அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மேயர் மலரவன் பன்னீர் அணியில் ஐக்கியம்

Added : ஏப் 16, 2017
Advertisement

சென்னை: கோவை முன்னாள் மேயர் மலரவன், தீபா பேரவையிலிருந்து விலகி, பன்னீர் அணியில் இணைந்தார்.ஜெயலலிதா மறைவுக்கு பின், முன்னாள், எம்.எல்.ஏ.,வும், கோவை முன்னாள் மேயருமான மலரவன், ஜெ., அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். எம்.ஜி.ஆர்., - அம்மா - தீபா பேரவையை உருவாக்குவதில், முக்கிய பங்காற்றினார். தீபாவுக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.ஓ.பி.எஸ்., அணிக்கு, தீபா செல்ல வேண்டும் என, மலரவன் விரும்பினார். ஆனால், ஆர்.கே.நகரில் அவர் தனித்து போட்டியிட்டதும்,
ஓ.பி.எஸ்., அணிக்கு எதிரான செயல்பாடுகளும், மலரவனுக்கு பிடிக்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த மலவரன், நேற்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

இது குறித்து, பன்னீர் அணி வெளியிட்ட அறிக்கை: கோவை வடக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், கோவை மாநகராட்சி முன்னாள் மேயருமான மலரவன், தீபா பேரவையிலிருந்து விலகி, பன்னீர்செல்வம் முன்னிலையில், பன்னீர் அணியில் இணைந்துள்ளார். அவருடன், தே.மு.தி.க., ஆலந்துார் பகுதி, வட்ட செயலர் ஏசுதாஸ் தலைமையில் அக்
கட்சியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இணைந்துள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X