அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் பதவியை பறிக்க பன்னீர் அணி புது முயற்சி

Added : ஏப் 16, 2017
Advertisement

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், சின்னம் தொடர்பான விசாரணையை நிறுத்தி விட்டு, சசிகலா பொதுச்செயலரானது செல்லாது என, அறிவிக்கக்கோரி கொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டும்' என, பன்னீர்செல்வம் தரப்பினர், இன்று தேர்தல் கமிஷனில், புதிய மனு அளிக்க உள்ளனர். இது, தினகரனுக்கு மேலும், நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை, தேர்தல் கமிஷனில், இன்று நடக்கிறது. பன்னீர் தரப்பில், ஏற்கனவே, 42 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சசிகலா தரப்பில், 20 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய, எட்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு எந்த பதிலும் தரப்படவில்லை. இந்நிலையில், சின்னம் தொடர்பான விசாரணை, தேர்தல் கமிஷனில் இன்று நடப்பதால், இரு அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள், டில்லி விரைந்துள்ளனர்.

புதிய மனுக்கள்

அதேநேரத்தில், பன்னீர் அணியினர், புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதாவது,
● ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சின்னம் தொடர்பான விசாரணையை நிறுத்தி விட்டு, சசிகலா பொதுச்செயலரானது செல்லாது எனக்கோரி, கொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரிக்க வேண்டும்
● ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரித்து, தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த இரு கோரிக்கைகள் அடங்கிய புதிய மனுக்களை, தேர்தல் கமிஷனில், இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சசிகலா பொதுச்செயலரானது செல்லாது என, அறிவிக்கப்பட்டால், அவரால், துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட, தினகரனின் கட்சி பதவியும் காலியாகி விடும். அத்துடன், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், தினகரன் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X