ஆந்திர அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் சிறை?

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (19)
Advertisement
ஆந்திர அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் சிறை?

அமராவதி : ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராகவோ, முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசுக்கு எதிராகவோ, சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சம், 'நெட்டிசன்'கள் மத்தியில் உருவாகி உள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலர் பதவியை வகித்து வரும், அவரது மகன், நரலோகேஷ், சமீபத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மத்தியில், நரலோகேஷ் சமீபத்தில் பேசியதாவது:நேரடி ஊடகங்கள், தெலுங்கு தேசம் கட்சிக்கு சாதகமாக உள்ளன. ஆனால், சமூக வலைதளங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும், எதிர்மறை பிரசாரங்கள் நடந்து வருகின்றன; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.நமக்கு எதிராக, சமூக வலைதளங்களில் விமர்சித்து, கருத்துக்களை பதிவிடுவோருக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் மூலம், நமக்கு எதிரான கருத்துக்கள் உலா வருவதை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

நரலோகேஷின் இந்த பேச்சால், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 'அரசுக்கு எதிராக கருத்து கூறினால், எங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்படலாம் என அஞ்சுகிறோம்' என, சமூக வலைதள எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார்.


ஏன் இந்த கோபம்?முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷ், பொதுக்கூட்டங்களில் பேசுகையில், தெலுங்கு மொழியில் சரியாக உச்சரிக்க முடியாமல் சொதப்பி வருகிறார். அவரது பேச்சு, சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது.

சமீபத்தில், அம்பேத்கரின், பிறந்த நாள் விழாவில், வாழ்த்து கூறிய நரலோகேஷ், 'இறந்த நாள் விழா' எனச் சொன்னது, சமூக வலைதளத்தில், 'வைரல்' ஆக பரவியது. தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமான, 'சைக்கிள்' என்ற வார்த்தையை, 'துாக்கில் தொங்கு' என பொருள் படும் வகையில், அவர் கூறியது, சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே, ஜாதி, மதவாத அடிப்படையில் அமைந்தது; ஊழல் மிக்கது; பணம் மட்டுமே குறிக்கோளாக உடையது' என, நரலோகேஷ் கூறிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள நரலோகேஷ், சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி, தன் கட்சியினரை துாண்டி விட்டுள்ளதாக, சமூக வலைதள எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-201713:46:02 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த அரசியல்வாதிகளின் முகத்திரை இப்போது மக்கள் முன்னால் கிழிக்கப்பட்டிருக்கிறது. தாய் மொழியான தெலுங்கை சொல்லித்தராமல் வளர்த்திருக்கிறார் இந்த அறிவாளி முதல்வர். திராவிட கட்சிகளை போல ஊருக்கு மட்டுமே உபதேசம்.
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
17-ஏப்-201712:34:26 IST Report Abuse
Amanullah அங்கே என்ன சர்வாதிகாரி ஆட்சியா நடக்கிறது...?
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
17-ஏப்-201712:33:02 IST Report Abuse
gmk1959 சமூக வலை தாளங்களில் ஆதாரம் இல்லாமல் சொல்லப்படும் குற்றாச்சாட்டுகள் மிக அதிகம் முதலில் பதிவு செய்ய்பவர்கள் பதிவு செய்து விட்டு அதேயே அவர் வைத்து இருக்கும் போலி கணக்கில் ஷேர் செய்து விட்டு ஒரிஜினல் தளத்தில் இருந்து நீக்கி விடுகின்றனர் அண்ட் கருத்தை விசுவாசிகள் எதையும் சரிபார்க்காமல் பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்று பரவ விடுகின்றனர். வழக்கு வரும் பொழுது ஒரிஜினலை தயாரித்தவர் தப்பி விடுகின்றார். ஷேர் செய்த அப்பாவி மாட்டிக்கொள்கிறான் ஒரிஜினலை போஸ்ட் செய்த களவாணி பயலை தேடி கைது செய்யவேண்டும் அதை நம் போலீசார் செய்வதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X