பதிவு செய்த நாள் :
எதிர்ப்பு!
மும்முறை 'தலாக்' விவாகரத்து முறைக்கு பிரதமர்...
முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க அழைப்பு

புவனேஸ்வர்: ''மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையில், முஸ்லிம் பெண்களின் உரிமைகள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் சகோதரி களுக்கு நீதி கிடைக்க, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்,'' என, பிரதமர் மோடி உறுதியுடன் கூறினார்.

மும்முறை, 'தலாக்', விவாகரத்து ,பிரதமர், எதிர்ப்பு!

முஸ்லிம்களில், மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இதைத் தவிர, இந்த முறையில் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு முஸ்லிம் பெண்களும், பல்வேறு கோர்ட்டு களில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'தலாக் முறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

'மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறை, முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. வேறு எந்த மதத்திலும், வேறு எந்த நாட்டிலும் உள்ள முஸ்லிம்களும் இந்த முறையை பின்பற்றுவதில்லை.

அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமை களுக்கு எதிரானது இது' என, மத்திய சட்ட அமைச்சகம், தன் வாதத்தின்போது தெரிவித் தது. 'முஸ்லிம் தனி நபர் சட்டத்துக்கு எதிராக
விசாரிக்க, கோர்ட்களுக்கு உரிமை இல்லை' என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டது.


அனைவருக்கும் பொதுவானது:


இதனிடை யில், நாடு முழுவதும்,இந்தபிரச்னை குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கும் ஒடிசாவில், பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது:

சமூக நீதி அனைவருக்கும் பொதுவானது. நம் சமூகத்தில் ஏதாவது ஒரு கொடுமை நடந்தால், நாம் அனைவரும் இணைந்து, பாதிக்கப்பட்டவர் களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அந்த வகையில்,மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையால், நம் முஸ்லிம் சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும்; அவர்கள் சுரண்டப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

இந்த பிரச்னையால், முஸ்லிம் சமுதாயத்துக்குள் பிரச்னை, பிளவு ஏற்படக் கூடாது. சமூக கொடுமையை களைந்தெடுக்க, நாம் அனைவரும் இணைய வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மோடி பேசியதாக, கட்கரி தெரிவித்தார்.

புதிய உத்தரவு


இதனிடையில், தலாக் முறை குறித்து, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் புதிய உத்தரவை பிறப்பித் துள்ளது. இது குறித்து, அனைத்ந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலர் மவுலானா வாலி ரெஹ்மானி, லக்னோவில் நேற்று கூறியதாவது:
மக்கள், தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்று வதற்கு, அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித் துள்ளது. அந்த வகையில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தை பின்பற்ற, முஸ்லிம்களுக்கு உரிமை உள்ளது. மும்முறை, தலாக் கூறி விவாகரத்து பெறுவதும், அதில் ஒரு அம்சமே.

Advertisement


விளக்கம் வேண்டும்:


தலாக் கூறி விவாகரத்து பெறுவது குறித்து, இஸ்லாமிய சட்டத்தின் அடிப் படையில், சில வழி முறைகள் உள்ளன; அதை, அனைவரும் பின்பற்ற வேண்டும். எவ்வாறு இந்த விவா கரத்து முறையை பின் பற்ற வேண்டும் என்பது குறித்து, மசூதிகளில், மவுலானாக்களும், இமாம்களும் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புரட்சியை ஏற்படுத்திய மோடி அரசின் திட்டங்கள்


'பிரதமர் மோடி அரசின் திட்டங்கள், மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சிப் பணிகள்தொடருவதற்கு, 2019ல் நடைபெறும் லோக்சபா தேர்தலிலும், பா.ஜ.,வுக்கு மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டும்' என, பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த, பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
* வளர்ச்சிப் பணிகள் மூலம், புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடி அரசுக்கு, 2019 லோக்சபா தேர்தலிலும் மிகப் பெரிய ஆதரவு அளிப்போம் என, மக்கள் சபதம் ஏற்க வேண்டும்
* ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, சுகாதார திட்டங்கள், முத்ரா கடன் திட்டம், ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம் என, ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களால், மக்களின் பெரும் ஆதரவு மோடி அரசுக்கு கிடைத்துள்ளது
* ஜாதி, மதம் உள்ளிட்ட பேதங்கள் ஏதும் இல்லாமல், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கே தங்கள் ஆதரவு என்பதை, உத்தர பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்த லில், மக்கள் தெளிவாக கூறியுள்ளனர்
* பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்க ளால், மக்களுக்கு தற்போது நம்பிக்கை ஏற்பட் டுள்ளது. நம்முடைய அரசு என்று கூறத் துவங்கியுள்ளனர்
* ஒவ்வொரு துறையிலும், இந்த அரசு தன் முத்திரையை பதித்து வருகிறது. சுதந்திரத் துக்கு பிறகு, நாட்டுக்கு கிடைத்துள்ள மிக பெரிய தலைவராக மோடி விளங்குகிறார். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஏப்-201717:18:27 IST Report Abuse

Karuthukirukkanதலாக் முறை இந்த காலத்துக்கு ஒவ்வாத முறை .. அது எளிதான முறை என்று சில பேர் வாதம் செய்கின்றனர் .. அதுவும் சரி தான் .. அப்போ இதை ஒழுங்கா நடைமுறைப்படுத்த தலாக் மூலம் விவாகரத்து பெற நீதிமன்றம் போல ஒரு அமைப்பு இருக்க வேண்டும் .. போகிற போக்கில் தலாக் சொல்லி விட்டு கட்டப்பஞ்சாயத்து போல் நடந்து கொள்வது தான் இப்போது பிரச்சனை ... ஆனா இதை பற்றி மோடியும் சொம்பு தூக்கும் சங் கூட்டமும் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை .. பிற்போக்கு தனத்தின் மொத உருவமே சங் கூட்டம் தான் .. ஜசோதா பெண் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகாதா ?? அது குழந்தை திருமணமாம் ?? அடேங்கப்பா 50 வருத்தத்துக்கு முன் நம் தாத்தனுக்கெல்லாம் 17 வயதில் திருமணம் நடந்தது இல்லையா ??

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
17-ஏப்-201713:39:01 IST Report Abuse

Prabaharanமுஸ்லீம் பெண்கள் தான் தலாக் முறை வேண்டாம் என கேட்கிறார்கள். எனவே அதை மாற்றுவதில் தவறு இல்லை

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஏப்-201719:53:36 IST Report Abuse

Malick Rajaமுத்தலாக் என்பதை அறியாமல் சிலர் செய்வதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாமே தவிர அதை நீக்க சொல்ல இவ்வுலகில் யாருக்கும் அதிகாரம் இல்லை .. மேலைநாடுகளில் அவர்களின் சட்டம் எப்படி இருக்கிறதோ அதை வைக்கலாம் ஆனால் மேலை நாடுகள் கூட முத்தலாக் முறையை ரத்து என்று சொல்லவில்லை அது முடியாது என்பது தெரியும் எனவே எங்கள் நாட்டு சட்டம் இது என்று வரையறுத்து இருக்கிறார்கள் முஸ்லீம்கள் முத்தலாக் முறையை அங்கு தேவைப்பட்டால் செய்வார்கள் செய்கிறார்கள் இதில் அரசாங்கம் தலையிடுவதில்லை எனவே மூன்று முறை ஒருத்தன் தலாக் என்று சொல்லி விவாகரத்து செய்தால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொண்டால் யாரும் கேட்கவே மாட்டார்கள் கோர்ட் தீர்ப்பு சொல்லலாம் இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவே அறியாமல் எதையாவது சொல்வது மனித மாண்புக்கு எதிரானது ...

Rate this:
Capt JackSparrow - Madurai,இந்தியா
17-ஏப்-201721:23:44 IST Report Abuse

Capt JackSparrowஉலகில் 22 நாடுகளில் முத்தலாக் முறை தடை செய்ய பட்டுள்ளது.......ஈரான், சைப்ரஸ், மலேஷியா, துருக்கி, அல்ஜிரியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகள் அந்த வரிசையில் உண்டு. ...

Rate this:
Manithan - Tamilnadu,இந்தியா
17-ஏப்-201723:56:01 IST Report Abuse

Manithanநண்பர்களே...தயவு செய்து மதங்களை தூக்கி எறியுங்கள்....மனிதர்களாக இருங்கள்....மதங்கள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டவையே.....ஏன் மதம் என்னும் சனியனை பிடித்துக்கொணடே இருக்கிறீர்கள்? ...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஏப்-201717:18:55 IST Report Abuse

Malick Rajaமுத்தலாகே இல்லை அப்புறம் நீக்குவது எங்கிருந்து அறிவில்லாலாமல் ஆராயாமல் மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் செய்ததை வைத்து இல்லாததை இருப்பது போல காண்பிக்கநினைப்பது மனிதற்குரிய செயலல்லவே .." ஆட்டுக்கார் என்னிடம் இருப்பது கிடாய் என்கிறார் அனால் வந்தவர் உலக்கு பால் கொடுங்கள் என்று சொன்னால் எப்படியோ அப்படிதான்" இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாமிய நாடுகள் தடை செய்வது இயல்பானதே ஆகும் .. அங்கேயும் ஒருசில கயவர்கள் அறியாமை காரணமாக மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி முடித்ததை தடை செய்யாமல் பார்த்துக்கொண்டு இருக்க முடியும் எனவே இல்லாத ஒன்றை புகுத்தி தடை செய்கிறேன் என்றால் அது மனிதமான்பன்றே ... எனவே தீர்க்கமாக ஆராயாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது அறிவீனம் என்பதில் சந்தேகம் இல்லை ...

Rate this:
Manithan - Tamilnadu,இந்தியா
19-ஏப்-201701:53:08 IST Report Abuse

ManithanMalick raja.....neengal padithavar thane.... ...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஏப்-201710:53:13 IST Report Abuse

Malick Rajaஅதனால்தானே விளக்கம் சொல்ல முடிகிறது அன்பரே இல்லையென்றால் கிணற்றுத் தவளையாக அல்லவா இருக்கமுடியும் ...

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-ஏப்-201710:30:05 IST Report Abuse

ஜெயந்தன்எல்லோரையும் ரெண்டு பிரிவா பிரித்தாளும் சூழ்ச்சியே பிஜேபி யின் தாரக மந்திரம்...ஹிந்து-முஸ்லீம்,, ஏழை, பணக்காரன், அம்பானி- அதானி - அன்றாடம் காய்ச்சி , வாங்கி முன் வாசலில் நோட்டு மாற்ற நின்ற பாமரன்- வாங்கி பின் வாசலில் சென்று நோட்டு மாற்றிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று எவ்வளவோ சொல்லலாம்...இப்போது ஓட்டுக்காக முஸ்லிம்களையும் பிரிக்கும் தந்திரம் இது...

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X