பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நாளை காஞ்சிபுரத்தில் கலந்தாய்வு

Added : ஏப் 17, 2017
Advertisement

செங்கல்பட்டு;காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆய்வக உதவியாளர்கள் பணியிடத்திற்கு, நாளை தேதி, கலந்தாய்வு நடைபெறுகிறது.இது குறித்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் காலியாகவுள்ள, 204 ஆய்வக உதவியாளர்கள் பணியிடத்திற்கு, 2015, மே 31ல், எழுத்து தேர்வு நடந்தது.
இதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், கடந்த, 9 மற்றும் 10ல், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.அதில், உயர் கல்வித் தகுதி, அனுபவம், வேலைவாய்ப்பு பதிவு, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இனவரி சுழற்சி முறையில் முடிவு செய்யப்பட்டது. நியமனம் பெற தகுதியுடையோரின் பெயர் பட்டியல், காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு, நாளை காலை, 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் பி.எஸ்.எஸ்., நகராட்சி மேல்நிலை பள்ளியில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களால் நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில், தங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதமுடன் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X