அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுச்செயலராகிறார் பிரேமலதா

Added : ஏப் 16, 2017 | கருத்துகள் (5)
Advertisement
பொதுச்செயலராகிறார் பிரேமலதா

விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரது மனைவி பிரேமலதாவை, பொதுச்செயலராக்கும் முயற்சி, தே.மு.தி.க.,வில் துவங்கி உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நல பாதிப்பால், அவதிப்பட்டு வருகிறார். வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தீவிர சிகிச்சை பெற்றும், பலனில்லை. அதனால், கட்சி பணிகளில், அவரால் தீவிர கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, தன் மனைவி பிரேமலதாவை கட்சியின் பொதுச்செயலராக்க விரும்புகிறார். ஆனால், இதுதொடர்பாக ஏற்கனவே எடுத்த முயற்சிக்கு, கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர், ஆட்சேபம் தெரிவித்தனர். அதனால், பிரேமலதாவை, பொதுச்செயலராக்கும் முயற்சி, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், அந்த திட்டத்தை, மீண்டும் கையில் எடுத்துள்ளார். இதுகுறித்து, கட்சியினர் மனநிலையை அறியும் வகையில், மாநில நிர்வாகி ஒருவர் மூலம், சமூக வலை தளம் வாயிலாக, 'பல்ஸ்' பார்த்தார். பிரேமலதாவை பொதுச்செயலராக்க, 90 சதவீத நிர்வாகிகள் விரும்புவது தெரிய வந்துள்ளது. விரைவில், கட்சி பொதுக்குழுவை கூட்டி, பிரேமலதாவிற்கு மகுடம் சூட்டும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஏப்-201717:39:29 IST Report Abuse
இந்தியன் kumar கட்சியை காப்பாத்தினா சரி தான்
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
17-ஏப்-201709:08:31 IST Report Abuse
vasanthan செத்த நாய் மேல எத்தனை லாரி ஏறின என்ன?
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
17-ஏப்-201708:25:17 IST Report Abuse
Amirthalingam Sinniah பொது செயலாளர் பதவியை கொடுக்கலாம். கணவன் என்ன. பேசுகிறார் என்பதை விளக்க இவர்தான் தகுதியானவர். அடுத்தவர்களுக்கு தலைவர் மூக்குடைக்க வாய்ப்பு அதிகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X