டிபனுக்கு திண்டாடிய முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டிபனுக்கு' திண்டாடிய முதல்வர்

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (1)

மதுரை:மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு காலை உணவு வழங்குவதில் பெரும் குளறுபடி ஏற்பட்டது.திருச்செந்துாரில் இருந்து மதுரை வந்த முதல்வர் நாராயணசாமி நேற்று மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இதன் பின் 10:50 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகை சென்றார். அப்போது காலை உணவு கேட்டபோது ஏற்பாடு செய்யாதது தெரியவந்தது.காங்., நகர் தலைவர் கார்த்திகேயன், துணை தலைவர் சையது பாபு, இளைஞர் அணி நிர்வாகி முருகன் பதறியடித்து உணவுக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து 11:20 மணிக்கு முதல்வருக்கு உணவு வழங்கப்பட்டது.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: முதல்வர் நாராயணசாமி சென்ற முறை மதுரை வந்தபோது த.மா.கா., நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வந்தார். எங்களுக்கு தெரியவில்லை. இதனால் கட்சிக்குள் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இம்முறை அவர் வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.முதல்வருக்கும், உடன் வந்தவர்களுக்கும், 'காலை உணவு ஏற்பாடு செய்ய வேண்டுமா,' என மதுரை வந்தவுடனேயே நாங்கள் கேட்டோம். ஆனால், 'அரசு விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என உடன் வந்தவர்கள் தெரிவித்ததால் உணவு விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தகவல் தெரிந்தவுடன் சில நிமிடங்களில் ஏற்பாடு செய்தோம், என்றனர்.
என்ன கொடும சார்...வரவேற்பு தாசில்தார் எங்கேகாங்., நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக மற்றும் பிற மாநில முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் மதுரை வருகையில் அவர்களை வரவேற்று, அவர்கள் விரும்பும்பட்சத்தில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்க வரவேற்பு தாசில்தார் (ரிசப்ஷன் தாசில்தார்) பணியில் உள்ளார்.ஆனால் நாராயணசாமியை வரவேற்க அரசு தரப்பில் யாரும் வரவில்லை. அவருக்கு தேவையான உணவும் ஏற்பாடு செய்யவில்லை. அவர் குடிப்பதற்கான தண்ணீர் பாட்டில் கூட வெளியில் தான் வாங்கினோம். இந்நிலையை கவனித்த முதல்வர், பாதுகாப்பு வீரர்கள் 23 பேருக்கான உணவு செலவை அவரே வழங்கினார், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X