பொது செய்தி

தமிழ்நாடு

பிரின்டிங் இல்லாமல் ரூ.10 நாணயம் வெளியீடு

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 பிரின்டிங் இல்லாமல் ரூ.10 நாணயம் வெளியீடு

சேலம் : ''பிரின்டிங் இல்லாமல், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது,'' என, சேலம் பாராமஹால் நாணய சங்க இயக்குனர், சுல்தான் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு, நவ., 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், சில்லரை தட்டுப்பாட்டை போக்க, 10 ரூபாய் நாணயங்களை, அதிகமாக வெளியிட்டது.

அவற்றில், இந்திய ஸ்துாபி மட்டுமின்றி, அதன் மதிப்பு தொகை, அச்சிட்ட ஆண்டு ஆகிய குறிப்புகள் இல்லாமல் வெளியிடப்பட்டன. சிலவற்றில், எழுத்துகள் விரைவாக அழிந்துவிடும் வகையில் உள்ளன. இதற்கு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம்.

முன்னதாக வெளியிட்ட நாணயங்களில், அச்சு மற்றும் எழுத்து பிழைகள், நினைவு ஸ்துாபி, தேசிய தலைவர்கள் படம் சரிந்த நிலையிலும், ஒரு நாணயத்தில் இருமுறை அச்சிடப்பட்டும் வெளிவந்துள்ளன.

ஆனால், முதல் முறையாக, நாணய மதிப்பு, நினைவு ஸ்துாபி, தலைவர்கள் படம், எழுத்துகள், அச்சிட்ட இடம் என, எதுவுமின்றி சில நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவை, பல்வேறு வகையில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், அந்த வகை நாணயங்கள் செல்லாது என அறிவித்து, அவற்றை திரும்பப் பெற, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
17-ஏப்-201712:27:26 IST Report Abuse
kc.ravindran அரசாங்கத்தின்மேல் அவப்பெயர் வரவேண்டுமென்று வேண்டுமென்றே கூட இவ்வகை செயல்கள் நடத்தப்படுகின்றன என்றே எண்ண தோன்றுகிறது. ஒரே ஒரு நபர் மட்டும் இறுதி அச்சிடல் நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியாது. பலமுறை விளக்கங்களும் கேட்டுத்தான் முடிவு எடுக்கப்படுகின்றன. ஒரு ரயில், தண்டவாளத்தை விட்டு இறங்கி ஆபத்திற்குள்ளாகுகிறதென்றால் அ ருகாமையில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் மட்டுந்தான் பொறுப்பாகிவிடமாட்டார். ரயில் மந்திரி வரை பதில் கூறியாக வேண்டும். நோட்டுக்கள் விஷயத்திலும் பல தவறுகள் பொதுமக்களின் கவனத்தில் வன்றிருக்கின்றன.அதிகாரிகள் பொதுமக்களுக்கு தவறு நடந்தமைக்கு சரியான கரணம் என்ன என்று விளக்க கடமை பட்டிருக்கிறார்கள். பொதுமக்களின் ஏளனத்திற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும். இம்மாதிரி கவன குறைவுகள் அல்லது அலட்சிய போக்குகள் தவிர்க்கப்பட்டே ஆகவேண்டும். கவனிக்காகவேண்டியவர்கள் கவனிப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
17-ஏப்-201712:21:52 IST Report Abuse
Amanullah அட பத்து ரூபாய்தானே விடுங்க சார். ஏற்கனவே 2000 மற்றும் ஐநூறு ரூபாய் பணமெல்லாம் பிரிண்ட் இல்லாமல் வந்துவிட்டதே ...
Rate this:
Share this comment
Cancel
Rahim - Jubail,சவுதி அரேபியா
17-ஏப்-201711:24:04 IST Report Abuse
Rahim ஒருநாட்டின் மரியாதை அந்த நாட்டின் ரூபாய் மற்றும் நாணயங்களில் நேய உண்டு ஆனால் உலகிலேயே ரூபாய் நோட்டை மாற்றியும் தரம் குறைந்து அச்சிட்டும் அவமானப்பட்ட ஜனங்கள் நாமாகத்தான் இருப்போம் , நாட்டை எதிர்நோக்கி உள்ள பல்வேறு பொருளாதர சிக்கல்களை களையவல்லது அந்த நாட்டின் ரூபாய் தான் ஆனால் இன்று இங்கு அந்த ரூபாய் நோட்டே படாத பாடு பட்டு சிக்கி சின்னா பின்ன படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X