நிர்வாகத்தில் தலையீடு கூடாது : முதல்வர் நாராயணசாமி சுளீர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிர்வாகத்தில் தலையீடு கூடாது : முதல்வர் நாராயணசாமி 'சுளீர்'

Added : ஏப் 16, 2017 | கருத்துகள் (3)

மதுரை: ''மாநில முதல்வருக்கு உரிய அதிகாரத்தை மீறி செயல்பட மாட்டேன்; அதேநேரம் நிர்வாகத்தில் பிறர் தலையிடுவதை ஏற்க முடியாது,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:முதல்வர் என்ற முறையில் ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்றதால் அரசு, நிர்வாகம் சார்ந்த எக்கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். நிர்வாகத்தை நடத்துவதற்கு முதல்வர், கவர்னர், துணை நிலை கவர்னர் இருந்தாலும் அவர்களுக்கு தனித்தனியாக
அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வருக்கான அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறேன். எனது அதிகாரத்தில் மற்றவர் தலையிடுவதை ஏற்க மாட்டேன்; அவரவர் அதிகாரம் தெரிந்து செயல்பட்டால் மாநில நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.மாநில வளர்ச்சியில்தான் தற்போது கவனம் செலுத்துகிறேன். மத்திய இணை அமைச்சராக இருந்த போது நான் கொண்டு
வந்ததால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை, முதல்வராக தற்போது நிறைவேற்றி வருகிறேன். இதற்காக மத்திய அரசுடன் சுமுக போக்குடன் உள்ளேன்; பிரதமர் மோடியுடன் மோதல் போக்கில்
ஈடுபட மாட்டேன்.தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும். அவரால் பஞ்சாப்பை காங்., கைப்பற்றியது. மணிப்பூர், கோவா வெற்றிகள் பா.ஜ.,வால்
பறிக்கப்பட்டுள்ளன.தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம் நியாயமானது. அவர்களை பிரதமர் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பா.ஜ.,விற்கு எதிராக மெகா கூட்டணியை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உருவாக்கி
வருகிறார். இக்கூட்டணி தேர்தல் கூட்டணியாக நீடிக்குமா என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X