அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிர்வாகத்தில் தலையீடு கூடாது : முதல்வர் நாராயணசாமி 'சுளீர்'

Added : ஏப் 16, 2017 | கருத்துகள் (3)
Advertisement

மதுரை: ''மாநில முதல்வருக்கு உரிய அதிகாரத்தை மீறி செயல்பட மாட்டேன்; அதேநேரம் நிர்வாகத்தில் பிறர் தலையிடுவதை ஏற்க முடியாது,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:முதல்வர் என்ற முறையில் ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்றதால் அரசு, நிர்வாகம் சார்ந்த எக்கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். நிர்வாகத்தை நடத்துவதற்கு முதல்வர், கவர்னர், துணை நிலை கவர்னர் இருந்தாலும் அவர்களுக்கு தனித்தனியாக
அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வருக்கான அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறேன். எனது அதிகாரத்தில் மற்றவர் தலையிடுவதை ஏற்க மாட்டேன்; அவரவர் அதிகாரம் தெரிந்து செயல்பட்டால் மாநில நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.மாநில வளர்ச்சியில்தான் தற்போது கவனம் செலுத்துகிறேன். மத்திய இணை அமைச்சராக இருந்த போது நான் கொண்டு
வந்ததால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை, முதல்வராக தற்போது நிறைவேற்றி வருகிறேன். இதற்காக மத்திய அரசுடன் சுமுக போக்குடன் உள்ளேன்; பிரதமர் மோடியுடன் மோதல் போக்கில்
ஈடுபட மாட்டேன்.தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும். அவரால் பஞ்சாப்பை காங்., கைப்பற்றியது. மணிப்பூர், கோவா வெற்றிகள் பா.ஜ.,வால்
பறிக்கப்பட்டுள்ளன.தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம் நியாயமானது. அவர்களை பிரதமர் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பா.ஜ.,விற்கு எதிராக மெகா கூட்டணியை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உருவாக்கி
வருகிறார். இக்கூட்டணி தேர்தல் கூட்டணியாக நீடிக்குமா என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-ஏப்-201719:55:10 IST Report Abuse
sankaseshan இவர் நினைத்தால் எல்லா திட்டங்களையும் 15 நாளில் நிறைவேற்றி விடுவார். கவர்னர் மோடி உதவி இல்லாமல் வாய் சொல்வீரர்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
17-ஏப்-201707:18:49 IST Report Abuse
தேச நேசன் ஏ பாஞ்சுநாள் சாமி யூனியன் பிரதேசத்தில் டம்மி முதல்வருக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரம் மட்டுமே உண்டு செயலதிகாரம் கிடையாது சும்மா பேசி வாயைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம் முன்புள்ள கவர்னர்களுக்கு கட்டிங் கொடுத்தே ஆட்சி செய்த காலம் மலையேறிவிட்டது கவர்னர் நினைத்தால் ஒரே நிமிடத்தில் நீங்கள் காலி ...கிரண் பேடி ஒரு பெண்ணென்பதால்தானே இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் ??
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
17-ஏப்-201706:10:26 IST Report Abuse
Renga Naayagi என்னமோ தெரியல மைக்க காமிச்சாலே ஆட்டேமேடிக்கா ஸ்டேட்மென்ட் வந்துடும் போல இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X