பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வாடகை தாய் மசோதா: வக்கீல், டாக்டர்கள் எதிர்ப்பு

புதுடில்லி:லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வாடகை தாய் மசோதாவுக்கு, வக்கீல் கள், டாக்டர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 வாடகை, தாய், மசோதா,வக்கீல், டாக்டர்கள், எதிர்ப்பு

குழந்தை இல்லாத தம்பதிகள், வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்வது, இந்தியா உட்பட பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. சமூக நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது, வியாபாரமாக மாறி வருகிறது. இதனால், பல மோசடிகள் நடக்கின் றன; இதை தடுக்க, மத்திய அரசு, புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, லோக்சபாவில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவில், 'வெளிநாட்டு தம்பதியினர், இந்திய பெண்களை வாடகை தாயாக பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 'திருமணம்

செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

'சட்டப்பூர்வமாக திருமணம் செய்து, குழந்தையில் லாத தம்பதி மட்டுமே, வாடகை தாய் மூலம் குழந்தையைபெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. குழந்தையில்லா தம்பதியின், நெருங்கிய உறவினர் தான், வாடகை தாயாக இருக்க வேண்டும்' என்பது உட்பட, பல ஷரத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த மசோதா, பார்லி மென்ட், மழைக்கால கூட்ட தொடரில், நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு, டாக்டர்கள், வக்கீல்கள் பலர், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:


வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள், குழந்தையை தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளது. அப்படியிருக்கையில், வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள, அவர்களுக்கு அனுமதி மறுப்பது சரியல்ல. மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் பெற்றோர் ஆகும் உரிமையை, இந்த மசோதா பறிக்கிறது. நெருங்கிய உறவினர் தான், வாடகை தாயாக இருக்க வேண்டும் என கூறுவதும் தவறு. ஏனெனில், இதனால், அந்த

Advertisement

குழந்தையின் எதிர்காலம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறுஅவர்கள் கூறினர்.எனினும், மூத்த வக்கீலும், இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள வருமான ஷேகர் நபாடேகூறியதாவது.

தற்போது, நடிகர், நடிகையர் மற்றும் சமூகத் தில் பிரபலமானவர்களுக்கு, திருமணமே செய்து கொள்ளாமல், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, 'பேஷன்' ஆகி விட்டது. திருமணமான தம்பதியும், இனி குழந்தை பிறக்காது என, டாக்டர்கள் உறுதி அளித்த பின்தான், வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஷாஜஹான் முஹமது - Jeddah,சவுதி அரேபியா
18-ஏப்-201700:56:08 IST Report Abuse

ஷாஜஹான் முஹமது இந்தியர்களுக்கு உள்ள மரியாதையும் மதிப்பும் பாழாகி விடும். எனவே இந்த மசோதா அவசியம் நிறைவேறவேண்டும் .

Rate this:
RamRajan - Madurai,இந்தியா
17-ஏப்-201718:57:12 IST Report Abuse

RamRajanவரவேற்க தக்க மசோதா ..."வாடகை தாய் " என்ற ஒரு பெயரும் கருத்தும் யாரால் எப்படி பிரபலமானது ? திரை மறைவு செயலாக இருந்ததை யார் வியாபாரம் ஆக்கியது ? பணத்துக்காக எந்த கோட்பாடு கொள்கை தர்மம் எதுவும் இல்லாமல் எதையும் செய்ய தயராக இருக்கும் கூட்டம் இங்கே உண்டு . அப்பாவி தாய்களை ஏமாற்றம் செய்து லாபம் சம்பாதிக்கும் கூட்டம் இது.. வெளிநாட்டவருக்கு ஒருபோதும் இந்த திட்டம் அனுமதிக்க கூடாது. முகம் பாராமல் தன் குழந்தையிடம் நட்பு கொள்வது தாய்மனம் மட்டும் தான். அப்பேற்பட்ட புனிதமான தாய் பிள்ளை உறவையே கேலி கூத்தாக்கும் திட்டம் இது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள்,குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கட்டும். ஏராளமான தொட்டில் குழந்தைகள் இருக்கின்றனவே ? பின் எதற்கு வாடகை தாய் ? அந்த பெயரை கேட்கவே அருவருப்பாக இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், குடும்ப அமைப்புகள் உலகம் பாராட்டி அறிந்தவை . அதை அழிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் நாம் அனுமதிக்க கூடாது. பணத்துக்காக இந்தியர்கள் எதையம் செய்வார்கள் என்ற அவப்பெயர் உண்டாகிவிடும் . இந்தியர்களுக்கு உள்ள மரியாதையும் மதிப்பும் பாழாகி விடும். எனவே இந்த மசோதா அவசியம் நிறைவேறவேண்டும் .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201717:18:00 IST Report Abuse

Endrum Indianசட்டம் என்பது ஓட்டைகள் நிறைந்ததாக இருப்பின் வக்கீல்களுக்கு / டாக்டர்களுக்கு சாதகமாக இருக்கும், அஃதின்றி நேராக இருப்பின் அவர்களுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. அதற்குத்தான் வக்கீல்கள் /டாக்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அவ்வளவே

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X