அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வருமான வரி ,சோதனை, விஜயபாஸ்கர், பதவி, பறிக்கப்படுமா?, பிடிவாதம், தினகரன், நெருக்கடி

வருமான வரி சோதனையில் சிக்கிய, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவியை பறிக்க வேண்டும் என்பதில், மூத்த அமைச்சர்கள் பிடிவாதமாக இருப்பதால், தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. முதல்வர் பழனிசாமியும் உறுதியாக உள்ள தால், கவர்னர் சென்னை வந்ததும், அமைச்சர வையில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது.

வருமான வரி ,சோதனை, விஜயபாஸ்கர், பதவி, பறிக்கப்படுமா?, பிடிவாதம், தினகரன், நெருக்கடி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீடு, அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ஆர்.கே.நகர் தொகுதி இடை தேர்தலில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய்

பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின.

கவர்னரிடம் மனு


அந்த ஆவணத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் ஏழு பேரின் பெயர் கள் இடம் பெற்றிருந்தன. இதனால், அமைச்சர் களை நீக்க வேண்டும்; ஆட்சியை கலைக்க வேண் டும் என, பல தரப்பிலும் வலியுறுத்தப் பட்டுவருகிறது. தி.மு.க., மும்பை சென்று, கவர்னரிடமும் மனு அளித்தது.

இந்த விவகாரம் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், விஜய பாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, மூத்த அமைச்சர் கள், வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், துணை பொதுச் செயலராக உள்ள, தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், நிலைமையை சமாளிக்க வேறு வழியில்லை என்ற முடிவுக்கு முதல்வர் பழனிசாமி வந்து உள்ளார்.

தொண்டர்களின் அதிருப்தியை சம்பாதித்து

Advertisement

உள்ள சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஓரங்கட்டி, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றும் வகையில், முதல்வர் பழனிசாமி அணியை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சிலர், முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வத்தை சந்தித்து சமரச பேச்சை துவக்கி உள்ளனர்.இந்நிலையில், விஜய பாஸ்கரை நீக்கினால் தான், பேச்சு சுபமாக செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அமைச்சரை நீக்கும் முடிவில், முதல்வர் பழனிசாமி உறுதியாக உள்ளார்.

தோல்வியில் முடிந்தது


இதை அறிந்த விஜயபாஸ்கர், 'தன்னை நீக்கக் கூடாது' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரிடம் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்துள்ளது. தமிழக பொறுப்பு கவர்னர், வித்யாசாகர் ராவ், சென்னைக்கு வந்ததும், அமைச்சர் விஜய பாஸ்கரை நீக்கும் கடிதத்தை, முதல்வர் பழனிசாமி அவரிடம் வழங்குவார் என, கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், அமைச்சரவையி லும் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
17-ஏப்-201720:42:12 IST Report Abuse

G.Prabakaranஅம்மா திமுக புரட்சி தலைவி அம்மா திமுக எல்லாம் ஒரே அழுகிய குட்டையில் ஒன்றாக சேரப்போகிறது. இந்த ஊழல்வாதிகளை தாங்கி பிடித்துக் கொண்டுதான் பிஜேபி கால் ஊன்றலாம் என நினைக்கிறது. ஆகவே தான் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201713:48:56 IST Report Abuse

Appanஇவன் இந்த வயதில் அரசியல் பண்ணி எவ்வளவு பணம் சம்பாதித்து இருக்கிறான்? இப்படி அரசியல் இருக்கலாமா?

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-ஏப்-201713:40:20 IST Report Abuse

D.Ambujavalli122 எம்.எல்.ஏக்கள், including எடப்பாடி விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும். ஏழு. அமைச்சர்களும் பதிலளிக்க வேண்டியவர்கள் எனவே அவர்களும் நீக்கப்பட வேண்டியவர்களே

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X