பொது செய்தி

தமிழ்நாடு

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கட்டாயமில்லை - ண கூறுகிறார் முதன்மை கல்வி அலுவலர்

Added : ஏப் 17, 2017
Advertisement

கோவை : ''கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த, யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை,'' என்கிறார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன்.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிப்போருக்கு, வரும் 20ம் தேதியுடன் ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிகின்றன. இங்கு படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 24ம் தேதியில் இருந்து, சிறப்பு வகுப்பு நடத்த, சில தலைமையாசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தால், சிறப்பு வகுப்பு நடத்த, ஆசிரியர்கள் தயங்குகின்றனர்.பெயர் வெளியிட விரும்பாத அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'விடைத்தாள் மதிப்பிட்டதும், ஒன்பதாம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம். பின், இருவார கால இடைவெளியில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதற்கு பின், அட்மிஷன் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். 'கோடை வெயிலின் தாக்கத்தில் ஓய்வு கிடைத்தால் தான், அடுத்த கல்வியாண்டில் உற்சாகமாக வேலை செய்ய முடியும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல, மாணவர்களுக்கும் இடைவெளி தேவை. எனவே, பத்தாம் வகுப்புக்கு, சிறப்பு வகுப்பு தேவையில்லை' என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில், ''கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த, யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. சில பள்ளிகளில், ஆசிரியர்கள் விரும்பினால், பெற்றோர் சம்மதத்துடன் வகுப்பு எடுக்கின்றனர். இந்த வகுப்புக்கு வராத மாணவர்களை, கட்டாயப்படுத்தக்கூடாது என, பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X