அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரேஷன் கொள்முதல்: பல கோடி மோசடி

கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கான மளிகை பொருட்கள் கொள்முதலில், சந்தை விலையை விட, அதிக விலை நிர்ணயித்து, பல கோடி ரூபாய் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 ரேஷன், கொள்முதல்,பல கோடி, மோசடி

அதனால், அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, இந்தப் பொருட் கள் கொள்முதலை, 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவை சார்பில், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகள் நடத்தப் படுகின்றன. இவற்றில், கட்டுப்பாட்டு பிரிவில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை, குறிப்பிட்ட எடையில் வழங்கப்படுகின்றன.

கட்டுப்பாடற்ற பிரிவில், மளிகை பொருட்கள், எண்ணெய், சேமியா, கோதுமை மாவு உட்பட, 140 வகையான பொருட்கள் தேவைக்கு ஏற்ப தனியாரிடம் இருந்து வாங்கி விற்கப்படுகின்றன.

அப்படி தனியார் அல்லது நிறுவனங் களிடம் பொருட்கள் வாங்கும் போது, ஆட்சி யில் உள்ளவர்களின் துாண்டுதலால், சந்தை விலையை விட அதிக விலை நிர்ணயித்து வாங்கப்படுவதாகவும், அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும்
கூறப்படுகிறது.


இதுகுறித்து, கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறியதாவது: ஒரு ரேஷன் கடைக்கு, மாதந் தோறும் மிளகாய், தனியா, வெந்தயம், சேமியா, சோப்பு என, சராசரி யாக, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்படுகின்றன. பிரபலம் இல்லாத, தனியார் நிறுவனங் களிடம் இருந்து வாங்கப்படுகின்றன. வெந்தயம், சீரகம் உள்ளிட்ட பொருட்களை, சிறிய பாக்கெட்டில் அடைத்து, 10 - 15 ரூபாய்க்கு விற்க அனுப்புகின்றனர்.

கடைக்கு அனுப்பும், 10 ரூபாய் மதிப்புள்ள பொருளை, மொத்தமாக வாங்கும் போது, சந்தை யில், ஏழு ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால், அதை, மூன்று ரூபாய் கூடுதலாக கொடுத்து, 10 ரூபாய்க்கு வாங்குகின்றனர். கூடுதலாக தரப்படும் பணத்தை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வாங்கி, துறையின் உயர் மட்டம், இரண்டு ரூபாய்; அதிகாரி கள், ஒரு ரூபாய் என, பிரித்துக் கொள்கின்றனர்.

மொத்தத்தில், கொள்முதல் விலையில், 20 சதவீதத்தை கமிஷனாக, ஆட்சியாளர்கள் வாங்கிக் கொள்கின்றனர். இதனால், அந்தப் பொருட்களை, ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி, கூடுதல் விலைக்கு பொதுமக்களுக்கு விற்க நேரிடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

20 சதவீதம் கமிஷன்!


தமிழகத்தில், 34 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் உள்ளன. இவை, 100 பெரிய மற்றும் சிறிய பல்பொருள் அங்காடிகளை நடத்துகின்றன. இந்த அங்காடிகளுக்கு, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைசப்ளை செய்கின்றன. இந்த நிறுவனங்களிடம் இருந்து பொருட்களின் கொள்முத லுக்கு ஏற்ப, 20 சதவீதம் கமிஷனாக பெறப்படுகிறது. இதன்மூலம், ஆண்டுக்கு பல கோடி ரூபாய் கமிஷனாக கைமாறுகிறது.

Advertisement

மிரட்டி விற்பனை:


ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மளிகை பொருட்கள் தரமற்று இருப்பதால், அவற்றை மக்கள் வாங்க தயங்குகின்றனர். ஆனால், 'விற்றே ஆக வேண்டும்' என, கடை ஊழியர்களை அதிகாரிகளும், ஆட்சியாளர் களும் மிரட்டுகின்றனர். அவர்களும், 'மளிகை பொருட்கள் வாங்கினால் தான், அரிசி, சர்க்கரை தரப்படும்' என, மக்களை மிரட்டி விற்க நேரிடுகிறது.

சேமியாவில் எவ்வளவு?


திண்டுக்கல், துாத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த, இரு நிறுவனங்களிடம் இருந்து,
கூட்டுறவு சங்கங்கள், சேமியா வாங்கி, ரேஷனில் விற்கின்றன. இந்த நிறுவனங்கள் வெளிச்சந்தையில், 7.50 மற்றும் ஒன்பது ரூபாய்க்கு விற்கும், இரு ரகங்களில் தயாரா கும், 175 கிராம் சேமியாவை, கூட்டுறவு நிறுவனங்கள், 11.50 மற்றும் 12.50 ரூபாய் விலையில் கொள்முதல் செய்கின்றன. பின், அவற்றை, 15 முதல், 17 ரூபாய் விலையில் விற்கின்றன.

இந்த நிறுவனங்களிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள், மாதந்தோறும் சராசரியாக, 100 டன் சேமியாவை கொள்முதல் செய்கின்றன. ஒரு கிலோவுக்கு, 15 ரூபாய் வரை கமிஷன் வாங்கப்படுகிறது. அதை, துறையின் உயர்மட்டமும், அதிகாரிகளும் பிரித்துக் கொள்கின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஏப்-201723:36:33 IST Report Abuse

தமிழ்வேல் எது செய்தாலும் அதில் ஊழல் இல்லாமல் இருக்காது. அதோடு இந்த லட்சணத்தில் மத்தவனை வேறு குறைகூறுவது.

Rate this:
GenX Man - Syeney,ஆஸ்திரேலியா
17-ஏப்-201719:04:28 IST Report Abuse

GenX Manஇதற்கெல்லாம் நம் தமிழர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தமாட்டார்கள்.

Rate this:
17-ஏப்-201715:00:07 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்விற்க முடியாத , தரமற்ற , உண்பதற்கு லாயக்கில்லாத பொருட்களை விற்பதற்கு தான் ரேஷன் கடைகள் இருக்கிறது. அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்கி கொண்டு, அரசின் கஜானாவை காலிசெய்து இப்படிப்பட்ட கேவலமான பொருட்களை விற்பது இனியும் தேவையா? மாதா மாதம் உதவி தொகை கொடுத்து சந்தையில் தரமான பொருட்களை வாங்கி கொள்ள சொல்லலாம்.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X