள், உடைந்த படிக்கட்டுகள், கிழிந்த, 'சீட்' என, கந்தல் கோலமாகவே, அரசு பஸ்கள் காட்சி அளிக்கின்றன. இதில், ஆயுள் காலம் முடிந்த பஸ்கள், தொடர்ந்து இயக்கப்படுவதால், விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன அமைப்புசெயலர், கார்த்திகேயன் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தில், ஆறு ஆண்டுகள் அல்லது, 7 லட்சம் கி.மீ., ஓடிய பஸ்கள் கழிக்கப்பட வேண்டும். ஆனால், 60 சதவீதம் பஸ்கள், ஆயுள் காலம் முடிந்தும், இயக்கப் பட்டு வருகின்றன. இப்படி, தமிழகத்தில், 13 ஆயிரத்து, 612 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நிதி பற்றாக்குறையால், 95 சதவீதம் உதிரிபாகங்கள் புதிதாக கொள்முதல் செய்யாமல், புதுப்பித்து பொருத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

இதனால், இன்ஜினின் செயல் திறன் முற்றிலும் குறைந்து, டீசல் அதிகம் செலவாகிறது. பழைய டயர்கள், மீண்டும் புதுப்பித்து பொருத்தப்பட்டு வருவதால், சாலைகளில் பிடிமானம் கிடைப்பதில்லை. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பஸ்கள், விபத்துகளில் சிக்குகின்றன.
2010 வரை, ஆண்டிற்கு, 3,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டதால், பழைய பஸ்கள் பெருமளவில் கழிக்கப்பட்டன. ஆனால், 2011 முதல் சராசரியாக, ஆயிரம் பஸ்கள் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதால், ஆயுள் முடிந்த பஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்த பஸ்களால், கிடைக்கும் வருமானத்தை விட, அதை பராமரிக்க ஆகும் செலவு, பல மடங்கு அதிகமாவது மட்டுமல்லாது, விபத்து களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாத தாகிறது. எனவே, ஆயுள் முடிந்த பஸ்களுக்கு பதிலாக, புதிய பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan D - Boston,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201723:37:30 IST Report Abuse

Mohan Dஅம்மா வரட்டும்னு காத்திருக்கிறோம்.

Rate this:
17-ஏப்-201722:07:32 IST Report Abuse

ஜானகிராமன்.ககர்நாடகா பஸ்கள் எல்லாம் பாருங்கள்! ஆச்சர்யத்தில் வாய் பிளப்போம்! தனியாருக்கு நிகராய் ஸ்லீப்பர் பஸ்களும், பள பளக்கும் நீண்ட தூர பஸ்களும்.. நம் பஸ்கள் எல்லாம் துருப்பிடித்து, அழுக்காக, பொலிவிழந்து... ஆந்திரா பஸ்கள் எல்லாம் இப்போது மாறிப்போய் ...அருமையாக பார்த்து பார்த்து செய்கிறார்கள்! இங்கே நமக்கு 2000 ரூபாய் வந்தால் போதும். அம்மா காலில் விழுந்து, மக்கள் உயிரை எடுத்து விட்டார்கள்! அய்யா வாழ்க சொல்லி புறங்கையை நக்க வைத்தார்கள்.. ஒடுங்கிப்போன தமிழகம். ஒதுங்கிப் போங்கள்- நம்ம ஊர் பஸ் வருகுது!

Rate this:
Sivakumar Bala - Chennai,இந்தியா
17-ஏப்-201721:48:48 IST Report Abuse

Sivakumar BalaSADLY most of the buses in DHARMAPURI city are 1970end makes. No maintenance. Very few new buses. Government never gives new buses to Dharmapuri. None of current or previous government cared for DHARMAPURI. All rascals are only for begging votes. Time for Dharmapuri people to wake up and drive out outsiders and vote for new contestant who is visionary.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X